பாஸ்கலின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஸ்கலின் விதி (Pascal's law) பாய்மங்களின் அழுத்தத்தைப் பற்றிய விதியாகும். இவ்விதியின் படி முழுவதும் திரவத்தால் நிரப்பப்பட்ட மூடிய கலனில் கொடுக்கப்படும் அழுத்தமானது கலனிலுள் அனைத்து கிடை பகுதியிலும் சம அளவில் இருக்கும். அவ்வழுத்தத்தால் உருவாகும் விசை கலனில் சமபரப்பில் சம அளவில் இருப்பதோடு கலனின் உட்பரப்பிற்கு செங்குத்தாகவும் அமையும். இவ்வழுத்தம் கொள்கலனின் வடிவத்தைப் பொறுத்ததல்ல.[1] இவ்விதி பிரெஞ்சு கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் மற்றும் துவாரகன் என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது.[2]

வரைவிலக்கணம்[தொகு]

நீர், மற்றும் வளியில் அழுத்தம். பாசுக்கலின் விதி பாய்மங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.

பாசுக்கலின் விதி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

மூடிய கலன் ஒன்றில் ஓய்வில் இருக்கும் பாய்மம் ஒன்றின் ஏதாவது ஒரு புள்ளியில் அழுத்தம் மாறும் போது, அவ்வழுத்தம் அதே அளவில் பாய்மத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொடுக்கப்படும்.

இவ்விதி கணித முறையில் பின்வருமாறு தரப்படும்:

என்பது நிலைநீர் அழுத்தம் (அனைத்துலக முறை அலகுகளில் இது பாசுக்கல் அலகில் தரப்படும்), அல்லது பாய்ம நிரல் ஒன்றின் இரு புள்ளிகளில் பாய்மத்தின் நிறியினால் ஏற்படும் அழுத்த வேறுபாடு ஆகும்.
ρ பாய்ம அடர்த்தி (கிலோகிராம் / கனமீட்டர்;
g புவியீர்ப்பினால் ஏற்படும் ஆர்முடுகல் (மீட்டர்/செக்2;
அளக்கப்படும் புள்ளியில் இருந்து பாய்மத்தின் உயரம் (மீட்டரில்).

மேற்கோள்கள்[தொகு]

  1. Bloomfield, Louis (2006). How Things Work: The Physics of Everyday Life (Third Edition). John Wiley & Sons. பக். 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-46886-X. 
  2. Acott, Chris (1999). "The diving "Law-ers": A brief resume of their lives.". South Pacific Underwater Medicine Society journal 29 (1). பன்னாட்டுத் தர தொடர் எண்:0813-1988. இணையக் கணினி நூலக மையம்:16986801. http://archive.rubicon-foundation.org/5990. பார்த்த நாள்: 2011-06-14. .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கலின்_விதி&oldid=3308987" இலிருந்து மீள்விக்கப்பட்டது