பயனர் பேச்சு:Vij/ஆரியர்/ஆரியர் - விஜயராகவனின் கட்டுரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஆரியர் தொடர்பான தற்காலக் கருத்துக்களை முழுமையாகத் தரவில்லை. 100% ஒரு பக்கச் சார்பான கட்டுரை. Mayooranathan 16:32, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஒருபக்கச் சார்பானது மட்டுமல்ல, விக்கிபீடியா நடைக்கு ஒவ்வாததாகவும் உள்ளது. நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 16:53, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
ஒரு தெளிவான நோக்கத்துடன் வரலாற்றை ஒருபக்கச் சார்பாக முன்னிறுத்துகிறது இக்கட்டுரை. விக்கிபீடிய நடுநிலைக் கொள்கைக்கு எதிரானது. ஐதீகங்களையும் கட்டுக்கதைகளையும் முன்னிறுத்தி, தகவல்களை மறைத்து உருவாகிறது. கொள்கை பரப்புவதற்கான இடம் விக்கிபீடியா அல்ல. --கோபி 16:59, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
கோபி, ஆதரம் இல்லாமல் குற்றம் சாட்டுகிறீர்களே. ஆரியர் பற்றிய தகவல் வேதங்களிலும், உபனிஷத் போல வேதம் மறுவிய கால இலக்கியங்களில் இருந்து கிடைக்கிரது . அதை மொழியியல், சமுதாயயியல் இவற்றால் கூறு படுத்தி, ஆரியர், ஆரிய சமுதாயத்தை பற்றி ஒரு எடையீடு போடுகிரோம். இதில் தவறே இல்லை. - விஜய்

கட்டுரைத் தலைப்பு அவசியம். ஆனால், தற்பொழுது உள்ள கட்டுரையை எழுதிய விஜய் பிறப் பார்வைகளையும் பதிவு செய்ய முயல வேண்டும். உண்மை என்று ஒரு சாரார் மட்டும் கருதுவதை விக்கிபீடியாவில் இட முடியாது. இக்கட்டுரையை விக்கியாக்கம் செய்வது திணற அடிக்கும் வேலை. கட்டுரையின் நடுநிலைமையையும் நடையையும் விஜயோ பிறரோ மேம்படுத்தித் தராத பட்சத்தில் நீக்கப் பரிந்துரைக்கிறேன்--Ravidreams 17:20, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவிட்ரீம் , "ஒரு சாரார் மட்டும் கருதுவதை" என்கிறீணர்கள் - அது என்ன சாரார்? நான் எவ்வளவு அப்ஜெக்டிவ்வாக எழுத முடியுமோ, அவ்வளவு அப்ஜெக்டிவ்வாக எழுதியுள்ளேன். நான் சொல்வதில், என்ன சாயல் இருக்கிரது என தெளிவு படுத்துங்கள்.

முழுப்பக்க கட்டுரையை தந்துவிட்டு, கட்டுரையின் முடிவில் சுட்டிகளை மட்டும் தந்தால் உங்கள் கருத்துக்களை எப்படி எங்கு போய் சரி பார்ப்பது? அறிவியலில் review article என்று எழுதப்படுபவை போல் ஆரியர்களை பற்றிய ஒரு review article எழுத முற்பட்டிருக்கிறீர்கள். இம்மாதிரி கட்டுரைகளில் வரிக்கு வரி , கருத்துக்கு கருத்து முறையான ஆதாரங்களுக்கு இணைப்பு தரப்பட வேண்டும். வரலாறு விளையாட்டு இல்லை ! ஒரு சாரார் யார் - அவர்கள் அடையாளம் என்ன என்ற விவாதத்துக்கு நாம் செல்ல வேண்டாம். நீங்கள் கூறும் அனைத்துக் கருத்துக்களுக்கும் மாறான கருத்துக்களை கொண்ட இன்னொரு சாரார் இருப்பார்கள் இல்லையா, அவர்களிலும் மதிக்கத்தக்க அறிஞர்கள் இருப்பார்கள் இல்லையா? அவர்கள் கருத்தையும் மேற்கோள் காட்டுவது கட்டுரையின் நடுநிலைமைக்கு அவசியம். அறிவியல், கணிதத்தில் மட்டும் தான் முடிந்த முடிவு என்று சில விதிகள், உண்மைகள் இருக்க முடியும். வரலாற்றில் அல்ல. எனவே, மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள். தயவு செய்து, கட்டுரையை பதிவு ஏற்றுவதற்கு முன்பே பிழை களைந்து எழுதுங்கள்.--Ravidreams 18:20, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


விஜைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். ஒரு பயனர் பக்கத்தை உருவாக்குங்கள். மேலும் விக்கிபீடியா எழுதிப் பழகும் இடம் அல்ல. வரிக்கு வரி எழுத்துப் பிழைகளுடனிருக்கும் இக்கட்டுரையை வாசிக்கப் பெரும்பாடாயிருக்கிறது. ஆரியத் தமிழில் எழுதுகிறீர்கள் போலும் :-) --கோபி 17:29, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
கோபி - பிழைகளை தவிர்க்க வேண்டியது அவசியம்தான், ஒத்துக்கொள்கிரேன். ஆரிய கலாசாரத்தை பற்றி தமிழில் எழுத கிரந்த எழுத்துகள் மிக உதவுகிரன. அதனால் கிரந்த எழுத்தை உபயோகித்து, வேத வார்த்தைகளை சரியான பேச்சு மொழியாக எழுதுவதில் தவறு இல்லை என்கிரேன். இன்னும் சில நாள் கொடுங்கள்; எல்லா தவறையும் எடுத்து கட்டுரையை பதம் பார்க்கிரேன்.- விஜய்

//ஆரியர் என்ற தமிழ் எழுத்தே ஒரு குறிப்பிட்ட மனித சமுதாயத்தை குறிக்கிறது.//

நான் பதம் என்றும் எழுதியிருக்கலம். ஆனால் இந்ஙே 'சொல்' தவரில்லை - நான் 'சொல்'வது தவறா? இணை அகராதி இப்படி சொல்கிரது
col  03 1. word; term; 2. saying, speech; 3. proverb, maxim;  

பதம் ஆரிய மொழி மூலம்; சொல் தமிழ் மூலம் :)

தயவுசெய்து விக்கிபீடியாவில் எழுதிப்பழக வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • இந்ஙே - இங்கே
  • தவரில்லை - தவறில்லை
  • சொல்கிரது - சொல்கிறது.

இங்கே சொல் நடைமுறையில் தவறானது என்பதையே ஏற்கமுடியாத உங்களுக்கு என்ன விளக்கமும் பயனில்லை. தயவுசெய்து ஒருவலைப்பதிவிலோ அல்லது ஒரு தளத்திலோ இக்கட்டுரையை இட்டு விடுங்கள். பின்னர் ஆரியர் பற்றிய கட்டுரைக்கு அதனை ஒரு வெளியிணைப்பாக கொடுக்கலாம். இங்குள்ள கருத்துக்களுக்கப்பால் இதன் நடையொன்றே இதனை உடன் நீக்கப் போதுமானது. நன்றி. --கோபி 17:49, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


பார்க்க[தொகு]

en:Arya

கட்டுரையின் அறிமுகம்[தொகு]

Ārya is a Sanskrit (आर्य) and Avestan word used by Zoroastrians, Hindus, Buddhists and Jains, and has a variety of positive meanings, usually in religious contexts. It is not to be confused with the derived English adjective "Aryan", which in its socio-linguistic meaning refers to Indo-Iranians regardless of religion or spirituality.

சில குறிப்புக்கள்[தொகு]

Aryan Invasion Theory was debunked long ago. It said the Aryans came from near the Caspain Sea in Central Asia and wiped out and killed off the people living in the Indus Valley Civilization. It was replaced by the current theory in academia...which is essentially the same as before except that the Aryans came down and gradually assimilated with Dravidians instead of invading. Under either theory, the Aryans were geographic foreigners who brought the basis of the Vedas/early Hinduism with them. Point is movement was North=>South (India), North=>South West (Iran), North=>West (Romance languages).

The Sarasvati civilization people (mostly Indian scholars) think the migration was South=>North instead. They believe Vedas were an Indus Valley phenomenon. The linguistic-religious connections between present-day India and Iran/Central Asia/Western Europe resulted from this northerly migration.

The new data says the Africa =>Asia migration happened something like 50,000-60,000 years ago....so it could be that humans went North to Central Asia and then came down again as Aryans. Or it could just be a basic South-North movement.

இவை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து. கோபி 17:39, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி - இந்த கட்டுரையில் ஆரிய ஆக்கிரமைப்பு வந்தது என்று எழுதவெயில்லையே. நான் தெளிவாக சொல்லியிருக்கிரேன்: "வேதங்களில் ஆரியர் தாங்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோம் என இம்மியும் ஒரு அடையாளமும் காட்டவில்லை" - சரியா? விஜய்
It was replaced by the current theory in academia...which is essentially the same as before except that the Aryans came down and gradually assimilated with Dravidians instead of invading. --கோபி 17:52, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
நான் இக்கட்டுரைக்கு மற்ற விகி கட்டுரைகளை ரெபர் செய்யவில்லை. என் மூலம், கடந்த 200 நூற்றாண்டுகளாக சிந்தனை செய்த இந்தியர்களும், மேர்கத்தியவர்களும். அதனால்தன், பல பல்கலைகழக புரொபசர்களையும், மற்றவர்களுக்கும் சூட்டி கொடுத்துள்ளேன். ஆனால் "Aryans came down and gradually assimilated with Dravidians instead of invading." என்று எழுதினால், நீங்கள் இன்னும் ஆழமான பிரச்சினைகளுக்கு ஆளாகிவிடுவீர்கள். ஏனெனில், கட்டுரையின் திசை திரும்பிவிடும். அதனால் என்ன உறுதியாக கூற முடியுமோ அதை மட்டுமே சொல்லி, ஸ்பெசுலேஷனை விட்டு விட்டேன்
எது speculation என்பதையெல்லாம் தீர்மானிப்பது விக்கிபீடியாவின் வேலையல்ல. உறுதியாகக் கூறக் கூடியவற்றுக்கு வரிக்குவரி ஆதாரம் காட்டியாக வேண்டும். பெருமளவு விக்கிபீடியர்களின் கலந்துரையாடலின் விளைவாக எழுதப்பட்ட ஆங்கிலக் கட்டுரை வரிகள் அவை. நான் current theory in academia, essentially the same as before ஆகியவற்றை மட்டும்தான் சுட்டிக் காட்டினேன். ஆனால் உங்கள் கண்ணை Aryans came down and gradually assimilated with Dravidians instead of invading தான் உறுத்தியிருக்கிறது. ஒன்றைக் கவனியுங்கள் விஜய், யாரும் இங்கு ஆழமான பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டியதில்லை. இது கலைக்களஞ்சியம். கட்டுரையின் நோக்கம் நம்பகமான, நடுநிலை நோக்குடனான தகவல்களை அளித்தல். கட்டுரைகளுக்குத் திசையெல்லாம் விக்கிபீடியாவில் இல்லை. Aryans came down and gradually assimilated with Dravidians instead of invading என்றதை வாசித்ததும் உங்களுக்கு உடனடியாக அது speculation ஆக இருப்பது ஒன்றும் வியப்பில்லை. ஆரியர்கள் சிலை, ஓவியம் கலைகளில் ஈடுபாடு கொள்ளவில்லை என்று ஏதாவது வேதத்தில் எவனாவது ஆரியன் சொல்லியிருக்கிறானா? (இல்லையெனின் அக்கலையெல்லாம் ஆரியனுக்கு கைவரவில்லை என்றும் கொள்ளலாம்). நான் இது தொடர்பில் உங்களுடன் விவாதத்துக்கு வரவில்லை. ஆனால் கலைக்களஞ்சியத்துக்கு ஒவ்வாத கட்டுரைகள் நீக்கப்படுவதே வழக்கமானது என்பதை மட்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் தகுந்த மாற்றங்களுடன் கட்டுரையைத் தமிழில் எழுதினாலன்றி நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகும். நன்றி. கோபி 19:35, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
கோபி - நீங்கள் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கிறது. ஆனால் வேத காலத்தில் இருந்து இது வரை, ஒரு கட்டிடமோ, சிலையோ, ஓவியமோ வரவில்லை. அதனால்தான் அப்படி எழுதினேன். மேலும் சில்ப சாஸ்திர, வஸ்து சாஸ்திர நூல்கள் வேத காலத்திற்க்கு அப்பால் வந்தவை.

எப்படியோ, அந்த பகுதியை நீக்கி விடுகிரேன். - விஜய்

கட்டுரை நீக்குவதற்கான உரையாடல்[தொகு]

ஆதாரமற்ற செய்திகளையும் கட்டுக்கதைகளையும் கொண்டதாக உண்மைகளைத் திரித்து வளர்த்துச் செல்லப்படும் இக்கட்டுரையை உடனடியாக நீக்கக் கோருகிறேன். --கோபி 05:27, 30 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, உங்கள் விமர்சனம் ஆக்கபூர்வமானது அல்ல; வெறும் முத்திரை குத்தும் முயற்சியே. நீங்கள் இதுவரை, ஒரு தவறையும் சுட்டிக் காட்ட வில்லை. மற்ற கட்டுரைகளில், பக்கம் பக்கமாக விவாதம் நடக்கிறது. ஆனால், இங்கே ஒரு விவாதமும் இல்லாமல், "ஆதாரமற்ற செய்தி", "கட்டு கதை" "உண்மையின் திறிப்பு" என ஒரு காரணமும் இல்லாமல் சொல்கிறீர்கள்; "கட்டுகதை" என எதை கண்டுபிடுத்து விட்டீர்கள். உங்களுக்கு "ஆதாரம்" ஒவ்வொரு வரிக்கும் வேண்டுமென்றால், நான் கொடுத்திருக்கும் சுட்டிகளிலிருந்து, உடனே தர முடியும். என் கட்டுரை ஆரியரைப் பற்றிய இன்றைய ஆதாரபூர்வமான கருத்துகள். --விஜயராகவன் 00:36, 1 டிசம்பர் 2006 (UTC)

விஜயராகவன், உங்களுடைய கட்டுரை ஒருபக்கச் சார்பானது என்பதில் இம்மியளவும் சந்தேகம் கிடையாது. நடுநிலையான கட்டுரை என்றால் எல்லாக் கருத்துக்களுக்கும் இடம் இருக்க வேண்டும். ஆரிய மேலாண்மையை நிறுவுவதை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஆவணங்களை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டு உண்மையைக் கண்டறிய முடியாது. ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்தே வந்தவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஏராளமான சான்றுகள் உண்டு. அவற்றைப்பற்றி எதுவுமே கூறாமல் வேதத்தில் ஆதாரம் கிடையாது என்று சான்று காட்ட முயல்வது சரியான தகவல்களைத் தருவது ஆகாது. ஆரியர்கள் தங்களைப் பற்றித் தாங்களே பெருமையடித்துக் கொள்லலாம் அதைப் பற்றிப் பிரச்சினை இல்லை. ஆனால், விக்கிபீடியா அதற்கு உகந்த இடம் அல்ல. உங்களுடைய கட்டுரை வராலாற்றைத் திரித்து, ஆரியருக்கு முற்பட்ட இந்திய மக்களினங்களுக்குரிய பெருமைகளை ஆரியர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க முயல்கிறது. அதற்கு எல்லோரும் ஆதரவு தரவேண்டும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. Mayooranathan 08:27, 1 டிசம்பர் 2006 (UTC)
மயூரனாதன், கோபி கருத்தே என் கருத்தும். கட்டுரையை நடுநிலையாக்க போதுமான கால அவகாசம் தந்தும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் காணவில்லை. அறிவியல், கணிதத்தில் கூட போன நூறாண்டுத் தத்துவங்கள் இந்த நூற்றாண்டில் பொய்யாகும் போது வரலாற்றில் ஒன்றை மட்டுமே உண்மை என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. தாங்கள் உண்மை நிறுவ முயன்றால் அதை வரலாறு தொடர்பான peer-reviewd journalகளில் முயலவும். விக்கிபீடியா அதற்கான களம் அல்ல.--Ravidreams 09:36, 1 டிசம்பர் 2006 (UTC)

மயூரநாதன் ; நீங்கள் எழுதியது "ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்தே வந்தவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஏராளமான சான்றுகள்". இப்பொழுதுதான் புரிந்தது "சாய்வு" என்றால் என்ன நினைக்கிறீர்கள் என்று. அதை ஏன் முதலிலேயே கூறவில்லை? நான் முக்கியமாக ஆரியர்களின் கலாசாரம், வாழ்க்கை, இலக்கியம் இவற்றைப் பற்றியே மூல ஆதாரங்களுடன் நோக்கினேனே தவிர, "ஆரியர்களின் வருவாய் எது, எங்கிருந்து வந்தார்கள்" என்ற சர்சையில் கவனம் செலுத்தவில்லை. "ஆரியர் எங்கிருந்து வந்தனர் - சர்சை" என இன்னொரு கட்டுரை எழுதலாம். அது தவரில்லை. ஆனால் கட்டுரையில் அதைப்பற்றி எழுதாவிட்டாலும், கட்டுரையின் பல சுட்டிகள் அதைப் பற்றி பேசுகிரன. அந்த சர்சையை தனி கட்டுரையில் எழுதுகிரேன் அதைத் தவிற, நீங்கள் எழுதுவது உணர்ச்சிப் பேச்ச்சு ஆகும். உங்கள் குற்றச்சாட்டு "கட்டுரை வராலாற்றைத் திரித்து" - கட்டுரையின் நோக்கம் இந்தியாவின் வரலாறு மொத்தமாக எழுதுவது அல்ல. உங்கள் குற்றச்சாட்டு - "இந்திய மக்களினங்களுக்குரிய பெருமைகளை ஆரியர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க முயல்கிறது". இதை கட்டுரையில் இருந்து எப்படி படிப்பீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் "straw man" வாதத்தை வைத்து, கற்பனை செய்து கொள்கிறீர்கள். ஏன் இதையெல்லம் உரையாடலில் சொல்ல வில்லை.இந்தக் கட்டுரையின் குறிக்கோளே, ஒரு மக்கள் தன் சமுதாயத்தை பற்றி என்ன சொல்லியுள்ளனர், அதன் சமய, சமுதாய, அரசியல் தகவல்கள் என்ன, அதை அக்காலத்து மற்ற துப்புகள் கூட எப்படி புரிந்து கொள்வது ? அதுதான்; இக்கட்டுரைக்கும், இந்திய வரலாறு எழுதியவ்ரகளுக்கும் ஒரு முரண்பாடு இல்லை. அதனால் "ஆரிய மேலாண்மையை நிறுவுவÐ" என்ற குற்றச்சாட்டு ஆதாமற்றது. இக்கட்டுரை தகவலை கொடுக்கிறதே தவிற, மேலாண்மையை பற்றி பேசவே இல்லை. அப்படி மேலாண்மை பேச்சு என்று ஒரு உதாரணம் கொடுக்க முடியுமா?. உங்கள் குற்றச் சாட்டு பðÊயல் பெரிதாகவே உள்ளது.

  • "ஒருபக்கச் சார்பானது".
  • "ஆரிய மேலாண்மையை நிறுவுவதை".
  • "பெருமையடித்துக் கொள்லலாம்".
  • "வராலாற்றைத் திரித்து".
  • "பெருமைகளை ஆரியர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க".

ஆனால் இக்கட்டுரையின் அடக்கத்திலிருந்து, நீங்கள் ஒரு உதாரணமும் சொல்லவில்லை. இக்கட்டுரையின் நோக்கம் ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை எடுப்பதல்ல; ஆரியர்கள் என்ன செயதார்கள், என்ன நம்பினார்கள், அதுதான். --விஜயராகவன் 10:18, 1 டிசம்பர் 2006 (UTC)

ரவிட்ரீம்ஸ் "நடுநிலை" என்ன என்று இதுவரை சொல்லவில்லை; எந்த பிரச்சினயில் நடுநிலை பற்றியும் நீங்கள் சொல்லவில்லை. இந்த கட்டுரையின் குறிக்கோள் /அணுகுமுறை என்ன என்பதை மயூரநாதனனுக்கு தெளிவு படுத்தி விட்டேன். நீங்கள் விவாதத்தை தெளிவுபடுத்தாமல் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என பிடிவாதமாக இருக்கிறீர்கள்.--விஜயராகவன் 11:43, 1 டிசம்பர் 2006 (UTC)
விஜயராகவன். நீங்கள் எதையும் எனக்குத் தெளிவுபடுத்தவில்லை. நான் இன்னும் முன்னர் குறிப்பிட்ட அதே கருத்தையே கொண்டுள்ளேன். இங்கே விபரமாக விவாதம் நடத்த முடியாது. வேண்டுமானால் கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் பார்க்கலாம். ஆனாலும், தேவையில்லாமல் வாதித்து நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. Mayooranathan 12:01, 1 டிசம்பர் 2006 (UTC).
மயூரநாதன், நீங்கள் கட்டுரையின் மீது பல குறைகளை எழுப்புகிறீர்கள். அதற்க்கு உதாரணமும், ஆதாரமும் கேட்டால், "வாதித்து நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை" என்கிறீர்கள். யார் யார் நேரத்தை வீண் செய்கிரார்கள். நான் போன பதிலிலேயே தெளிவு படுத்தினேனே "நான் முக்கியமாக ஆரியர்களின் கலாசாரம், வாழ்க்கை, இலக்கியம் இவற்றைப் பற்றியே மூல ஆதாரங்களுடன் நோக்கினேனே தவிர, "ஆரியர்களின் வருவாய் எது, எங்கிருந்து வந்தார்கள்" என்ற சர்சையில் கவனம் செலுத்தவில்லை.". "இக்கட்டுரையின் நோக்கம் ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை எடுப்பதல்ல; ஆரியர்கள் என்ன செயதார்கள், என்ன நம்பினார்கள், அதுதான்". --விஜயராகவன் 12:49, 1 டிசம்பர் 2006 (UTC)

சில குறிப்புகள்[தொகு]

விஜய், உங்களுக்கு நடுநிலை என்பது என்னவென்பதை விளக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் காரணங் கூறாமல் கட்டுரையை நீக்குவது விக்கிபீடியா கொள்கைகளுக்கு முரணானது என்பதால் சில குறிப்புகளைக் கூற நினைக்கிறேன்.

  • ஆரியரால் சிலைகளோ ஓவியங்களோ உருவாக்கப்படவில்லை என்றால் ஆரியன் சிலை, ஓவியம் கலைகளில் ஈடுபாடு கொள்ளவில்லை என்பது உங்கள் முடிவு.
  • ஆரியர் சடலம் கிடைக்கவில்லை என்றால் ஆரியர் இறந்தவர்களை எரித்தனர் அடடா :-)
  • ஏன் இந்த கட்டுபாடு என்றால், ஆரியர்கள் தங்கள் மத கருத்துகளை எழுத்து, புத்தக வடிவத்தில் போட மறுத்தனர் அப்படியா? இதனை ஆரியனுக்கு எழுதத் தெரியாது என்று கொள்ள முடியாதா?
  • வேதங்களை அலசினால், இந்திய துணைக்கண்டத்தின் வெளியே ஒரு அறிவும் இல்லை அல்லது இந்தியத் துணைக்கண்டத்திற்கு வரும்வரை ஆரியனுக்கு அறிவு இருக்கவில்லையா?
  • மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. மொழி ஆய்வாளர்கள் வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள் என கருதுகிறார்கள் இதற்கு என்ன ஆதாரம்? இதற்கு எங்கிருந்து ஆதாரம் தருவீர்கள்? முட்டாள்த்தனமாகப் படவில்லையா?
  • அதாவது வேத காலத்தில் எப்படி வேத வாக்குகள் பேசப் பட்டதொ, அதே பேசு வகையில் இன்றும் உள்ளன. இது உலகத்திலெயே ஒரு அதிசயமாகும். இது கலைக்களஞ்சியக் கட்டுரையா?
  • அதே சமயம் நம்மிடம் கல்வெட்டு, கட்டிடம், ஆயுதம் போன்ற நிரந்தர பொருள் அத்தாட்சி இல்லை :-)
  • கடவுள்கள் வருடாவருடம் அசுரர் என அழைக்கப்பட்ட தன் எதிரிகளுடன் சண்டையிட்டனர் இது கலைக்களஞ்சியக் கட்டுரையா? அல்லது கதையா?

இக்கட்டுரை நிறைய எழுத்துப்பிழைகள். பெருமளவு வடசொற்கள். விக்கிபீடியா எழுதிப் பழகும் இடமல்ல. பிறமொழிச் சொற்களை கலந்து எழுதுவது விக்கிபீடியாவுக்கு முரணானது. இதகு மேலும் இந்த கட்டுரை தொடர்பில் கருத்துக் கூறி நேரத்தை வீணடிக்க முடியாது. செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. நன்றி. கோபி 17:10, 1 டிசம்பர் 2006 (UTC)

கோபி - நல்ல வேளையா தனி குறிப்பிட்ட பிரச்சினைகலை எழுப்பியுள்ளீர்கள் - அதற்கு ஒவ்வொன்றுற்கும் ஆதாரம் தருகிறேன்

1.ஏன் இந்த கட்டுபாடு என்றால், ஆரியர்கள் தங்கள் மத கருத்துகளை எழுத்து, புத்தக வடிவத்தில் போட மறுத்தனர் அப்படியா? இதனை ஆரியனுக்கு எழுதத் தெரியாது என்று கொள்ள முடியாதா?

Vedic Hinduism - by Jameson & Witzel http://www.people.fas.harvard.edu/%7Ewitzel/vedica.pdf Page 3 "We owe the transmission and preservation of the (vedic) texts to the care and discipline of particular religious, or better , priestly schools (or sakhas). It should also be emphasized that both the composition and the transmission of the texts was completly oral for the entire Vedic periodand some considerable time afterwards." "Footnote 5: Until at least AD1000, see for example Hinuber on the introduction of script in India under the mauryas and the persistance of oral tradition among Brahmins"

The Developement of Vedic canon and it's schools- The social and political milieu Dr.Michael Wiztel , Harvard University Page 2

"the Vedas were composed orally and they always were and still are to some extent oral literature. They must be regarded as tape recordings, made during Vedic period and transmitted orally without the change of a single word. The strictly oral trasmission applies to prose parts as well. Exceptions to this strictly oral tradition are rare. The earliest surviving Vedic manuscript comes from Nepal A.D.1040" Page 5

"This ingenuos ordering device originated in a civilization without writing".

2. மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. மொழி ஆய்வாளர்கள் வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள் என கருதுகிறார்கள் இதற்கு என்ன ஆதாரம்? இதற்கு எங்கிருந்து ஆதாரம் தருவீர்கள்? முட்டாள்த்தனமாகப் படவில்லையா?

http://www.people.fas.harvard.edu/%7Ewitzel/EJVS-7-3.pdf

"Autochthonous Aryans ?" Page 4 - "We have Vedas , a large collection of texts, orally composed and orally transmitted well into this millennium. Tradition has taken care to ensure, with various techniques, that the wording and even tone accents, long lost from popular speech, have been preserved perfectly, almost like a tape recording. This includes several special ways of recitation, the Padapatha (word-for-word recitation) and several complicated extentions and modifications (vikriti)

http://users.primushost.com/%7Eindia/ejvs/ejvs0104/ejvs0104article.pdf Early Sanskritization - Origin and developement of Kuru state Page 1

"Since the Vedic texts are "tape recordings" of the Vedic period, we can use them ...."

http://www.people.fas.harvard.edu/~witzel/Erdosy1995.pdf

From Early Indian History: Linguistic and Textual Parameters. in: Language, Material Culture and ethnicity. The Indo-Aryans of Ancient South Asia, ed. G. Erdosy,

Michael Witzel - Early Indian History: Linguistic and textual parameters Page 15-16 Right from the beginning, in Rgvedic times, elaborate steps were taken to ensure the exact reproduction of the words of the ancient poets. As aresult, the Rgveda still has the exact same wording in such distant regions as Kashmir, Kerala and orissa, and even the long extinct musical accents, have been preserved. The Vedic transmission is thus superior to that of the Hebrew or Greek bible, or the Greek, Latin and Chinese classics.We can actually regard the present day Rgveda recitation as a tape recording of what was first composed and recited thousands of years ago" Page 17: As they are contemporary and faithfully preserved, these texts are equivalent to inscriptions.........they are immediete and unchanged evidence, a sort of oral history - and sometimes autobiography - of the period, frequently fixed and taped immedietely after the event by poetic formulation

Page 7

"The Developement of Vedic canon and it's schools- The social and political milieu" Dr.Michael Wiztel , Harvard University "In fact the bulk of Rig Veda gives.....snapshot view of contemprary Rgvedic history, as reported by these contemporary 'tape recordings' "

3. அதாவது வேத காலத்தில் எப்படி வேத வாக்குகள் பேசப் பட்டதொ, அதே பேசு வகையில் இன்றும் உள்ளன. இது உலகத்திலெயே ஒரு அதிசயமாகும். இது கலைக்களஞ்சியக் கட்டுரையா?

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3480049.stm "Now the United Nations cultural organisation, Unesco, has formally recognised it (Vedic chanting) as part of the world's heritage of oral history. "

http://www.people.fas.harvard.edu/~witzel/Erdosy1995.pdf From Early Indian History: Linguistic and Textual Parameters. in: Language, Material Culture and ethnicity. The Indo-Aryans of Ancient South Asia, ed. G. Erdosy, Michael Witzel - Early Indian History: Linguistic and textual parameters Page 15-16 Right from the beginning, in Rgvedic times, elaborate steps were taken to ensure the exact reproduction of the words of the ancient poets. As aresult, the Rgveda still has the exact same wording in such distant regions as Kashmir, Kerala and orissa, and even the long extinct musical accents, have been preserved. The Vedic transmission is thus superior to that of the Hebrew or Greek bible, or the Greek, Latin and Chinese classics. http://www.people.fas.harvard.edu/%7Ewitzel/EJVS-7-3.pdf

"Autochthonous Aryans ?" Page 4 - "We have Vedas , a large collection of texts, orally composed and orally transmitted well into this millennium. Tradition has taken care to ensure, with various techniques, that the wording and even tone accents, long lost from popular speech, have been preserved perfectly,

4. அதே சமயம் நம்மிடம் கல்வெட்டு, கட்டிடம், ஆயுதம் போன்ற நிரந்தர பொருள் அத்தாட்சி இல்லை :-)

கோபி இதில் சிரிப்பிற்க்கு என்ன இடம் உள்ளது. அது யதார்த்தத்தை ஏற்றுக்கொள்பதுதான்.

http://www.people.fas.harvard.edu/%7Ewitzel/vedica.pdf Vedic Hinduism - by Jameson & Witzel Page3 "Moreover, because we must rely on texts, our knowledge of vedic religion is entirely verbal; we know nothing of the visual and iconographic aspect of vedic religion, if such there was".

5.'கடவுள்கள் வருடாவருடம் அசுரர் என அழைக்கப்பட்ட தன் எதிரிகளுடன் சண்டையிட்டனர் இது கலைக்களஞ்சியக் கட்டுரையா? அல்லது கதையா?

http://www.people.fas.harvard.edu/%7Ewitzel/EJVS-7-3.pdf

"Autochthonous Aryans ?" "The gods are depicted as engaging in constant and yearly contest with their adverseries, the Asura, a contest which gods always win , until next time".


6.வேதங்களை அலசினால், இந்திய துணைக்கண்டத்தின் வெளியே ஒரு அறிவும் இல்லை அல்லது இந்தியத் துணைக்கண்டத்திற்கு வரும்வரை ஆரியனுக்கு அறிவு இருக்கவில்லையா?

நாம் சரித்திர துப்பு என்ன தெரிவிக்கிறதோ, அதயே ஏற்க்க வேண்டும். அத்துடன் விஞ்ஞானத்தின் வேலை முடிந்து விடுகிரது. அதன் மேல், நீங்கள் என்ன வேண்டுமானாலும் புனைத்துப் பார்க்கலாம்; உங்கள் இஷ்டம்.

http://users.primushost.com/%7Eindia/ejvs/ejvs0104/ejvs0104article.pdf Early Sanskritization - Origin and developement of Kuru state

Page 4

Geographical spread of vedic period based on river names and place names: All of North India from Gandhara to Anga, Pundra (Bengal) and to Vidarbha, Andhra in the south

Michael Witzel: On the localisation of Vedic textx and schools

page 1 the bulk of vedic texts must have been composed in North India

கோபி, உங்கள் பாயிண்டுகள்

a. பெருமளவு வடசொற்கள். விக்கிபீடியா எழுதிப் பழகும் இடமல்ல - வடமொழி பெயர்களை எழுதத்தான் கிரந்த உருக்களை உபயோகித்தேன். பெயர்களை நாம் "மொழிமாற்றுவது" உசிதமில்ல. நான் எழுதிய எல்லாவற்றையும் தமிழ் படிக்கும் நபர் புரிந்து மொள்ள முடியும்

b.பிறமொழிச் சொற்களை கலந்து எழுதுவது விக்கிபீடியாவுக்கு முரணானது

நான் 100% தமிழில்தான் எழுதியுள்ளேன். மற்ற தமிழ் கட்டுரைகளை பாருங்கள் - எவ்வள× ஆங்கில கலப்படம் என்று.

கோபி, 'ஆரியர்' என்பது ஒரு காம்ப்ளெக்ஸ் விஷயம்; எனெனில் எழுதுவதற்க்கு நிறைய உள்ளன; அதற்க்கு மேல் சர்ச்சைகளும் உள்லன. அதனால் அதற்க்கு ஒரு அறிமுகம் போலத்தான் இந்த கட்டுரை.

c.இக்கட்டுரை நிறைய எழுத்துப்பிழைகள்.

நான் ர , ற வை பார்த்துதான் எழுதுகிறேன். அதற்க்கு மேலும் சில பிழைகள் வந்தால் சொல்லவும்


மேலும் இதைப் போல மனப்பான்மை, தமிழில் எழுதும் ஆர்வமுள்ளர்க்கு முட்டுகட்டை போடும். தமிழில் பல இயல்களை பற்றி எழுதவேண்டுமானல், கிரந்த உருக்க்ளை புரக்கணிக்க கூடாது. --விஜயராகவன் 01:32, 2 டிசம்பர் 2006 (UTC)

இக்கட்டுரைத் தலைப்பில் கட்டுரை அவசியம்[தொகு]

  • இது ஒரு முக்கிய தலைப்பு, இதன் உள்ளடக்கம் மாற்றி எழுதப்படவேண்டுமே தவிர இந்த கட்டுரைத் தலைப்பில் கட்டுரை அவசியம்.
  • ஆரியன் என்று சொற்பதம் சற்று இழிவுபடுத்தும் பதமாக இருக்கின்றது. அதைத் தவிர்க்கலாம். ஆரியர் என்பதே நன்று.
  • விஜயராகவன், நீங்கள் கூற விரும்புவதை சுருக்கி எழுத முடியுமா. உங்கள் பார்வையையும் கட்டுரையில் தகுந்த முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இந்த கட்டுரை பல பார்வைகளை இணைத்து தர வேண்டும். குறிப்பாக சமூக அறிவியல் பார்வை, காலனித்துவ ஆட்சியாளர்களின் பார்வை, விஜயராகவன் முன்வைக்க முனையும் பார்வை, திராவிட கொள்கையாளர்களின் பார்வை எனப் பல பார்வைகளை ஒன்று சேர்த்து தர வேண்டும்.
  • நாம் வேறு படும் பொழுது நீக்குவதே முடிவு என்றால் பல முக்கிய தலைப்புகளுக்கு இந்த முடிவு எடுக்கப்படவேண்டிய நிலை ஏற்படலாம். அது நல்ல முன் எடுத்துக்காட்டு இல்லை.
  • முக்கியமான ஆதாரங்களை மட்டும் குறிப்பிட்டால் நன்று. மேற்கோள்களைப் பயன்படுத்துவது மேல். தேவையற்ற சமஸ்கிரத சூத்திரங்களைத் தவிர்க்கலாம். எழுத்துப்பிளைகளும் களையப்படவேண்டும். நன்றி.

--Natkeeran 01:56, 2 டிசம்பர் 2006 (UTC)

நக்கீரனுக்கு பதில்:

நீங்க 'சுருக்கி எழுதினால்' என்பது , கட்டுரையை சொல்கிறீர்களா, பேச்சை சொல்கிறீர்களா? நான் கட்டுரையை ஆதாரங்கள் காட்டி நீளமாகிவிடவில்லை; ஆனால் பல குறைகளை படித்தவிடன், அப்படி எழுதியிருக்கலாமோ என தோன்றுகிரது. நக்கீரன், நான் 'cutting edge' ஆய்வுகளைதான் கொடுத்துள்ளென். நான் சுட்டியிருக்கும் ஆய்வாளர்கள், வேத மொழிகளில் உயர் நிபுணம் அடைந்து, 40, 50 வருடம் எழுதியுள்ளனர். நீங்கள் சொல்கிறார்போல் பல பார்வைகளை கொடுத்தால், கட்டுரை என்னும் பல மடங்காக பெருகும். அப்படி பல பார்வைகளுக்கு இன்னொரு கட்டுரையை ஆரம்பிக்கலாம். நான் கொடுத்திருப்பது சமஸ்கிருத சூத்திரங்களின் பெயர்களே. அதுதானே தகவல். நீங்கள் தமிழ் சஙக காலத்தை பற்றிய கட்டுரையில், இலக்கிய பட்டியலை கொடுக்காமல் போய்விடுவீர்களா? எழுத்துப் பிழைகளை களைய வேண்டியதை முழுக்க ஒத்துக் கொள்கிரேன். என் நேரத்தை, குறைகளுக்கு பதில் சொல்லியே எழுதுவதால், முக்கிய கட்டுரை கொஞ்சம் கவனம் போய்விடுகிரது --62.31.35.159 10:09, 2 டிசம்பர் 2006 (UTC)

எல்லா தகவல்களையும் ஆரியர் என்ற பகுதிக்குள் சேர்க்க முயலாமல், ஆரியர் என்றால் யார் என்ற கேள்விக்கு முதன்மையாக பதில் சொல்ல முயலாம். பின்னர் மற்றயவையை பார்க்கலாம். --Natkeeran 03:18, 3 டிசம்பர் 2006 (UTC)


மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. மொழி ஆய்வாளர்கள் வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள் என கருதுகிறார்கள். அதாவது வேத காலத்தில் எப்படி வேத வாக்குகள் பேசப் பட்டதொ, அதே பேசு வகையில் இன்றும் உள்ளன. இது உலகத்திலேயே ஒரு அதிசயமாகும். போன்றவை கலைக்களஞ்சியக் கட்டுரைக்குரியனவல்ல. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதாரங்களை மட்டும் தருவதனால் அது உண்மையாகிவிடாது.

நற்கீரன், ஆரியன் தொடர்பான ஆங்கில விக்கிபீடியாக் கட்டுரையைப் பார்க்கவும். நாம் மாறுபடும்போது நீக்குவது சரியில்லை என்றால் சரியான விதத்தில் திருத்த வேண்டும். அதற்கான பொறுப்பை எடுக்க முன்வருகிறீர்களா? இப்பக்கத்தை நீக்கிவிட்டு மயூரன் ஆரம்பத்தில் தொடங்கியுள்ளதை புதிய கட்டுரையாகத் தொடங்கலாம் என்பது என் அபிப்பிராயம். நீக்குவதைவிட மோசமானது விக்கிபீடியாவில் ஒருபக்கச் சார்பான கட்டுரையை வைத்திருப்பது. இது விக்கிபீடியாவின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும்.

என்னைப் பொறுத்தவரை இக்கட்டுரை நீக்கப்படுவது விக்கிபீடியாவிற்கு நல்லது. எமக்குள்ள வளங்கள் மிகக் குறைவானவை. இத்தகைய்தொரு கட்டுரையைத் திருத்தி எழுதுவதற்கான உரையாடல்களை மேற்கொள்வதற்கான வளங்கள் எம்மிடமில்லை. நாம் செய்ய வேண்டியவை ஏராளமிருக்கின்றன. கோபி 06:10, 2 டிசம்பர் 2006 (UTC)

கோபிக்கு பதில்

உங்கள் முதல் குறை. நான் 4 காரணங்களை நேற்றிரவு எழுதினேனே, அது ஒன்றும் 'என்' பார்வை' அல்ல ; ஐ.நா., மற்றும் ஆய்வாளரின் பார்வை. அந்த ஆய்வாளர் வேத மொழியில் பிரசித்தி பெற்று இந்திய துணை கண்டத்தின், பல மூலைக்கும் சென்று ஆய்வு நடத்தியவர். அது திருப்தி இல்லையா? இல்லாட்டி பரவாயிலை; அது பெரிய விஷயம் ஒன்றுமில்லை, அதை எடுத்து விடுகிரேன். --62.31.35.159 10:26, 2 டிசம்பர் 2006 (UTC)

?== திராவிடர்களும் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்களே...?? ==

எனக்கு தெரிந்த ஒருவர் இந்த project பங்கு கொள்கின்றார். அவரது ஆரம்ப நிலைத் தகவலின் படி, திராவிடர்களும் ஆபிரிக்கா, மத்திய ஆசியா ஊடாக இந்தியா வந்து, பின்னர் தென் இந்தியா வந்ததாகவே தெரிகின்றது. பின்னர் அவர்கள் இலங்கை சென்றாதாகவும் தெரிகின்றது. குறைந்த பட்சம் அவரது தனிப்பட்ட வரலாறு அவ்வாறு அமைகின்றது. ஒரு தகவலுக்காகவே இங்கு குறிப்பிடுகின்றேன். https://www3.nationalgeographic.com/genographic/index.html

--Natkeeran 02:14, 2 டிசம்பர் 2006 (UTC)

திராவிடர்களும் இந்தியாவுக்கு வெளியிலிருந்தே வந்தார்கள் என்றாலும், அது ஆரியர் தொடர்பான ஒருபக்கச் சார்பான கட்டுரைக்கு நியாயம் தருவது ஆகாது. நிற்க, இவ்விடயத்தில் திராவிடர் தோற்றம் ஒரு பிரச்சினையும் அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள திட்டம், திராவிடர் மட்டுமன்றி உலக மக்களினம் முழுவதுமே ஆபிரிக்காவில் இருந்து ஏனைய இடங்களுக்குப் பரவியதாகவே கூறுவதாகத் தெரிகின்றது. இது 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த கதை. நாங்கள் இங்கே பேச முயல்வது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை.
...வேதங்களை அலசினால், இந்திய துணைக்கண்டத்தின் வெளியே ஒரு அறிவும் இல்லை; வேதங்களில் ஆரியர் தாங்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோம் என இம்மியும் ஒரு அடையாளமும் காட்டவில்லை.

இதற்கு என்ன பொருள்?. ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வரவில்லை என்பதா இல்லையா? இதுவும் ஒரு கருத்து எனக் குறிப்பதில் எத்தகைய ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிடாமல் ஆரிய ஆதரவுக் கருத்துக்களை மட்டுமே கொண்டு விக்கிபீடியாவில் கட்டுரை எழுதமுடியாது.

நமக்கு 'ஆரியர்' என்ற இனம் பற்றி வேதங்களில் இருந்து முக்கியமாக அத்தாட்சி கிடைக்கிறது. அதால் வேதங்களில் என்ன தகவல்கள் உள்Çன என கணக்கிடுவது முக்கியமானதாகும்.
நம்மிடம் கல்வெட்டு, கட்டிடம், ஆயுதம் போன்ற நிரந்தர பொருள் அத்தாட்சி இல்லை. அதனால் வேத மற்றும் வேதத்தை சார்ந்த சொல் அத்தாட்சிகளைதான் நம்ப வேண்டும்.

வேதங்கள் ஆரியர்களால் தங்களுக்குச் சாதகமாக எழுதிக்கொள்ளப்பட்டவை. இவற்றிலுள்ள தகவல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதையே முடிந்த முடிவான சான்றாக வைத்துக் கட்டுரை எழுத முடியாது. அவற்றைத்தான் நம்பவேண்டும் என்று சொன்னால் அது சரியான ஆராய்ச்சி முறையல்ல.

வேதங்கள் பல்லாயிக் கணக்கான சூத்திரங்களாகவும் , மேலும் மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. அதனால் தால் மொழி ஆய்வாளர்கள் வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள் என கருதுகிறார்கள். அதாவது வேத காலத்தில் எப்படி வேத வாக்குகள் பேசப் பட்டதொ, அதே பேசு வகையில் இன்றும் உள்ளன. இது உலகத்திலெயே ஒரு அதிசயமாகும்.

இதற்கு என்ன ஆதாரம்? வேதகாலத்தில் எப்படிப் பேசினார்கள் என்பது யாருக்குத் தெரியும்? இன்றும் அப்படித்தான் பேசுகிறார்கள் என்பது எப்படிக் கண்டறியப்பட்டது? சமஸ்கிருதப் பண்டிதர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கூறும் கூற்றுகளை உதாரணம் காட்டுவதன் மூலம் எதையும் நிறுவமுடியாது. முதலாவது எழுத்துமூல மாதிரி கி.பி ஆயிரத்துக்குப் பின்னரே கிடைத்துள்ளது அப்படியிருக்கும்போது ஒரு எழுத்துக்கூட மாறாமல் என்று எதனை ஆதாரமாக வைத்துக் கூறுகிறார்கள்?

ஆரியர்களின் எதிரிகளில் முக்கியமன பெயர் 'தாஸா'/ 'தஸ்யு'. யார் இந்த தாஸா/தஸ்யு ? இரானிய நூல்களின் சொல்லப்படும் 'தாஹா' , கிரேக்க நூல்களில் சொல்லப்படும் 'தாஹெ' மக்களும் ஒன்றே. எனெலில் வேதமொழி ஸா > தொல் இரானிய ஹா என்று மாற்றம் அடைகிரது. அதனால் தாஸா, தாஹா என சொல்லப்படுபவர் வட இந்திய சமவெளிகள், மத்திய ஆசிய, பாரசீக நிலங்களில் ஒரு காலத்தில் பரவியிருக்க வேண்டும். அவர்கள் ஆரியரை விட உருவத்தில் மாற்றமடைந்தவர்கள் என்பதிற்க்கு ஆதாரம் இல்லை. ஆனால் ஒன்று நிச்சயம் - தாஸா வேத மதத்தையும், சடங்குகளையும் பின்பற்றவில்லை - அதனால்தான் ஆரியர்-தாஸர் காழ்ப்பு.

இதன் பொருள் என்ன? தாஸா என்பவர்கள் ஆரியர் இந்தியாவுக்குள் வரமுன்பே இங்கு வாழ்ந்துவந்த மக்களைக் குறிக்கும் என்பதே பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து. ஏற்கெனெவே இந்தியாவில் வாழ்ந்து வந்தவர்களை எதிரிகளாகக் கொண்டு அவர்களை அடக்கி ஆரிய ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதனை மூடிமறைத்து, ஆரியர்களை பூர்வ குடிகள் எனக் காட்டுவதற்காவே தாஸா என்பவர்களைத் தேடி இந்தியாவுக்கு வெளியே செல்கிறது கட்டுரை.

மற்ற ஆரியரில்லாத மக்கள் கிராதகர்கள். இவர்கள் வேடுபவர்களாக தெரிகின்றனர்.

இதற்கு என்ன பொருள்? இந்தியாவில் இருந்த ஆரியரல்லாதவர்கள் நாகரிகமடையாதவர்கள் என்றும் ஆரியர்கள் அவர்களைவிட நாகரிகத்தில் மேம்பட்டவர்கள் என்பதையும் நிறுவ முயலவில்லையா? உண்மையில் ஆரியர்கள் நாடோடிகளாக இந்தியாவுக்குள் வந்தகாலத்தில் இந்தியப் பூர்வ குடிகள் பிரபலமான நாகரிகத்துக்குச் சொந்தக்காரராக இருந்தார்கள். இவர்களுடைய நாகரிகத்தின் கூறுகளையெல்லாம் உள்வாங்கியே ஆரியர்கள் நாகரிகம் அடையத் தொடங்கினர். இவற்றையெல்லாம் மூடி மறைத்து எல்லாமே ஆரியர்களுடையது தான் என்று நிறுவ முயல்கிறது கட்டுரை.

இவ்வளவு குளறுபடிகள் இருக்கும்போது, ஆரியர் என்ற தலைப்பில் கட்டுரை இருக்கவேண்டும் என்பதற்காக இதை அப்படியே விடலாம் என்பது சரியாகத் தெரியவில்லை. Mayooranathan 08:26, 2 டிசம்பர் 2006 (UTC)

மயூரநாதனுக்கு பதில்:

நீங்கள் நான் கோபிக்கு பதிலாக ஆய்வாளர்களின் கருத்தை ஆங்கிலத்தில் கொடுத்தேனே, அதை படித்தீர்களா? அக்கருத்துக்கெல்லாம் என்ன பதில்? மற்ற படி நீங்கள் நான் எழுதாதயெல்லாம் கற்பனை செய்து, உணர்சி வசப் பட்டு எழுதுகிரீர்கள்--விஜயராகவன் 10:34, 2 டிசம்பர் 2006 (UTC)

நற்கீரன், கருத்து வேறுபடுவதால் மட்டும் நீக்கச் சொல்லவில்லை. விக்கிபீடியா கட்டுரைகள் கூட்டு முயற்சி தான். ஆனால், கட்டுரையை மேம்படுத்த பிற பயனர்கள் ஆர்வம் காட்டாத போது கட்டுரையை மேம்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு கட்டுரையை தொடங்கியவருக்கு உண்டு. தான் எழுதியது உண்மை என்று அவர் கருதினாலும், உண்மை என்று பிற அறிஞர்களால் கருதப்படுவனவற்றையும் சேர்த்து தருவது தான் நடுநிலை. இது வரை பேச்சுப் பக்கங்களில் மட்டும் தான் விஜய் வாதிட்டு வருகிறாரே தவிர, கட்டுரையில் உள்ள எழுத்துப்பிழைகளை களையக் கூட முனையவில்லை. இந்த நிலையில் இவர் கட்டுரையை விக்கியாக்கம் செய்வார் என்றோ நடுநிலை ஆக்குவார் என்றோ எதிர்ப்பார்க்க இயலாது. ஒரு வேளை நீங்கள் கட்டுரையை மேம்படுத்தித் தர இயலுமானால், அதை துரிதமாக செய்து தாருங்கள். ஆனால், அதற்கு ஒரு கால எல்லை வேண்டும். காலத்துக்கும் இக்கட்டுரையை இப்படியே விட்டு வைக்க முடியாது. குறுகிய காலத்தில் இதை இன்னொரு பயனர் வந்து மேம்படுத்தித் தருவதற்கான அறிகுறியும் இல்லை. எங்கள் ஊர் இனிப்புக் கடையில் ஒரு பலகாரம் ஊசிப் போய் கிடந்ததாகத் தெரிந்தால் வேறு ஒரு பலகாரத்தையும் வாங்க மாட்டோம். பிறரிடமும் வாங்க வேண்டாம் என்று பரப்பி விட்டு விடுவோம். பிறகு என்றைக்கும் அந்த கடைக்கு வியாபாரம் அவ்வளவுதான். இந்த உவமையை நான் விளக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கட்டுரைத் தலைப்பு அவசியம் தான். இந்த தலைப்பே வேண்டாம் என்று சொல்லவில்லை. தற்போது உள்ளடக்கத்தை மாற்ற வேண்டும் என்று தான் சொல்கிறேன். மாற்றம் வேண்டும் என்ற அளவிலாவது நீங்களும் உடன்படுகிறீர்கள். ஆனால், மாற்றமே தேவை இல்லை என்று விஜய் வாதிட்டால் என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை விட கட்டுரை எப்படி எழுதப்படிருக்கிறது என்பதே இதை நீக்கப் போதுமானது. The process itself is flawed. ஆரியர் எங்கிருந்து வந்தார் திராவிடர் எங்கிருந்து வந்தார் என்ற விவாதத்துக்கே போக வேண்டாம். சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எப்படி எழுதுவது என்று ஒரு முறைமை உண்டு. அதை இக்கட்டுரை பின்பற்றவில்லை. உயிர்த் தோற்றத்தை குறித்து எண்ணற்ற தேற்றங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் குறித்து தாராளமாக எழுதலாம். ஆனால், இது தேற்றங்களில் ஒன்றென்றும் குறிப்பிடத்தக்க பிற தேற்றங்கள் உண்டென்றும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். அதுவே நடுநிலை. சாமி தான் மனிதனைப் படைத்தார் என்று விக்கிபீடியா கட்டுரை எழுதுவதும் இந்த ஆரியர் கட்டுரையில் உள்ள உள்ளடக்கமும் ஒன்று தான். எப்பொழுதுமே நமக்குச் சாதகமாக ஆதாரங்களை காட்ட முடியும். கோட்சே, காந்தி, ஒசாமா பின் லாடன், ஹிட்லர், ஆகியோருக்கு கூட முற்றிலும் மாறுபட்ட இரு வேறு imageகளை ஆதாரங்களுடன் தர முடியும். ஆனால், அவற்றில் ஒன்று தான் சரி என்று நிறுவ முயல்வது தவறு.

கட்டுரையை நீக்க வேண்டாம் என்ற பட்சத்தில் மயூரனின் உரையை மட்டும் விட்டு வைக்கலாம். அல்லது, ஒரு வார காலத்துக்குள் விஜய் எவ்வளவு கட்டுரையை மேம்படுத்தி நடுநிலையோடு எழுத முடியுமோ எழுதட்டும். பிறகு, கட்டுரையின் தரத்தை பொறுத்து எதை வைத்திருப்பது நீக்குவது என்று முடிவு செய்யலாம்.

விஜய், 100 % தமிழில் தான் எழுதி உள்ளீர்கள் என்று சொல்லி உள்ளீர்கள். ஆனால், எனக்கு கட்டுரை பாதிக்கு மேல் புரியவில்லை. 12ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் 92% மதிப்பெண்கள் பெற்று இருந்தேன். ஒரு வேளை என் தமிழ் அறிவு போதாதோ என்னவோ ;)? பிற விக்கிபீடியா கட்டுரைகள் இந்த கட்டுரையை விட மட்டமாக இருப்பதாக நீங்கள் கருதினால் தயவு செய்து அவற்றை சுட்டிக் காட்டுங்கள். அவற்றையும் மேம்படுத்துவது தான் தீர்வு. இந்தக் கட்டுரையை இப்படியே விடுவது அல்ல. நீங்கள் விடும் எழுத்துப் பிழைகள் கவனக் குறைவால் வருவன போல் தெரியவில்லை. நீங்கள் விடும் பிழைகளை சுட்டிக் காட்டுவது என்றால், விக்கிபீடியாவில் வேறு வேலையே என்னால் செய்ய முடியாது. எனக்குத் தெரிந்த வரை தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் கூட இதை விட அருமையாக பிழை இல்லாமல் எழுதுவான். தயவு செய்து முதலில் விக்கிபீடியாவுக்கு வெளியே தமிழில் எழுதிப் பழகுங்கள். பிறகு, நல்ல தமிழ் நூல்களை வாசித்துப் பழகுங்கள். இதில் உங்கள் தமிழ் எழுத்து நடை மேம்படும். பிறகு, கட்டுரை எழுதிப் பழகுங்கள். பிறகு, தமிழ் வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் எந்த நடையில் எழுதப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். இவ்வளவு வட மொழிக் கலப்புடன் ஒரு தமிழ் வரலாற்றுப் பாட நூலை நான் பார்த்தது இல்லை. அதற்குப் பிறகு ஒரு வரலாற்றுக் கட்டுரையை நீங்கள் விக்கிபீடியாவில் எழுத முனையலாம். நன்றி. இதற்கு மேல் இந்த உரையாடலில் நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை.

நற்கீரன், கட்டுரையை மேம்படுத்த நீங்களோ விஜயோ முனையாத பட்சத்தில், கட்டுரையை நீக்க வேண்டும் என்று பெரிதும் பரிந்துரைக்கிறேன்.--Ravidreams 09:19, 2 டிசம்பர் 2006 (UTC)

ரவிட்ரீம்ஸுக்கு பதில்:-

"எப்பொழுதுமே நமக்குச் சாதகமாக ஆதாரங்களை காட்ட முடியும். கோட்சே, காந்தி, ஒசாமா பின் லாடன், ஹிட்லர், ஆகியோருக்கு கூட முற்றிலும் மாறுபட்ட இரு வேறு imageகளை ஆதாரங்களுடன் தர முடியும். ஆனால், அவற்றில் ஒன்று தான் சரி என்று நிறுவ முயல்வது தவறு."

ரவி, நீங்கள் சொல்வது கரெக்ட். அதனால் தான், நான் மேல்காட்டியிருக்கும் ஆய்வாளர்கள் அரசியல் வாதிகள் அல்ல, இந்துக்கள் அல்ல, பிராமணர்கள் அல்ல. ஆனால் வடமொழியில் பாண்டித்யம் அடைந்து, பல வருடங்களாக ஆராய்சு செய்து, பிரசித்த பல்கலைகழகங்களில் புரோபசர்கள்.

"ஆனால், எனக்கு கட்டுரை பாதிக்கு மேல் புரியவில்லை" - அப்படியா, வருத்தம் அடைகிரேன்; எது புரியவில்லை என்று சில உதாரணங்கள் கொடுங்கள், மாற்றுகிரேன்.

என் எழுத்து படிக்கும் எவருக்கும் சுலபமாக இருப்பதே, என் எண்ணம், குறிக்கோள்.--விஜயராகவன் 14:42, 2 டிசம்பர் 2006 (UTC)

  • அதாவது முக்கிய தலைப்புக்கள் என்றால் எது வேண்டுமானாலும் எழுதலாம். அதனை நீக்காமல் நம் உரையாடிக் கொண்டிருக்க வேண்டுமா?
  • ஆரியன் என்பதற்கு மிலேச்சன் என்றும் பொருள் உண்டு.
  • விஜயராகவன் பார்வையைத் தவிர வேறெதுவும் கட்டுரையிலில்லை.
  • விஜயராகவன் முன்வைக்க முனையும் பார்வைக்கு என்ன பெயர் நற்கீரன்? விளங்கிக் கொண்டுதான் கட்டுரை இருக்கட்டும் என்கிறீர்களா?
  • நாம் வேறுபடுகிறோம் என்றா நீக்கக் கேட்கிறோம்? அக்கட்டுரை நடுநிலையற்றதென்கிறோம். யாரெல்லாம் வேறுபடுகிறோமென்று பார்த்தா விக்கிபீடியாக் கட்டுரை உருவாக்குவது? நீக்க வேண்டிய பிற முக்கிய தலைப்புக்கள் எவை?
  • இக்கட்டுரை தலைப்புடன் நிற்கிறதா? தலைப்புக்குச் சம்பந்தமற்ற எத்தனை இருக்கின்றன? கட்டுரையே விளங்காத அளவுக்கு எழுத்துப்பிழைகள்.... கட்டுரை விளங்காததால்தான் எதிர்த்து வாக்களித்தீர்களா நற்கீரன்?

கோபி 09:52, 2 டிசம்பர் 2006 (UTC)

கோபிக்கு பதில்:-

மிலேச்சன் என ஒரு கட்டுரை எழுதலாம். 'மிலேச்சா' என்பதே ஆரிய மொழி பதம்தானே. சமஸ்கிருத இலக்கியத்தில் அதற்கு பல பல சுட்டிகள் உள்ளன. அந்தக் கட்டுரையில் உங்கள் கருததையும் ஆதாரத்துடம் வைக்கலாம். நாம் எல்லா 'சப்ஜெச்ட்' களையும் ஒரே தலையில் விவாதித்தால் குழப்பம்தான் வரும் "விஜயராகவன் பார்வையைத் தவிர வேறெதுவும் கட்டுரையிலில்லை" - கோபி, நான் உஙளுக்கு கொடுத்த ஒரு பதிலைக் கூட நீங்கள் படிக்கவில்லை போல இருக்கிரது. நான், ஆய்வாளர், புத்தகப்பெயர், பக்கம் எல்லவற்றையும் கட்டினேனே, அதை ஏன் கண்டு கொள்ள மாட்டீர்கள்? அந்த ஆய்வாளர்கள் சமஸ்கிருத மொழியில் உலக பிரசித்தி பெற்ற வல்லுனர்கள். நான் ஒரு பொழுதும், என் பார்வையை கொடுக்கவில்லை.--விஜயராகவன் 12:49, 2 டிசம்பர் 2006 (UTC)

விஜயராகவன், ஏன் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறீர்கள்? ஆரிய ஆதரவாளர்களின் கருத்துக்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எழுதுவது நடுநிலை ஆகாது. எதிர்க் கருத்துக்களையும் கட்டுரையில் குறிப்பிடவேண்டும். ஆரியச் சார்பு ஆய்வாளர்களில் கருத்துக்களைமட்டும் எடுத்துக்காட்டிக்கொண்டு ஆதாரம் தருகிறேன் என்றால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. நீங்கள் குறிப்பிடுகின்ற ஆய்வாளர்களுக்கு எதிர்க்கருத்துக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை முன்வைப்பவர்களும் புகழ் பெற்றவர்கள்தான். எதுவும் ஐயத்துக்கிடம் இன்றி நிறுவப்படும்வரை விக்கிபீடியா கட்டுரைகள் எல்லாக் கருத்துக்களையும் தாங்கியிருக்கவேண்டும். ஒரு பக்கக் கருத்துத்துக்களை மட்டும் முன்வைத்துக் கட்டுரைகள் எழுதுவது இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. Mayooranathan 14:32, 2 டிசம்பர் 2006 (UTC)
மயூரநாதன், விஜயராகவனுக்கு விளங்காது. இக்கட்டுரையை நீக்குவதன் முன்னர் எதிர்த்து வாக்களித்த நற்கீரனிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பது பொருத்தமாயிருக்கும். இக்கட்டுரையை முற்றிலும் நீக்கியபின்னர் மயூரனின் வரிகளுடன் கட்டுரையொன்றை ஆரம்பிக்கப் பரிந்துரைக்கிறேன். மேலும் ஆரியரையும் வேதங்களையும் போட்டுக் குழப்பிக் கொளாமல் வேதங்கள் பற்றித் தனிக் கட்டுரைகளை தொடங்குவது நல்லது. --கோபி 15:46, 2 டிசம்பர் 2006 (UTC)
மயூரநாதனுக்கு பதில்:-

மயூரநாதன் . இங்கே "ஆதரவு" அல்லது" எதிர்ப்பு" என்றே விஷயம் இல்லை. நமக்கு தெரிந்த வரை சரித்திர ஆதாரங்கள் என்ன சொல்கிரன, அவ்வளவுதான். அது என் விருப்பு, வெறுப்புகளை பொருத்ததல்ல; என் விருப்பு வெறுப்புகளுக்கு வெளியானது. நீங்கள் "ஆதரவு/எதிர்ப்பு" சிந்தனையை விடவேண்டும்--விஜயராகவன் 18:01, 2 டிசம்பர் 2006 (UTC)

மன்னிக்க வேண்டும். அதர்வ வேதம் பற்றி மட்டுமே இன்னும் கட்டுரை ஆரம்பிக்கப்படவில்லை. --கோபி 15:53, 2 டிசம்பர் 2006 (UTC)

இப்ப என்ன செய்யலாம்...[தொகு]

  • தற்காலிகமாக விஜயராகவன் இட்ட கட்டுரை உள்ளடக்கத்தை இங்கே மாற்றி அவரிடம் சுருக்கமான ஒரு பங்களிப்பை எதிர்பாக்கலாம். அவர் அப்படி தரும் பட்சத்தில் அதை நான் புரிய முடிந்தால் புரிந்து, மேம்படுத்த முடிந்தால் மேம்படுத்தி தருகின்றேன். ஏற்றுக்கொள்ள தக்கதாக இருப்பின் பிரதான கட்டுரைப் பக்கத்தில் சேர்க்கலாம். இந்தளவு நான் முயல்வேன். --Natkeeran 03:01, 3 டிசம்பர் 2006 (UTC)
  • விஜய், நீங்கள் எழுதி வரும் ஆரியர் கட்டுரையின் தலைப்பை வேதங்களில் ஆரியர் பற்றிய குறிப்புகள் என்று மாற்றி விட்டால் பாதி சர்ச்சை நீங்கி விடும். உங்கள் கட்டுரையும் வேதத்தை மட்டுமே முதன்மை ஆதாரமாக கொள்வதால் பொருத்தமான தலைப்பாக இருக்கும். தவிர, வேதங்களில் உள்ளது என்று observation மட்டும் தந்தால் இன்னும் 25% பிரச்சினை தீரும். observationஐ கொண்டு inferences எழுத முற்படும் போது தான் வரலாற்றுத் திரிப்பு என்ற முக்கியசர்ச்சை எழுகிறது.--Ravidreams 10:38, 8 டிசம்பர் 2006 (UTC).
ரவி, இரண்டு பாயிண்டுகள்.
முதலில் உங்கள் பெயர் மற்றம் பற்றி - தலைப்புகள் சிறிதாக இருக்க வேண்டும், தேவைக்கு மேலாக நீளத்தை பெரிதாக்க வேண்டாம்.
ஆரியர் என்று இந்தியாவில் மட்டும் பல மக்கள் அழைத்துக் கொள்ள வில்லை. இரானிய உலகிலும் பலர் அப்படி அழைத்துக் கொண்டனர். ஆனால் இந்த இரண்டு நாகரீகங்களும் தனித்தனியாக வளர்ந்தன. இந்த இரண்டு சமதூரக் கோடுகளாக ஓடுகிரன. சமூக, கலாசாரத்தின் ஒரு தளத்திலும் கூடல் இல்லாமல் போகின்றன. அதனால் ஆரியர் என்ற கட்டுரையில் பாரத துணைக்கண்டத்திற்க்கு வெளியே உள்ளவரையும் குறிப்பிடுவது உகந்தது.

இரானிய ஆரியரை குறிப்பிடுவதால், கட்டுரையின் தலைப்பிற்க்கும் ஆதாரப் படுத்தப்ப் படுகிறது.

அதே சமயம் நான் ஏன் இந்திய இலக்கியங்களிலேயே இருக்கும் சாட்சிகளை வைத்தேன் என்றால், தொல்லிரானிய இலக்கியங்களை விட, தொல்பாரத இலக்கியங்கள் பல மடங்கு. மேலும் பாரத சமுதாய வழக்கங்களினால் இந்த இலக்கியங்களில் பிற்கால செருகல்கள் இல்லை. முதலில் அலெக்சாண்டர் பாரசீகத்தை அடிமையாக்கி, பல கலாசார அடையாளங்களை கிரேக்கர் அழித்தனர். அதன் பிறகு 7ம் நூற்றாண்டில், இசுலாமிய அராபியர் பாரசீகத்தை கைப்பற்றி சருதஷ்ட்ற மொழி, கலாசாரத்துக்கு சாவடி கொடுத்தனர், தொல்லிரானிய மிகப் பழைய மொழியை புரிந்து கொள்ள ரிக்வேதத்தின் மொழியை உதவி நாடுகிறனர் ஆய்வாளர்கள். தொல் இரானிய மொழி/சமூகத்தை பற்றி பெரிய கட்டுரையே எழுதலாம். இக்காரணங்களை முன்னிட்டு இந்தியாவில் ஆரியர் பற்றி எழுதுவது சுலபம், தமிழ் படிக்கும் மக்களுக்கு சுவாரசியம் தரும் கூட.--விஜயராகவன் 12:17, 8 டிசம்பர் 2006 (UTC).

விஜய், தலைப்பின் நீளத்துக்கு அளவு கோல் எல்லாம் இல்லை. சுருக்கமாகவும் இருக்க வேண்டும். பொருத்தமாகவும் இருக்க வேண்டும். நான்கு சொற்களுக்கு மேம்பட்ட கட்டுரைத் தலைப்புகள் தமிழ், ஆங்கில விக்கிபீடியாக்களில் உண்டு. இந்தியாவுக்கு வெளியேயும் ஆரியர் என்ற சொல் பயன்படுத்தப்படிருக்குமானால், அதை பற்றியும் போதிய அளவு குறிப்பிட வேண்டும். இந்திய ஆரியரை மட்டும் குறிப்பிட்டு விட்டு கட்டுரைத் தலைப்பாக ஆரியர் என்று வைக்க முடியாது. கட்டுரையின் உள்ளடக்கத்தில் பெரும் மாற்றம் செய்ய இல்லாத பட்சத்தில், கட்டுரையின் முதன்மை ஆதாரமாக வேதங்கள் மட்டும் இருக்கும்பட்சத்தில் வேதங்களில் ஆரியர் பற்றிய குறிப்புகள் என்பது பொருத்தமான தலைப்பே.--Ravidreams 17:41, 8 டிசம்பர் 2006 (UTC)

ரவி - நான் முதல் கட்டுரையில் ஈரானிய ஆரியரைப் பற்றி ஒரு பிரிவையே கொடுத்தேனே, வேத - அவெஸ்தாவின் ஆகாரப் பதிமத்தை சுட்டிக் காட்டி. நான் அதை கண்டுக்கொள்ளவில்ல என சொல்லமுடியாது..--விஜயராகவன் 20:47, 8 டிசம்பர் 2006 (UTC).

ரவி, வேளாண்மை கட்டுரையில் நீங்கள் சொல்வது "வேளாண்மை கட்டுரை உலக நோக்கு உடையது தான்.......... கட்டுரையின் ஒரு பகுதி தமிழ்ச் சூழலை விளக்கி எழுதப்படுகிறது". வேளாண்மை என்ற பொது கட்டுரையில் ஏன் ஒரு பகுதி தமிழ் சூழலாக இருக்க வேண்டும்? வேளாண்மை 7000 வருடமாக உலகம் முழுவதும் நடத்தப் படும் போது, தமிழ் சூழலிற்க்கு தனியாக ஒரு அந்தஸ்து இல்லை.ஆனாலும் அதை நான் ஆட்சேபணை செய்யவில்லை. நீங்கள் தனியாக "தமிழரின் வேளாண்மை" என்றக்க வேண்டும் என சொல்லவில்லை. எனெனில் உங்கள் காரணங்களை கொண்டு உபயோகமான தகவல்களை கொடுத்துள்ளீர்கள். இன்னும் கொடுக்கப் போகிறீர்கள்.அதை ஒப்பிடும் போது, ஆரியர் கட்டுரையில் ஈரானைவிட இந்தியாவிற்க்கு அதிக சொற்களையும் கவனத்தையும் கொடுப்பது தவறில்லை.--விஜயராகவன் 21:14, 8 டிசம்பர் 2006 (UTC).

ஆனால் தலைப்புக்கும் , உள்ளடக்கத்தும் பொருந்தாது என்றால், நான் தலைப்பை வேதகால ஆரியர் என்றாக்கி, இரானிய ஆரியர்களை சுத்தமாக வெட்டிவிடுகிரேன். இரானிய தொன்மைக்கு தனியாக கட்டுரை எழுத வேண்டியதுதான்.--விஜயராகவன் 21:14, 8 டிசம்பர் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:54, 14 மே 2007 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:54, 14 மே 2007 (UTC)[பதிலளி]


முன்னுரை[தொகு]

.

இக்கட்டுரை ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர் என்ற கேள்வியை எடுக்க வில்லை. முக்கியமாக முதலில் சரித்திரத்தில் எப்படி தெரியப்பட்டனர், என்ன செய்தனர், என்ன நம்பினர் என்றுதான் ஒரு அறிமுகம் செய்கிரது. அதனால் அது 2500 வருடங்களுக்கு மேலான வரலாற்று தகவல்களைதான் கொடுக்கிறது. கடந்த 200 வருடங்களில் ஆயிரக் கணக்கான ஆய்வாளர்கள் இந்த தலைப்பில் எழுதியுள்ளனர்; அதனால் ஏகப் பட்ட நூல்களும், கட்டுரைகளும் பல மொழிகளில் உள்ளன.

ஆரியர் யார்[தொகு]

ஆரியர் யார்?.

வேதங்களை இயற்றிய சமுதாயம் ஆரியர் என்று தங்களை கூறிக்கொண்டது. வேத காலத்தில் ரிஷிகளும், கவிகளும், வேத யாகங்களை ஏற்ப்படுத்திய அரசர்களும், அவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களை ஆரியர் என அழைத்தனர். பாரததிற்க்கு வெளியே இரான் பிரதேசங்களில் எழுந்த அவெஸ்தா சமய மக்களும் தங்களை ஆரியர் என அழைத்துக் கொண்டனர். இந்திய நாட்டில் வேத காலத்திலிருந்து எழுந்த சமயங்களும், அதை பின்பற்றுபவர்களும் தங்களை ஆரியர் என அழைக்கின்றனர். புத்த, சமண மத நூல்களும் தங்களை 'ஆரிய' என அழைத்தன. உதாரணமாக புத்த மதம் "நான்கு ஆரிய உண்மைகள்" மற்றும் "எட்டு ஆரிய வழி" எனவும் தெரிய வந்தது. கௌஷிடகி அரண்யகத்தில் (பகுதி 8.9) "ஆரிய நாடு" என்பது "ஆரிய வாக்கு" கேட்கும் நாடு - அதாவது வேத யாகங்கள் நடுக்கும் நாடு என வறை அறுக்கப்பட்டது.

(பார்க்க:M. Witzel http://www1.shore.net/~india/ejvs/ejvs0703/ejvs0703article.pdf Michael Witzel: Autochthonous Aryans ? Evidence from Indian and Iranian texts" Page 3

ரிக்வேதத்தில் ஆரியர் என்பவர் வேத பண்பாடு பற்றியவர் என உறுதியாக தெரிகிறது.

"It is clear that in the India of the oldest Vedic text, the RigVeda, arya was a cultural term (Kuiper, 1955, 1991, Romila Thapar 1968,) indicating speakers of Vedic sanskrit and the bearers of Vedic culture and Vedic Ritual) Page 4.

ரிக்வேத சூக்தங்களில் ஆரியர் என்பவர்களை சரஸ்வதி-சிந்து பிரதேசங்களில் வசித்தவர் மற்றும் சில மத, சமூக வழிகளை பின்பற்றியவர் என்றும் பார்க்கலாம். அந்த மத, சமூக வழிகளை தவிற மற்ற கோட்பாடுகள் (மொழி, உருவம்) ஆரியர் யார் என வரை அறுப்பதில் செப்பமாக இல்லை.

"However the emergence of arya ideology can be traced just as confidentally as the geographic milieu of the Rgvedic hymns, bounded by Indus and saraswathi rivers, and need not be linked to the spread of Indo-aryan languages.Although the language of the Rigveda provides vital evidence for the study of the latter process, it's content do not; the hymns neither use language or race as markers of ethnic affliation, nor referto a home outside South Asia.. Instead of such traits, it's adherence to social and religious norms which was required of the aryas and the ferocity with which they clung to them is a clear indication of the inadequecy of the alternate criteria." Page 3-4 "The Indo-Aryans of Ancient South Asia" ed George Erdosy Chapter 1 Language, material culture and Ethnicity - Theoretical perspectives

சில சொல்லாட்சிகள்.[தொகு]

19ம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பம் பேசும் எல்லோரையும் 'ஆரியர்' என அழைத்தனர். அத மிகப் பெறும் தவறு என அர்த்தத்தை கை விட்டு விட்டனர். பின் கற்காலத்தில் இருந்து ஒரு 'மொழி' பேசுபவர்களுக்கும், ஒரு 'இனத்தார்" உக்க்கும் சம்பந்தம் இல்லை. ஒரு மொழி பேசுபர்கள் பல இனங்களில் உள்ளனர்; அதே போல், ஒரு இனத்திலேயே பல மொழிகளும் உள்ளன. குழப்பங்களை தவிற்க்க இப்பொழுது இவ்வாறு சொல்லாளப்படுகிரது.


இந்தோ-இரானியன் - (புனை) மூல மொழி, அதிலிருந்து வந்த மொழி குடும்பம்.

இந்தோ-ஆரியன் - சமஸ்கிருதம், சமஸ்கிருதத்திலிருந்து வழியாக வந்த வடஇந்திய/பாகிஸ்தானிய/பஙகளாதேச/சிங்கள மொழிகள்.

ஆரியர் - மனித இனம், சமுதாயம்.



அத்தாட்சிகள்.[தொகு]

நமக்கு ஆரியரைப் பற்றி வேதங்களில் இருந்து முக்கியமாக அத்தாட்சி கிடைக்கிறது. அதால் வேத இயல்கள் நமக்கு எப்படி கிடைக்கிறன, வேத இயல்களில் நமக்கு எந்த என்ன தகவல்கள் உள்ளன என கணக்கிடுவது முக்கியமானதாகும். வேதங்கள் வாயால் இயற்றப் பட்டவை , வாய்வழியாக கற்றுக் கொடுக்கப் பட்டவை. வேதங்கள் பல்லாயிக் கணக்கான சூத்திரங்களாகவும் , மேலும் மரபினால் ஒரு சுருதி, சுரம் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன.

(Vedic Hinduism - by Jameson & Witzel - Page 3 "We owe the transmission and preservation of the (vedic) texts to the care and discipline of particular religious, or better , priestly schools (or sakhas). It should also be emphasized that both the composition and the transmission of the texts was completly oral for the entire Vedic period and some considerable time afterwards."

The Developement of Vedic canon and it's schools- The social and political milieu Dr.Michael Witzel , Harvard University Page 2

"the Vedas were composed orally and they always were and still are to some extent oral literature. They must be regarded as tape recordings, made during Vedic period and transmitted orally without the change of a single word. The strictly oral trasmission applies to prose parts as well. Exceptions to this strictly oral tradition are rare. .

Etudes védiques/Louis Renou,Paris: imprimerie nationale 1952 "From the moment it was given the final form, the text was preserved with extraordinary fidelity. Supported by pada recitation and by the more complex methods of recitation which were added to it, preserved by the rigorous phonetic description of which the tradition is set forth in the Ripratikshaya, the Rgveda has come down to us in the same state in which the compilers codified it, without an alteration, without a variant"

வேதங்கள் முக்கியமாக சமய மந்திரங்கள்.- கடவுளை வழிபாடும் மந்திரங்கள் (ரிக்), இயல், பாசுரங்களில் மற்றைய மந்திரங்கள் ( ஸாம, யஜீர், அத்ர்வ வேத ஸம்ஹிதைகள்) வேத (ஸ்ரௌத) பூசனைகள் மற்றும் ப்ராஹ்மணைகள், க்ருஷ்ன யஜுர் வேத ஸம்ஹிதைகள், மேலும் பூசனைக்கு உறைகள். உபநிஷத்துக்கள் முதல் தத்துவ கோட்பாடுளை கொண்டன. ஸ்ரௌத சூத்திரங்கள் பூசனைகளை ஒருமுகமாக செய்கிறது,. மேலும் க்ரஹ்ய சூத்திரங்கள் வீட்டு பூசனைகளையும், தர்ம ஸாஸ்த்ரங்கள் ஆரியர் ஒழுங்கு முறைகளையும் விவரிக்கின்றன.

ரிக்வேதங்களின் ஆர்யர்[தொகு]

ஆரியர் தந்தை வழி வம்ச சமுதாயத்தினர், வர்ணம் என அழைக்கப்படும் சமூக வர்கங்களை (அரசர், புலவர், சாமான்யர்கள்) கொண்டு, கோத்திரம் என்ற வகுப்புகளை கொண்டவர். சில சமயம் ஆரியர் தம்முள் இனக் கூட்டணிகளை உண்டக்கினர். அனு-த்ரஹ்யு, யது-துர்வாசா, புரு-பாரதா, பாரதா- ஸ்ர்ஞ்சயா, ரிக் வேத பத்து-அரசர் கூட்டணி (ரிக்- 7.18) போன்றவை உதாரணங்களாகும்.ஆரிய கூட்டங்கள் தன் மத்தியிலும், ஆரியரில்லாதவரிடனும் போர் தொடுத்தனர். அப்போர்கள் பொரம்போக்கு நில உரிமை காரணமாக ஏற்ப்பட்டன. ரிக்வேதத்தில் 'ஆரியர்' என்ற சொல் 34 மந்திரங்களில் 36 தடவை வந்து, மேற்கொண்ட கூட்டங்களை விவரிக்கிறது.

ஆரியர்கள் பல ஐதீகங்கள் கொண்ட கடவுளரை வணங்கினர் - ஆண் தெய்வம் அக்னி, வாயு, த்யஹு பிதா, ப்ரித்வி, பெண் தெய்வம் உஷஸ், ஆர்யமான், மித்ரா, வருணா, பாகா, இந்திரன். இந்திரன் முக்கியமான போர் கடவுள். இக்கடவுள்கள் பிரபஞ்சத்தையும், அண்ட சராசரங்களையும், மனித வர்கத்தயும் கட்டுப்பாடில் வைத்துள்ளனர். எல்லா கடவுள்களும் ரிதா என்ற "வாய்மை சக்தி"க்கு அடிபட்டவராவார்கள். 'ரிதா' பிற்காலத்தில் 'த்ர்மம்' என்ற கோட்பாடு ஆகியது.

உதாரணம். ரிக் வேதம் 10ம் புத்தகம் 133 அத்யாயம்

இந்திரனே, உன் தயவில் நாங்கள் பணிகிறோம்

எங்களை ரிதா வழியில் துக்கங்களுக்கு அப்பால் இட்டுப் போ.


'தர்மம்' என்ற கருத்து ரிக்வேத 'ரிதா' என்ற கருத்தில் வந்தாலும், இவை சரி சமம் அல்ல.


நிச்சயமாக தர்மம்தான் வாய்மை.

அதனால் சத்தியத்தை பேசுகிறவர் "தர்மத்தை பேசுகிறார்" என்பர்.

தர்மத்தை பேசுகிறவரை 'அவர் வாய்மையை பொழிகிறார்" என்பர்.

அதனால் இரண்டும் ஒன்று.

(ப்ரஹதாரண்யக உபநிஷத் 1.4.14).


கடவுள்கள் வருடாவருடம் அசுரர் என அழைக்கப்பட்ட தன் எதிரிகளுடன் சண்டையிட்டனர். ஆரியர் கடவுள்களை அகலமான பூசனை மூலமாக வணங்கினர் - உதரணம் வருடாந்திர ஸோம யஞைகள். இந்த யஞைகள் பல ஆசார்யர்கள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு நடுவில் பகிரங்கமாக கொண்டாடப் பட்டவை. இப்பூசனைகளில், கடவுள்கள் யஞ்ன பூமிக்கு அழைக்கப் பட்டு, அக்னி குண்டத்திற்கு பக்கத்தில் உட்கார கேட்டுக் கொள்ளப் பட்டனர். அவர்களுக்கு சோம பானத்துடன் மற்ற நைவேத்தியகளை செலுத்திய பின், ரிஷி, விப்ரா, ப்ரஹ்மணர் போன்ற அப்யாசம் செய்த புலவர்கள் அவர்களை போற்றினர். இப்புலவர்கள் தங்கள் செய்யுள்களை (சூக்தங்கள்) நீண்ட நேர எண்ணத்தின் பிறகு இயற்றினர் (த்யானம்); சில சமயம் அதே இட தருணத்திலேயே போற்றும் சுக்தங்களை செய்தனர். சில போற்றல்கள் தங்கள் எஜமானர் மேலும் இயற்றினர் (தனஸ்துதி). வயது கிரியைகள் - கல்யாணம், மரணம் தவிற - இன்னும் பிரபலமாகவில்லை. பாலகர்கள் மரபு அறிவு (வேதங்கள்) கற்று முடித்து, தங்கள் பொருளாதார வாழ்விற்க்கு பசுக்களை சேமித்த பின், ஆதவர் சமுதாயத்தில் சேர்க்கப் பட்டனர்.


அரசியல் ஆக்கம்.[தொகு]

ரிக்வேத மக்கள் முதலில் சிறிய கூட்டங்களாகவே வாழ்ந்தனர். சில தலைமுறைகளுக்குள் குரு பேரரசு, ஆரிய சிற்றரசர்களை உள்ளணைத்து பெரிய ராஜ்ஜியமானது. (அதனால்தால் இன்றும் குருக்ஷேத்ரா என்ற நகரம் தில்லிக்கு அருகில் உள்ளது). வேத காலத்தில் பாரதர் என்ற ஆரிய கூட்டத்தினர் ஆரியர்களுடையே மிக பிரபலமாகினர். பாரதர்களின் மிகப் பெரிய அரசன் சுதாஸ். பாரதர்களை விவரிக்கும் ரிக் வேத சுட்டிகள்.

புத்தகம் 1 . 96.3; பு.2 . 7.1, 5; 36.2; பு3. 23.2; 33.11, 12; 53.12, 24; பு4. 25.4; பு5. 11.1; 54.14; பு6.16.19, 45; பு7.8.4; 33.6.

பாரதர்கள் புரு குலத்தினரின் ஒரு கிளை. புருக்களைப் பற்றியும் பல ரிக்வேத சுட்டிகள் உள.

பு1.59.6; 63.7; 129.5; 130.7; 131.4; பு2.21.10; 38.1, 3; 39.2; பு6.17.1; பு6.20.10; பு7.5.3; 8.4; 18.13; 19.3; 96.2; பு8.64.10; பு10.4.1; 48.5.

பாரத அரச வம்சத்து சந்ததியினர்..

பாரதன்.

தேவவாதன்.

ஸ்ர்ஞயன்.

வத்ரையஸ்வன்.

திவோதாஸன்.

ப்ரதர்தனன்.

பிஜவனன்.

சுதாஸ்.

சகதேவன்.

சோமகன்.

இதைத்தவிற மற்ற சிற்றரசர்கள் பெயர்களும், பட்டியளும் ரிக்கில் உள.


வேதகால இலக்கியங்கள்[தொகு]

வேதங்கள் - சடங்குகள்..

ப்ரஹ்மணை - சடங்குகளுக்கு உரைகள்..

அரண்யகம் - உரைகளில் இருந்து இன்னும் சில கருத்துகளை வளர்கிறது, காலாகாலத்தில் ஒரு கிளையின் மற்ற உரைகளும் இதில் அடங்கும்.

உபநிஷத் - இன்னும் சில கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வளர்க்கிறது.

சூத்திரங்கள்- வழிபாடு, ஆசனமங்களுக்கு அறவழக்கங்களை கொடுக்கிறது.




சுட்டிகள்:

1.A VEDIC READER For Students By Arthur Anthony Macdonell http://www.sacred-texts.com/hin/vedaread.htm .

2.The Rig Veda Translated by Ralph T.H. Griffith, 1896 http://www.sacred-texts.com/hin/rigveda/index.htm.

3.M. Witzel "Autochthonous Aryans? Evidence from Indian and Iranian texts" http://www1.shore.net/~india/ejvs/ejvs0703/ejvs0703article.pdf.

4.J. Bronkhorst & M.Deshpande, Aryan and Non-Aryan in South Asia.

5.Talageri, Shrikant, Rigveda. A Historical Analysis. New Delhi: Aditya Prakashan 2000.

6.Thieme, Paul. Der Fremdling im Rigveda. Leipzig 1938.

7.Erdosy, George.(ed.). The Indo-Aryans of Ancient South Asia. .

8.Oldenberg, Hermann. Die Hymnen des Rigveda, Band I. Metrische und textgeschichtliche Prolegomena, Berlin : Wilhelm Hertz 1888.

9.Oldenberg, Hermann Der vedische Kalender und das Alter des Veda. ZDMG 48, 629 sqq.

10.Rau, Wilhelm. Staat und Gesellschaft im alten Indien nach den Brahmana-Texten dargestellt, Wiesbaden: O. Harrassowitz 1957.

11.Rau, Wilhelm , Zur vedischen Altertumskunde, Akademie der Wissenschaften zu Mainz, Abhandlungen der Geistes- u. sozialwissenschaftlichen Klasse 1983, No. 1. Wiesbaden : F. Steiner 1983 .

12.Jamison, S. and M. Witzel: Vedic Hinduism. In: A. Sharma (ed.), Studies on Hinduism.

13.G. Erdosy (ed.) The Indo-Aryans of Ancient South Asia.

14.M. Witzel (ed.), Inside the Texts, Beyond the Texts. New Approaches to the Study of the Vedas.

15.Parpola, Asko. The coming of the Aryans to Iran and India and the cultural and ethnic identity of the Dasas, Studia Orientalia (Helsinki) 64, 1988, 195-302.

16.M.Witzel-, On the localisation of Vedic texts and schools (Materials on Vedic Såkhås, 7). G. Pollet (ed.), India and the Ancient world. History, Trade and Culture before A.D. 650. P.H.L.

17.M.Witzel- The Development of the Vedic Canon and its Schools: The Social and Political Milieu. (Materials on Vedic Srauta s 8). In: Inside the Texts, Beyond the Texts.

18.M.Witzel ---, The Home of the Aryans. In: Anusantatyai. Fs. fur Johanna Narten zum 70. Geburtstag, ed. A. Hintze & E. Tichy. (Munchener Studien zur Sprachwissenschaft, Beihefte NF 19) Dettelbach: J.H. Röll 2000, 283-338 .

19.Edwin Bryant The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate.

20.Edwin Bryant Indo-Aryan Controversy: Evidence and Inference in Indian History.

21. Louis Renou - Vedic India Translated from French by P.Spratt

Pranava Veda[தொகு]

Hi friends I do not understand tamil, do you know any details about Pranava Veda, written by Brahmarishi Mayan? the 5th Veda, do you know any details BalanceRestored 07:27, 12 ஜூலை 2007 (UTC)

மொகஞ்சதாரோ மற்றும் சிந்து என்று சொல்லப்பட்ட ஹரப்பா ஆகியவற்றில் நாகரிகத்தின் கடைசி சிறப்பான காலம் கி.மு.2500ம் ஆண்டாக கருதப் படுகிறது. ஆனால் இக்காலங்களில் ஆரியர்கள் இந்தியாவில் இருந்திருக்கவில்லை. அப்போது வாழ்ந்தவர்கள் திராவிடர்களும், கிராதர்கள் எனச் சொல்லப்படும் மங்கோலிய முகஜாடையுடன் இருக்கும் ஒரு இனமும் மட்டுமே! இந்த இரண்டு இனத்தவர்களும் கருமை நிறத்தவர்களாக இருந்தனர். பின்னர் வந்த வெள்ளை நிறத்து ஆரியர்களால் இவர்கள் செய்த போர் ஒரு நிற அடிப்படையில் நடை பெற்றதாகக் கூடச் சொல்லலாம். இது ஒரு நிற பேதத்தை இரண்டு கூட்டத்தினருக்கும் கொடுத்தது. இதனாலேயே வர்ணம் (நிறம்) என்ற அடிப்படையில் மக்கள் நான்காக பிற்காலத்தில் பிரிக்கப் பட்டார்கள். இதிலிருந்து தோன்றியதுதான் வர்ணாச்சிரம முறையாகும்


சிந்து நாகரீகத்தின் இறுதிக் கட்டமான கி.மு.2500 ஆண்டிற்கு பின்னர் ஆயிரம் ஆண்டுகளில், அதாவது கி.மு.1500ம் ஆண்டளவில் ஆரியர்கள் சிந்துப் பகுதியில் பிரவேசித்தார்கள். இப்படிப் பிரவேசித்த ஆரியர்கள் பாரதத்தின் அண்மை நாடான ஈரானிய நாடிலிருந்து பெரும் பகுதியாக வந்தவர்களாகும். ஈரானியர்களுக்கும், பாரதத்தில் குடியேறிய ஆரியர்களுக்கும் பலமான இரத்த உறவிருந்ததை பல ஆரய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஈராணியருக்கு 'ச' என்னும் எழுத்தின் உச்சரிப்பு வாயில் நுழையாது. அவர்கள் அதை 'ஹ' என்றே உச்சரிப்பார்கள். அதனால் 'சி' என்பது அவர்களாஇ 'ஹி' என்றே உச்சரிக்கப் படலாயிற்று. இதனால் 'சிந்து' என்று சொல்லப்பட்ட இடம் அவர்களால் 'ஹிந்து' என உச்சரிக்கப் படலாயிற்று.

இந்த ஆரியர்கள் குடியேறிய இடம் 'ஏழு நதிகள்' எனப் பொருள் படக் கூடிய 'சப்த சிந்து' என்னும் நிலப் பகுதியேயாகும்.

-லீனாரோய்- --62.180.240.240 10:38, 26 ஆகஸ்ட் 2008 (UTC)