பாப்பாவினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாப்பாவினம் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது பாக்களையும் பாவினங்களையும் பற்றிக் கூறுகிறது. இதனாலேயே இதற்குப் பாப்பாவினம் (பா + பாவினம்) என்னும் பெயர் ஏற்பட்டது. இதற்கு மாறன் பாப்பாவினம் என்ற பெயரும் வழங்குகிறது. மாறனலங்காரம் (அணி), மாறன் அகப்பொருள் (பொருள்) ஆகிய நூல்களை இயற்றிய திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரே இதனையும் இயற்றினார் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. எனினும் இதனைக் காரி இரத்தின கவிராயர் என்பவர் இயற்றினார் என்ற கருத்தும் நிலவுகின்றது[1]. நூலாசிரியரின் ஏனைய இரண்டு நூல்களைப் போலவே இதுவும் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது.

இலக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கண நூல்களையும் சமயப் பரப்புரைக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு, வைணவத்தின் பெருமை கூறும் இந்நூல் சான்றாக விளங்குகிறது.

அமைப்பு[தொகு]

இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொடுத்து அவற்றுக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்தது இந்நூல்.

  1. வெண்பா,
  2. ஆசிரியப்பா,
  3. கலிப்பா,
  4. வஞ்சிப்பா

என்னும் பாவகைகள் நான்கு,

  1. வெண்பாவினம்,
  2. ஆசிரியப்பாவினம்,
  3. கலிப்பாவினம்,
  4. வஞ்சிப்பாவினம் என்னும் அவற்றின் பாவினங்கள் நான்கு என்பவற்றுடன்
  5. மருட்பாவுக்குமாக 135 எடுத்துக்காட்டுப் பாடல்கள் தரப்பட்டுள்ளன. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து பரிபாடல்களையும் சேர்த்து மொத்தம் 140 பாடல்கள் இந்நூலில் உள்ளன. ஒவ்வொரு எடுத்துக்காட்டுப் பாடலுக்கும் பின்னர் அது பற்றிய விபரங்களைக் கொடுத்து அவற்றின் இலக்கணத்தைக் கூறுவது இந்நூலின் சிறப்பு ஆகும்[2].

குறிப்புகள்[தொகு]

  1. இளங்குமரன், 2009. பக். 353.
  2. இளங்குமரன், 2009. பக். 354.

உசாத்துணைகள்[தொகு]

  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
  • இராமானுசையங்கார், கி. (பதிப்பாசிரியர்), பாப்பாவினம், மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை. 1932.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பாவினம்&oldid=3300443" இலிருந்து மீள்விக்கப்பட்டது