பஷ்தூ மொழி
| பஷ்தூ | ||
|---|---|---|
| நாடுகள்: | பாகிஸ்தான்: மேற்கு மாகாணங்கள், ஆப்கனிஸ்தான்: தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகள்.[1] | |
| பகுதி: | தெற்காசியா, மத்திய ஆசியா | |
| பேசுபவர்கள்: | 40-50 மில்லியன்[2] | |
| நிலை: | 82 (வடக்கு), 92 (தெற்கு) |
|
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஈரானியம் ஈரானியம் தென்கிழக்கு ஈரானியம் பஷ்தூ |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ஆப்கனிஸ்தான் (தேசிய மொழி) பாகிஸ்தான் (மாகாண மொழி) |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | ||
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ps | |
| ISO 639-2: | pus | |
| ISO/FDIS 639-3: | பலவாறு: pus — பஷ்தூ (பொது) pst — மையப் பஷ்தூ pbu — வடக்குப் பஷ்தூ pbt — தென் பஷ்தூ |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானிலும், மேற்குப் பாகிஸ்தானிலும் வாழும் பாஷ்தூன் இனத்தவரால் பேசப்படும் மொழியாகும்.
வகைப்பாடு [தொகு]
இம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானியப் பிரிவின் தென்கிழக்கு ஈரானிய மொழிக் குழுவைச் சேர்ந்தது. சாரிக்கோலி, வாக்கி, முஞ்சி, ஷுக்னி போன்ற மொழிகளும் இக் குழுவைச் சேர்ந்த மொழிகளாகும். ஈரானிய மொழிகள் பிரிவைச் சேர்ந்த பாரசீக மொழி, குர்தி மொழி, பலுச்சி மொழி, கிலாக்கி மொழி என்பனவும், காக்கேசியப் பகுதியில் பேசப்படும் ஒசெட்டிக் மொழியும் பஷ்தூ மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ளவை.
புவியியற் பரம்பல் [தொகு]
பஷ்தூ, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணம் மற்றும் பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளிலும் குறைந்த அளவில் வடக்குப் பகுதியிலும் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர். வடகிழக்கு ஈரானிலும் சிறிய சமுதாயங்களாக இம் மொழியைப் பேசுவோர் காணப்படுகின்றனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ ஆஸ்டினிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் - ஆப்கனிஸ்தானிலுள்ள இனஞ்சார் மொழிக் குழுக்கள்...Link
- ↑ பாஷ்தூ மொழிக்கான எத்னோலாக் அறிக்கை