பள்ளிக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(பாடசாலை இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாடசாலை என்பது பாடங்களைப் பயிற்றுவிக்கும் இடம் எனப் பொருள்படும். பள்ளி, பள்ளிக்கூடம் போன்ற சொற்களும் பாடசாலைக்குச் சமமாகப் பரவலான பயன்பாட்டில் உள்ளன. பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள். இந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garten), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garten), மற்றும் ஒன்று தொடக்கம் 12 ஆம் வகுப்புக்கள் உட்படப் 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது. இலங்கையில் பொதுவாக முதலாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளில் உண்டு.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்