பழனி மலைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பழனி மலைகள் | |
|---|---|
கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் பழனி மலைகள் |
|
| உயரம் | 2,500 மீ (8,202 அடி) (Highest) |
| இட அமைவு | |
| இட அமைவு | தமிழ் நாடு |
| மலைத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
| ஆயக்கூறுகள் | |
| ஏற்றம் | |
| எளிதாக ஏறும் வழி | மா.நெ 156 |
பழனி மலைகள் என்பது தமிழ் நாட்டில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு நோக்கிய நீட்சியாக உள்ளது. இதன் மேற்கு பகுதியில் ஆனை மலை உள்ளது. கிழக்கு பகுதியில் தமிழ் நாட்டு சமவெளி உள்ளது. இதன் பரப்பு 2,068 சதுர கிமீ ஆகும். இதன் உயரமான பகுதிகள் தென் மேற்கே உள்ளன அங்கு இவற்றின் உயரம் 1,800-2,500 மீட்டர் (5,906-8,202 அடி). கிழக்குப்பகுதியில் மலையின் உயரம் 1,000-1,500 மீட்டர் (3,281-4,921 அடி) ஆகும். இதன் தென் பகுதியில் வைகை ஆறு பாயும் கம்பம் பள்ளத்தாக்கும் வட பகுதியில் கொங்கு நாடும் உள்ளன. இம்மலையின் பெரும்பாலான பகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்திலேயே உள்ளன. இதன் மேற்கு பகுதி தேனி மாவட்டத்திற்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ளது. புகழ் பெற்ற மலை நகரமான கொடைக்கானல் இதன் தென் நடுப்பகுதியில் உள்ளது.