பாத்தர்ஸ்ட் தீவு, ஆஸ்திரேலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாத்தர்ஸ்ட் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாத்தர்ஸ்ட் தீவு
Bathurst
புவியியல்
அமைவிடம்திமோர் கடல்
ஆள்கூறுகள்11°35′S 130°18′E / 11.583°S 130.300°E / -11.583; 130.300
தீவுக்கூட்டம்டிவி தீவுகள்
முக்கிய தீவுகள்பாத்தர்ஸ்ட், பியூக்கனன்
நிர்வாகம்
ஆஸ்திரேலியா
Territory வட ஆட்புலம்
பெரிய குடியிருப்புNguiu (மக். 1582)
மக்கள்
மக்கள்தொகை1640

பாத்தர்ஸ்ட் தீவு (Bathurst Island, 2,600 சதுர கிமீ அல்லது 1,000 சதுர மைல்[1], 11°35′S 130°18′E / 11.583°S 130.300°E / -11.583; 130.300) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் வடக்கே அமைந்துள்ள டிவி தீவுகளில் ஒன்றாகும். பாத்தர்ஸ்ட் பிரபு என்றி பாத்தர்ஸ்ட் என்பவரின் நினைவாக இத்தீவிற்கு பாத்தர்ஸ்ட் தீவு எனப் பெயரிடப்பட்டது. (கனடாவில் உள்ள பாத்தர்ஸ்ட் தீவும் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது). இங்கு பழங்குடிகளான டிவி மக்கள் வாழ்கின்றனர்.

1910 முதல் 1938 வரையான காலப்பகுதியில் இங்கு ரோமன் கத்தோலிக்க மிசனறியான பிரான்சிஸ் சேவியர் கிசெல் என்பவர் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் "150 மனைவிகளின் ஆயர்" என அழைக்கப்படுகிறார். இவர் இங்கு தங்கியிருந்த காலப்பகுதியில் பழங்குடியினரின் வழக்கப்படி முதியவர்களுக்கு வாழ்க்கைத்துணையாகக் காத்திருந்த இளம் பெண்களை விலைக்கு வாங்கி அவர்களை ஒத்த வயது ஆண்களுக்குத் திருமணம் செய்வித்தார்.

பாத்தர்ஸ்ட் தீவின் பழங்குடிகள்

பாத்தர்ஸ்ட் தீவின் மிகப்பெரும் குடியேற்றப்பகுதி "நியூ" (Nguiu). இங்கு 1,450 பேர் வசிக்கின்றனர்[2]. இது இத்தீவின் தென்கிழக்கு முனையில் டார்வின் நகரில் இருந்து 70 கிமீ வடக்கே அமைந்துள்ளது. இரண்டாவது பெரும் நகரம் "வுரக்கூவு". இங்கு 50 பேர் வாழ்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக "4 மைல் முகாம்" என்ற இடத்தில் ஒரு குடும்பம் வாழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]