பாசுபரசுத் தாடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசுபரசுத் தாடை (phosphorus necrosis of the jaw) அல்லது ஃபாசி தாடை (phossy jaw) பணி சார்ந்த பிணிகளுள் (occupational diseases) ஒன்று. தற்போது ஒழிக்கப்பட்டு விட்டது.

19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வெள்ளை பாசுப்பரசு தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு வசதிகளேதுமின்றிப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வெண்பாசுப்பரசு நச்சு மனித எலும்புகளில், குறிப்பாகத் தாடையில் சிறுகச்சேர்ந்து தாடையைச் சிதைத்துச் சீழ்க்கட்டியை உண்டு செய்கிறது. மூளையும் பாதிக்கப்படும். அறுவை மருத்துவம் மூலம் பாதிக்கப்பட்ட தாடையை அகற்றாவிடில் உறுப்புத் தோல்விநிலை (organ failure) ஏற்பட்டு இறக்க நேரிடும்.

நோயின் அறிகுறிகள்[தொகு]

முதலில் பல்வலி ஏற்படும். ஈறுகளில் வீக்கமுண்டாகும். தாடைகளில் சீழ்க்கட்டி உண்டாகி முக அமைப்பு கெடுவதுடன் கெட்ட நாற்றமடிக்கும் சீழ் வெளிவரும்.

இதனால் வெண்பாசுப்பரசின் பயன்பாடு தடை செய்யப்பட்டு நோயும் ஒழிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபரசுத்_தாடை&oldid=3664034" இலிருந்து மீள்விக்கப்பட்டது