பான்டு மொழிகள்
| பான்டு | ||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | ||
| பேசுபவர்கள்: | ||
| மொழிக் குடும்பம்: | நைகர்-கொங்கோ அத்லாந்திக்-கொங்கோ வோல்ட்டா-கொங்கோ பெனூ-கொங்கோ பாண்டோயிட் தெற்கத்திய பாண்டோயிட் பான்டு |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | bnt | |
| ISO/FDIS 639-3: | — | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பான்டு மொழிகள் நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளின் குழுமம் ஆகும். உண்மையில் பான்டு மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் துணைக் குழுவான பான்டோயிட் குழுமத்தின் ஒரு பகுதியாகும். பான்டு மொழிக் குழுவில் 513 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே கணக்கீட்டின்படி, பான்டோயிட் குழுமத்தில் 681 மொழிகளும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில் 1514 மொழிகளும் உள்ளன[1].
பான்டு மொழிகள் தற்கால நைஜீரியாவுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, மத்திய ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பான்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன.
பான்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக் (1827-1875) என்பவராவார். இது மக்கள் என்னும் பொருள் தருவது.