பாப்பிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாப்பிலான்  
PapillonBook.jpg
ஆங்கிலப் பதிப்பின் முதல் பக்கம்
எழுதியவர் {{{எழுதியவர்}}}
Genre(s) தன்வரலாறு நாவல்
Publisher நர்மதா பதிப்பகம் (தமிழில்)
Published in
English
சனவரி, 1970

ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் (Papillon) அதாவது பட்டாம்பூச்சி என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த இந்த தன்வரலாற்று புத்தகம். பின்னர் ஆங்கிலத்தில் ஜூன். பி. வில்சன் & வால்டேர். பி. மைகேல் என்பவர்களால் 1970 இல் மொழிபெயர்க்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகியது.

ரா. கி. ரங்கராஜன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "பட்டாம்பூச்சி" குமுதத்தில் தொடராகவும் வெளியாகி வந்தது நூலாக வந்துள்ளது. சுமார் 800 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு. பட்டாம்பூச்சி படும் கஷ்டங்களும், அவனது தீராத சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை அவன் எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் அவன் மனத் துணிவும், யார்க்கும் பணியாத அதே சமயம் யாரையும் பகைத்துக் கொள்ளாத சாமர்த்தியமும் வியக்க வைக்கிறது.

இந்த நூல் காதல், வீரம், சுதந்திரம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய மிகச் சிறந்த காவியம். நர்மதா பதிப்பகம் மூலமாக இப்புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் திரைப்படமாகவும் வந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பிலான்&oldid=1466311" இருந்து மீள்விக்கப்பட்டது