நித்தியானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பரமஹம்ஸ நித்யானந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நித்தியானந்தர்
பிறப்பு சனவரி 1, 1978 (1978-01-01) (அகவை 34)
திருவண்ணாமலை, தமிழ் நாடு
பட்டம் பரமகம்சர்
இணையதளம்
www.dhyanapeetam.org

நித்தியானந்தர் (பிறப்பு ஜனவரி 1,1978) தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார்.

நித்தியானந்தரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளாக பின்வருவன அவரது அமைப்பு சார்ந்த தரவுகளால் முன்வைக்கப்படுகின்றன:

தனது பன்னிரண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் புத்த பூர்ணிமா அன்று மே 31,1990 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடந்தார்[மேற்கோள் தேவை]. பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவிராஜக வாழ்க்கையினைத் தொடர்ந்தார். இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்தார். திபெத் வரை சென்ற நித்தியானந்தர் இமயமலையில் பல கடுமையான தவ நிலையின் பின்னர் ஞான அனுபூதி முக்தி (எனும் பேரானந்த நிலையினை சனவரி 1, 2000 ஆண்டு அடைந்ததாகவும், தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை சனவரி 1, 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தும் வைத்தார்.

இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொருளடக்கம்

[தொகு] குற்றச்சாட்டு

தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் சுவாமி நித்தியானந்தா பாலியல் உறவு கொண்டிருந்த காணொளியை 2010, மார்ச் 2 இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது[1]. இவரைப் பற்றிய நிகழ்படம் வெளியானவுடன் இவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் பதுங்கியிருந்த சுவாமி நித்தியானந்தரை கர்நாடக காவல்துறை ஏப்ரல் 21, 2010 அன்று கைது செய்தது. அப்போது அவரிடம் மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாயிரம் டாலர் பயண காசோலையும் இருந்தது.

[தொகு] மதுரை ஆதீனமாகப் பொறுப்பேற்பு

மதுரையிலிருக்கும் மதுரை ஆதீனம் மடத்தில் மதுரை 292 ஆதீனமாக இருப்பவர் நித்தியானந்தரை தனது வாரிசாகவும் 293 வது மதுரை ஆதீனமாகவும் அறிவித்தார். இதன்படி கடந்த ஏப்ரல் 29 2012 அன்று மதுரை ஆதீனம் மடத்தில் ஆதீன வழக்கப்படி 292 வது ஆதீனமாக இருப்பவர் நித்தியானந்தருக்கு 293 வது மதுரை ஆதீனமாக நியமித்ததற்கு அடையாளமாக அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை, தலைக்கவசம் போன்றவைகளை அணிவித்தார். மதுரை ஆதீனமாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நித்தியானந்தர் 292 வது மதுரை ஆதீனத்துடன் இணைந்து செயல்படுவதுடன் இனி அவர் “மதுரை ஆதீனம் 293- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என அழைக்கப்படுவார்.[2]

[தொகு] வழக்கு


[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=6659&id1=12
  2. மதுரை ஆதீனம் பொறுப்பை ஏற்றார் நித்யானந்தர் (தினமணி)

[தொகு] வெளி இணைப்புகள்

பிடதி ஆசிரமத்தில் உள்ள ஆலமரத்தையும் மற்ற பிற ஆலயங்களையும் பின் வரும் சுட்டியில் நேரலையில் காணலாம்:

"http://ta.wikipedia.org/w/index.php?title=நித்தியானந்தர்&oldid=1097133" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்