பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள் (Faraday's laws of electrolysis) மைக்கேல் பரடே என்பவரினால் 1834 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டவை.
[தொகு] முதல் விதி
மின்னாற்பகுப்பின் போது மின்வாயில் வெளிப்படும் பொருளின் நிறையானது (அல்லது திணிவு, m) மின்பகு திரவத்தின் வழியே பாயும் மின்னூட்டத்திற்கு (Q) நேர்த்தகவில் அமையும்.
- m = z Q;
- இங்கு, z - வெளிப்படும் பொருளின் மின் வேதிய எண்.
[தொகு] இரண்டாவது விதி
ஒரே அளவு மின்னூட்டம் மின்பகு திரவங்களின் வழியே பாயும் போது அதனால் மின்வாய்களில் வெளிப்படும் பொருள்களின் நிறை (அல்லது திணிவு, m) அத்தனிமங்களின் வேதிய இணைமாற்றுக்கு (E) நேர்த்தகவில் அமையும்.
- m α E