பாலைக்குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலைக்குளி என்பது இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இது மன்னார், புத்தளம் மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமாகும். இதன் வடக்கே கொண்டச்சியும் கிழக்கே வியாயடி குளமும், வில்பத்து சரணாலயமும் அமைந்துள்ளன. தெற்கே மறிச்சிக்கட்டியும், ஊர்கமமும் அமைந்துள்ளன. அதன் மேற்கே மன்னார் – புத்தளம் வீதியும் உள்ளது.

இது 400 குடும்பங்களைக் கொண்ட கிராமம். இம் மக்கள் தமது வருமானத்தை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வியாபாரம் வழியாக பெறுகின்றனர். இவர்களது பிரதான தொழிலாக விவசாய செய்கை காணப்படுகிறது.

2010ம் ஆண்டு நடைபெற்ற முசலி பிரதேசசபைத் தேர்தலில் இக்கிராமத்தைச் சேர்ந்த எம். எச். எம். காமில் நான்காம் இடத்தைப் பெற்று சபை உறுப்புரிமை பெற்றார்.


சுற்றுலாத்துறைக்கு ஒரு சுந்தர பூமி பாலைக்குழி


மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமே பாலைக்குழி.

கடந்த காலங்களில் தென்னிலங்கை அரசியலை தக்க வைக்க நாட்டின் பேசு பொருளாகவும் பல தலைகளுக்கு அரசியல் ஆயுளை அதிகரிக்க செய்த பிரதேசமும் இதுவாகும்.

பொன்பரப்பியின் மருங்கிலும் அழகிய வில்பத்தின் அண்மையிலும் அமையப்பெற்ற இக்கிராமம் முஸ்லிம்கள்  பூர்வீகமாக வாழ்ந்த வாழும் பகுதியாகும்.

கடல், கரை ,காடு ,நதி, கனிமம் என எல்லா வளங்களும் கொட்டி கிடக்கும் ஒரு சொர்க்கபுரி.டச்சு  கால கடற்கரை கோரி,கொழும்பு மன்னார் வீதி இலவங்குளம் ஊடாக போன்ற வரலாற்றை பறை சாற்றும் சுவடுகளும் ஏராளம்.

கடல் வளம் கொழிக்கும் இப்பகுதியின் கடற்கரை சுத்தமான மாபிள் கடற்கரையை கொண்டதாகும்.

வியாயடித்தேக்கம் ,அதற்கான காபட் பாதைகள் ,இரு மருங்கிலும் காணப்படும் அளைகள்,குட்டிக்குட்டி குளங்கள் இந்த பிரதேசத்தின் அழகை மேலும் முறுக்கேற்றுகிறது.

என்ன துரதிஷ்டவசமானது இந்த பகுதி இன்னும் அரசியல் தலைமைகளுக்கும்,தேசத்திற்கும் தீண்டாமையாகவே இருக்கிறது.

நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும் தலைமைகள் கட்டாயமாக இந்த பிரதேசத்தை சுற்றுலாத்துறையின் சொர்க்கபுரியாக மாற்ற முன்வர வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைக்குழி&oldid=3398426" இலிருந்து மீள்விக்கப்பட்டது