பல் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பல்மருத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அறிமுகம்

பல்மருத்துவம் என்பது பல் உள்ளிட்ட, வாய்ப்புறம் சார்ந்த நலன் மற்றும் நோய்கள், உடல் நலனுக்கும், வாய்ப்பகுதிக்குமான இத்தகைய தொடர்புகள் பற்றிய மருத்துவ அறிவியலாகும். இது பற்கள், பல்தாங்கு பகுதிகள், தாடை மற்றும் உள்ள பிற மென்திசுக்களின் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் செய்கிறது.

வரலாறு

பல்மருத்துவம் பற்றிய குறிப்புகள் வரலாற்றுக்கு முந்தய காலத்தில் இருந்தே பல நாகரிங்களில் இடம்பெற்றுள்ளது. கி.மு.5௦௦௦ ஆண்டு சமயத்தில் பல்புழு பற்றி சுமேரிய நாகரிகக் குறிப்புகள் தெரிவிகின்றன. கி.மு.26௦௦ காலத்தில் வாழ்ந்த ஹெசி ரே என்பவர் இதுவரை அறியப்பட்ட முதல் பல்மருத்துவராக உள்ளார். அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட அவரது கல்லறையில் ‘பல் மற்றும் மருத்துவம் செய்தவர்களில் மிகச் சிறந்தவர்’ என்ற வாசகம் உள்ளது. கி.மு.1700-1550 காலத்திய எகிப்தியரான எபர்ஸ் பேப்பிராஸ் என்பவர் பல் நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றிய குறிப்புகளை எழுதிஉள்ளார். கி.மு.1௦௦-இல் ரோமைச் சேர்ந்த செல்சஸ் என்பவர் பல்மருத்துவ சிகிச்சை பற்றிய விரிவான குறிப்புகளை எழுதி உள்ளார். சீனர்களின் குறிப்புகள் வெள்ளிக்கலவை பல்அடைக்கப் பயன்பட்டதை உணர்த்துகின்றன. ஐரோப்பாவில் ரோமானிய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு அனைத்து மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சைகளும் தேவாலயங்களில் உள்ள பாதிரியார்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முகச்சவரம் செய்ய வந்தவர்கள் அவர்களுக்கு இச்செயல்பாடுகளில் துணை செய்தனர். கி.பி.1163 இல் வெளியிடப்பட்ட தேவாலயக் குழும அறிக்கையானது, தேவாலயங்களில் ரத்தம் சிந்துவதை தடை செய்யும் பொருட்டு, அறுவைசிகிச்சைகளை தேவாலயங்களில் மேற்கொள்வதை தடை செய்தது. இறுதியில் அறுவைசிகிச்சை பற்றிய சிறிதேனும் அறிவு கொண்ட சவரம் செய்பவர்களால் அது மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் காலப்போக்கில் தங்களை அறுவைசிகிச்சைமருத்துவராக வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதன் விளைவாக ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்’ உருவானது. 153௦ ஆம் ஆண்டு ஆர்ட்ஷ்னி புச்லெய்ன் என்பவர் ஜெர்மானிய மொழியில் ‘அனைத்து வகை பல் நோய் மற்றும் நலக்குறைவுக்கான சிறிய மருத்துவப் புத்தகம்’ ஒன்றை வெளியிட்டார். அறுவைமருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் ஆம்ப்ரோஸ் பார், தனது நூலில் பல்நீக்கம், தாடை முறிவு ஆகியவற்றைப் பற்றி பல குறிப்புகளைக் கூறியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் நவீன பல்மருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் பிரான்சைச் சார்ந்த பியேரே பௌச்சர்ட் பல்மருத்துவத்தின் அனைத்து மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ஒரு நூலினை வெளியிட்டார். இது பல்மருத்துவ சிகிச்சைகளை அதுவரை இணைந்திருந்த அறுவைமருத்துவதிலிருந்து பிரித்து வெளியிடப்பட்டிருந்தது. 1771 இல் நவீன அறுவைமருத்துவத்தின் தந்தை என அறியப்படும் ஜான் ஹன்டர், தனது ‘மனித பல்லின் இயற்கை வரலாறு’ என்ற நூலில் பல்லின் கூறமைப்புகளை விளக்கயுள்ளார். இவர் பற்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுப்பதிப்பதில் (transplantation) முன்னோடியாகத் திகழ்ந்தார். இது வெற்றி பெறாத சூழலிலும், இதுவே ஒரு மனிதத் திசுவை மற்றொரு மனிதனுக்குப் பதிக்கும் முதல் முன்னோடி சிகிச்சை முறையாக இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் கைவினைஞர்களால் பல்மருத்துவம் பின்பற்றப்பட்டது. இவர்களில் ஒருவரான ஐசக் கிரீன்வுட் அமெரிக்காவில் பிறந்த முதல் பல்மருத்துவராகக் கருதப்படுகிறார். இவரது மகன்களில் ஒருவரான ஜான் க்ரீன்வுட், ஜார்ஜ் வாஷிங்டனின் பல் மருத்துவராக இருந்துள்ளார். இவர் காலால் சுழலும் உளியினை, பற்சிதைவினை நீக்க முதலில் வடிவமைத்தார். ஜேம்ஸ் மோரிசன் இவ்வகை காலால் சுழலும் உளிக்கு முதலில் காப்புரிமை பெற்று அதனை வர்த்தக அளவில் கொண்டு வந்தார். 1844 இல் அமெரிக்காவின் பல் மருத்துவரான ஹோர்ஸ் வெல்ஸ் என்பவர் நைட்ரஸ் ஆக்சைடின் மயக்கநிலைப் பண்புகள் பற்றி முதலில் கண்டறிந்தார். இருப்பினும் பல் நீக்கத்தின் அவரது சோதனை, பொதுமக்கள் முன் நிகழ்த்தப்படும் போது தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்பவர் ஈதர்-ன் மயக்கப்பண்புகள் பற்றி 1846 இல் வெளிப்படுத்தினார். இருப்பினும் முதல் மயக்கமருந்தினைக் கண்டறிந்ததற்கான அங்கீகாரம் ஹோர்ஸ் வெல்லுக்கே பின்னர் வழங்கப்பட்டது. போன்சி என்பவர் முதல் வெண்மண் பாகைகளை (porcelain crown) உருவாக்கினார். இது அதுவரை புழக்கத்தில் இருந்த பல்மருத்துவதில் புதிய அழகுணர்வைச் சேர்த்தது. சாமுவேல் ஸ்டாக்சன் இதனை வர்த்தக அளவில் பிரபலப்படுத்தினார். அமெரிக்காவின் மில்லர், பற்சிதைவானது பாக்டீரியாக்களின் செயலினால் உருவாகிறது எனக் கண்டறிந்தார். அதுவரையிலும் இது புழுக்களாலும், உடலின் திரவச் சீரின்மையாலும் நிகழ்கிறது என பல நம்பிக்கைகள் இருந்தன. 184௦ ல் உலகின் முதல் பல்மருத்துவக்கல்லூரியான பல்டிமோர் கல்லூரி உருவாக்கப்பட்டது. 1895 ல் ரான்ட்ஜென் கண்டுபிடித்த x கதிர் மருத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. எட்மண்ட் கேல்ஸ் என்பவர் 1896 ல் முதல் பல் ஊடுகதிர் படத்தை எடுத்தார். பல் சீரமைப்புத் துறைக்குப் பெரும் பங்காற்றிய ஆங்ள், அத்துறையை பல் மருத்துவத்தின் முதல் தனிப்பிரிவாக உருவாக்கினார். அவர் முதல் பல் சீரமைப்புக்கான கல்லூரியை 19௦௦ ல் நிறுவினார். முதல் பல்சீரமைப்பிறகான தனி இதழையும் (அமெரிக்கன் ஆர்தொடாண்டிஸ்ட், 1907) நிறுவினார். 188௦ களில் பிதுக்கு குழாய்கள் அறிமுகத்திற்குப் பிறகு அதுவரை திரவமாகவும், பொடியாகவும் இருந்தவை, பற்பசைகளாக வெளிவர ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து 1938 ல் அறிமுகமான நைலான் தூரிகைகளும் பல் சுகாதாரத்தை பெரிதும் மேம்படுத்தின.

பல் வகைகள்

1. வெட்டுப்பல் (Incisor) 2. சிங்கப்பல் (Canine) 3. முன்கடைப்பல் (Premolar) 4. கடைப்பல் (Molar)

பல் குறியீட்டு முறைகள்

a) சிக்மான்டி பாமர் முறை b) எப் டி ஐ முறை c) பொது முறை

பல் முளைத்தல் காலம்

a) பால் பல் b) நிலைப்பல்

பற்கூரமைப்பு

A. பாகை (Crown) B. வேர் (Root)

        அடுக்குகள்

1. வெண்ணடுக்கு (Enamel) 2. மஞ்சள் அடுக்கு (Dentin) 3. உட்திசு (Pulp)

பற்சூழமைப்பு

a) ஈறு (Gingiva) b) பற்சூழ் மென்திசு (Periodontal ligament) c) துளை எழும்பு (Alveolar bone)

வாய் கூரமைப்பு

a) நாக்கு (Tongue) b) தாடை (Jaw) c) அன்னம் (Palate) d) டான்சில் (Tonsil) e) உதடு மற்றும் கன்னம் (Lip & Buccal mucosa) 9. பல்மருத்துவ சிகிச்சைகள் a) வாய்நோய் கண்டறிதல் (Oral diagnosis) b) பல் துப்புரவு (Scaling) c) ஆழ் துப்புரவு (Root planning) d) பல் அடைப்பு (Tooth restoration) e) ஈறு அறுவை சிகிச்சை* (Gingival flap surgery) f) ப்ளுரைட் பூச்சு (Fluoride application) g) வேர் சிகிச்சை* (Root canal treatment) h) பாகை பொருத்தல் (Crown placement) i) பல் வெளுத்தல் (Dental bleaching) j) செயற்கைப்பல் பொருத்துதல் (Prosthetic replacement) k) பல் மற்றும் தாடை சீரமைப்பு* (Orthodontic treatment) l) பல் நீக்கம் (Tooth extraction) m) எலும்புஊடு பல் நீக்கம்* (Trans-alveolar extraction) n) தடுப்பு ரெசின் நிரவுதல் (Preventive resin restoration) o) அன்னம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை* (Orthognathic surgery, Cleft lip & Palate repair, Cyst & Tumor removal, Fracture reduction & fixation)

        * சிறப்புத்துறை சார்ந்த சிகிச்சைகள். ஏனையவை பொது பல்மருத்துவ சிகிச்சைகள்.

இந்தியாவில் பல்மருத்துவப் பட்டயம்

a) இளநிலை (Bachelor of Dental Surgery) b) முதுநிலை (Master of Dental Surgery)

பல்மருத்துவப் பிரிவுகள்

1. வாய்நோயறிதல் பிரிவு (Oral medicine & Radiodiagnosis) 2. குழந்தைகள் பல்நோய் பிரிவு (Pedodontics) 3. திசு ஆய்வு துறை (Oral & Maxillofacial pathology) 4. சமூக வாய்நோய் தடுப்பு துறை (Preventive & Community dentistry) 5. ஈறுநோய் பிரிவு (Periodontics) 6. செயற்கை பல் மற்றும் முக அமைப்பு துறை (Oral & Maxillofacial prosthodontics) 7. பல் மற்றும் தாடை அறுவைசிகிச்சை துறை (Oral & Maxillofacial surgery) 8. வேர் சிகிச்சைப் பிரிவு (Endodontics & Conservative dentistry) 9. பல் மற்றும் தாடை சீரமைப்புப் பிரிவு (Orthodontics & Dentofacial orthopaedics)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பல்_மருத்துவம்&oldid=1648687" இருந்து மீள்விக்கப்பட்டது