பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 4

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்த்துக்கள்[தொகு]

ரவி, தமிழ் விக்கிபீடியாவுக்கு, நீங்கள் செய்யும் சேவையை எண்ணி வியக்கிறேன். தங்களின் சேவைக்காக, தமிழ் ரசிகர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். வலைப்பதிவு மற்றும வலைமனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறேன். முடிந்தவுடன் தெரிவிக்கிறேன். மற்ற அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களும் --ஜெயராமன் 11:56, 23 நவம்பர் 2006 (UTC)

Bot status[தொகு]

Ravi, I've granted bot status to that user. -- Sundar \பேச்சு 11:25, 9 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


நிரோஜன்[தொகு]

தாங்கள் 2 நவம்பர் அன்று அனுப்பிய மெயிலைப் படிக்க முடியவில்லை யுனிகோட்டிற்கு மாற்றியும் அவ்வெழுத்துக்களைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்ன காரணம்.--சக்திவேல் நிரோஜன் 20:03, 9 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்கி விடுப்பு[தொகு]

ரவி, விக்கி விடுப்பு என்னாயிற்று? :-) பெரிய தொகுப்புக்கள் செய்யாவிடினும் பேச்சுக்களில் பங்கெடுப்பதைத் தொடர்வது நன்று. காரணம் நீக்கற் பதிவுகளுக்கு உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் தேவைப்படுகிறது என்று நினைத்துவிடாதீர்கள் :-)0 தரக் கட்டுப்பாட்டைப் பேண மிகவும் பரிச்சயமுள்ள பயனர் சிலரது தொடர்ச்சியான அவதானிப்பு அவசியமாகிறது. நன்றி. --கோபி 18:29, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நான், சுந்தர், நற்கீரன் எல்லாம் அடிக்கடி விக்கி விடுப்பு விட நினைச்சு தோத்துக் கொண்டிருப்பவர்கள். பேசாம விடுப்புக்கே விடுப்பு விட்டு விடலாம்னு நினைச்சுக்கிட்டிருக்கேன் ;). அதுக்குள்ள நீங்க குத்தி காமிச்சுட்டீங்க..ஆமா, தரக் கண்காணிப்பாகவும், புதுப் பயனர்களுக்கு உதவுவதற்காகவும் தான் விடுப்பு அறிக்கையை புறக்கணிக்க வேண்டி இருக்கு. --Ravidreams 18:54, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நான் குத்திக் காமிக்கல (அட தமிழக வழக்கு) ரவி, நான் விடுப்பெல்லாம் அறிவிப்பதில்லை என்ற முடிவுக்கு முன்னரேயே வந்துவிட்டேன். அண்மைய மாற்றங்கள் என்ற ஒன்று இருப்பதால் வந்த வினை. :-) எனக்குப் பங்களிக்கவே முடியாத நிலை வரும்போதுதான் அல்லது நூலகம் போன்ற வேறு ஆர்வங்களில் கவனம் சென்றால்தான் விடுப்பெல்லாம் சாத்தியமாகும். --கோபி 18:59, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

செய்தி தகவல்கள்தான்[தொகு]

ஆமாம் ரவி, செய்தி தகவல்கள் தான். பொதுவாக் இங்கு இணையம் மூலமே செய்திகள் பெறுவார்கள். As they say news from the wire. பல மூத்த தமிழ் மக்கள் இணையத்தை விட வானொலியையே கேட்பது வழக்கம், அத்தோடு ஈழத்தமிழர்களுக்கு தொ.கா விட வானொலி மீது சற்று கூடிய பிரியம்! எனவே, பொதுவாக செய்திகள் மொழிபெயர்ப்பு, மற்றும் ஊடகப்பெயர்ப்பு தான். --Natkeeran 14:15, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா செய்திகள் இப்படி பிற ஊடகங்களில் கவனிக்கப்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம். தெரியபட்டுத்தியமைக்கு நன்றி. நடப்பு நிகழ்வுகள் குறித்து நாம் அதிகம் எழுத வேண்டிய அவசியத்தை இது சுட்டிக்காட்டுகிறது.--Ravidreams 14:21, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
ரவி விக்கியின் பலம்களில் ஒன்று இதுதான். BBC போன்ற செய்தி நிறுவனங்கள் விக்கி நுட்பத்தை வைத்துதான் தங்களது தளங்களை நிர்வாகிக்றார்கள். எல்லா செய்திகளையும் இடுவது தற்சமயம் சாத்தியம் அற்றது, ஆனால் முக்கிய செய்திகளின் எ.கா: சுனாமி, கற்றீனா, பெரிய யுத்த சம்பவங்கள் போன்றவற்றை நாம் எல்லோரும் சேர்ந்து தகவல்களை கோர்த்தால் நன்று. வலைப்பதிவுகளை விட விக்கி முறைதான் இதற்கு பொருத்தம். --Natkeeran 14:42, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

ரவி, தகவலுக்கு மிக்க நன்றி. சுந்தர்பொட் (தமிழக வழக்கு -சுந்தர்பாட் :-)) இனது செயற்பாடு என்ன என்பது இதுவரை எனக்குத் தெரியாதிருந்தது. நான் தொடர்ந்தும் நேர விரயம் செய்யதிருக்க உங்களது சுட்டிக்காட்டுதல் நிச்சயம் உதவும். நன்றி. மேலும் ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்க் கட்டுரைகளுக்கான இணைப்பு அவசியம் கொடுத்தல் வேண்டும். அங்கிருந்து பல பயனர்கள் வருகிறார்கள் என்பதை அவதானித்தத்தாலேயே அமெரிக்க மாநிலங்களைப் பற்றிய குறுங் கட்டுரைகளை உருவாக்கினேன். தமிழகத்தவர் பலர் அங்கிருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் அக் கட்டுரைகளை வாசிக்கும் போதாவது தமிழ்விக்கிபீடியாவை அறிந்துகொள்ளட்டும் என்று நினைத்திருதேன். ஆனால் ஆங்கில விக்கியில் இனும் இணைப்புக் கொடுக்கவில்லை. அதுவும் தானியகிகளால் நடக்குமென்றால் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்வேன். நன்றி. --கோபி 18:45, 13 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, நான் எந்த இடத்தில் அவ்வாறு செய்தேன் என்பதைச் சுட்டிக் காட்டுங்களேன். ஏனென்றால் முதல் வரியில் படிமத்துக்கு அடுத்து இடம் விட்டுள்ளதா இல்லை என்பதைத் தொகுப்புப் பார்வையில் தான் காண முடியும். ஆதலால் வேறு ஏதாவது ஒரு மாற்றஞ் செய்வதற்காகவே தொகுக்கத் தொடங்கினேன் என்பதை விளங்கிக் கொள்ளலாம். நிச்சயமாக ஒரு இடைவெளி விடுவதற்காக தொகுத்திருக்க வாய்ப்பில்லை.... --கோபி 16:30, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
ரவி மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. :-) நமக்குள் அதுவெல்லாம் வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒன்று உண்மை. நான் கட்டுரையொன்றில் சிறு தவறைக் கண்டால் அதனை மட்டும் தொகுத்துப் பக்கத்தை உடனடியாகச் சேமிப்பதே வழக்கமாயிருக்கிறது. முழுமையாக மாற்றங்களைச் செய்து சேமிப்பதே சரியானது. ஆனால் என் இணைய இணைப்பு சில சமயம் குழப்படி செய்வதால் பெருமளவு மாற்றங்களை ஒரேயடியாக online இல் செய்வதில்லை. மேலும் கட்டுரைகளையும் online இல் எழுதுவதில்லை.... வேகமானதும் நிரந்தரமானதுமான இணைய இணைப்புக் கிடைத்த பின்னரேயே என்னை மாற்றிக் கொள்வது இலகுவானதாயிருக்கும். :-) நன்றி. --கோபி 16:41, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

முதல் பக்க வடிவமைப்பு நன்று.[தொகு]

--Natkeeran 17:10, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

எந்த முறை சிறந்தது?[தொகு]

முறை 1

<ref> Ref1 </ref> 
மேற்கோள்கள்
<references />

முறை 2

{{ref|caeconomy}}
# {{note|label1}}

எந்த முறை சிறந்தது?

ரவி, உங்கள் கருத்துக்களை தந்தால் நன்று. --Natkeeran 19:21, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

See my replies at பேச்சு:அடூர். -- Ganeshk 19:22, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


நன்றி[தொகு]

எழுத்துப்பிழைகள் அதிகம் தான். எனது எ-கலப்பை ஒருமுறை தட்டினால் சில பல எழுத்துக்களை இட்டுவிடுகிறது. பின்பு அவற்றை தேடி சரிசெய்யும் போது பல விடுபடுகிறது தான். இனிமேல் கவனித்து செய்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 11:52, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை?[தொகு]

கரு - idea
கருத்து - comment
கருத்தியம் - idealism
கருத்தியல் - ideal
கருத்துலகு - the world of idea
கருதுகோள் - hypothesis VS CONCEPT
கருதுதல் - having an opinion
கருத்துருவாக்கம் - forming or shaping an opinion
எண்ணக்கரு - thought ??
சிந்தனை - thought
சிந்தை - மனம், மூளை
சிந்தித்தல் - thinking

இங்கு கருதுகோள் என்று பொதுவாக எதைக் குறித்து நிற்கின்றது. Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை? நன்றி. --Natkeeran 20:28, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

re: note , request[தொகு]

ganesh, unless it is a controverisal page with some content, u need not nominate it for deletion. just a leave a note for deletion in the talk page. that will be enough.--Ravidreams 10:55, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Can a speedy deletion template be created that I can add to the article page? This will allow these to be categorized. I don't want the deletion request to be lost in the recent changes list.

also could you give us a link to relevant help page for using AWB or help create such a guide? it will be useful for people like me, gopi, balaji who are active in organising this site. Thanks--Ravidreams 11:06, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Steps and tips to use AWB:

  1. Download the software by following link at AutoWikiBrowser page.
  2. Register for the software. Register using your regular account. This will be need a account with the same name to exist in English wiki.
  3. AWB can be used to do automatic edits. It is recommended a seperate bot accont be created for use in AWB. This keep the bot contributions seperate from your regular account. You need to register this one too, but little differently as explained in step #7. Create RaviBot in Tamil and English wikis.
  4. AWB works using the logged-on account in IE. So use the bot account with IE, use FireFox for your regular account. This way you don't have to keep logging-off and logging-back in.
  5. File - User project preferences. Select "ta" here for language. And also do, File - login.
  6. Read the User manual. It is not complicated. You normally start with a list of articles. The list can be generated using a category, text file etc.
  7. Automatic edits: Let us say you have to fix 1000 articles. AWB can run in a automatic-mode for doing this. Get your bot account registered as a bot and added under "bots" section of the register page. This will enable a "Auto" check box (that is pretty cool).

Feel free to ask more questions. The disclaimer reads on the top of the AWB page: "AutoWikiBrowser is not an automatic bot — edits made using this software are the responsibility of the editor using it." :)

Regards, Ganeshk 16:17, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

I created வார்ப்புரு:Replaceable fair use. Can you please translate it? I want to know what you feel about enforcing it. There needs to be a increased awareness of the copyright violations of fairuse photographs. Regards, Ganeshk 07:19, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

சில நல்ல கட்டுரைகள்[தொகு]

--Natkeeran 01:03, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Thank you[தொகு]

Thank you Ravi for the welcome. It's been very long time and though I've been checking ta-wiki once in a while, I'm totally out of touch as a contributor. So I'd like to start fresh and I don't want to perform admin actions until I become active user again and get used to the conventions here. Also, I prefer the new username because I use this across all wikimedia projects nowadays. Thanks again : ) SriniG 11:03, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

உதவி தேவை - தமிழாக்கம்[தொகு]

'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --கேரளத் தமிழன் 23:10, 29 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி --கேரளத் தமிழன் 06:18, 5 டிசம்பர் 2006 (UTC)

Good to see you get started with AWB. It's an awesome piece of software. It has a lot of features that work when you right-click (context menus). Like you can save the article list to a file and load the list back at a later time. So remember to right click on the article list and then remember to right-click to clear namespace checkboxes.

I read your post on WP:AM. You are very welcome! Glad to have been of help. -- Ganeshk 03:39, 2 டிசம்பர் 2006 (UTC)

May be you can help translate the AWB user manual to tamil? :) -- Ganeshk 03:41, 2 டிசம்பர் 2006 (UTC)

சிறப்பு பக்கங்களை தொகுப்பது[தொகு]

ரவி கோப்பைப் பதிவேற்று பக்கத்தை மேம்படுத்த வேண்டும். எப்படி செய்யலாம்? நன்றி. --Natkeeran 03:34, 5 டிசம்பர் 2006 (UTC)

மேலும், நிரோஜன் தமிழில் எழுத அல்ல தட்டச்சு செய்ய என்று முன் பக்கத்தில் சேர்த்தல் நன்று என்று அவரது பேச்சு பக்கத்தில் ஆலோசனை தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பக்கத்தை ஒருமுறை கவனிக்கவும். நன்றி. --Natkeeran 03:40, 5 டிசம்பர் 2006 (UTC)


Ok I will do that. --டெரன்ஸ் \பேச்சு 12:10, 5 டிசம்பர் 2006 (UTC)

article request[தொகு]

I will do it to night itself --டெரன்ஸ் \பேச்சு 12:10, 5 டிசம்பர் 2006 (UTC)

திரைப்படங்கள்[தொகு]

படிமங்களை பதிவேற்றியிருக்கிறேன்! பாலாஜி 06:38, 7 டிசம்பர் 2006 (UTC)


ஊடகம்[தொகு]

wav. mp3 wmp ஊடக கோப்புகளை .ogg கோப்புகளாக எப்படி மாற்றுவது என்னிடம் mp3 பாடல் உள்ளது அதை நேரடியாக விக்கியில் ஏற்ற முடியுமா?--டெரன்ஸ் \பேச்சு 14:34, 7 டிசம்பர் 2006 (UTC)


[ERROR] Connection to irc://freenode/ (irc://irc.freenode.net/) timed out. Reconnecting in 1 minute. சட் சில்லா இப்படி சொல்கிறது--டெரன்ஸ் \பேச்சு 16:14, 7 டிசம்பர் 2006 (UTC)

நாட்குறிப்புகள்[தொகு]

ரவி, அனேகமான நாட்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. டிசம்பர் மாதக் கட்டுரைகள் முடிந்ததும் தினமும் ஒன்றிரண்டாக மேம்படுத்த உத்தேசம். எனது பெயர் சிறீதரன். தந்தையின் பெயரான கனகரத்தினம் என்ற பெயரோடு தமிழ்மணத்துக்காக உருவாக்கிய பெயர் kanags. அதுவே நிலைத்துவிட்டது. நீங்கள் உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் அழைக்க இத்தால் அனுமதி தருகிறேன்.:)--Kanags 22:23, 9 டிசம்பர் 2006 (UTC)

விதயம், குமுகம், குமுகாயம்[தொகு]

எங்கே வளிவில் இருந்து பெற்றிருப்பீர்களோ...இராம.கி நேரடியாக இங்கு பங்களிக்காதது ஒரு குறையே. ஏன் என்று தெரியவில்லை. --Natkeeran 03:44, 10 டிசம்பர் 2006 (UTC)

வளவு

அய்யாவழி[தொகு]

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள். [1]. - வைகுண்ட ராஜா 18:47, 2 ஜனவரி 2007 (UTC)

Hi Ravidreams, please take a look at this. Regards, --Flominator 10:42, 13 ஜனவரி 2007 (UTC)

Donation template[தொகு]

Ravi, The fund-drive is over. The template can be removed now. Regards, Ganeshk 00:35, 22 ஜனவரி 2007 (UTC)

Please remove it from மீடியாவிக்கி:Anonnotice too. Thanks, Ganeshk 23:48, 24 ஜனவரி 2007 (UTC)

வருக[தொகு]

மீண்டும் வருக ரவி. உங்களுக்கான பணிகள் ஆங்காங்கே காத்திருக்கின்றன. :-) --கோபி 19:46, 24 ஜனவரி 2007 (UTC)

உதவி தேவை[தொகு]

  • பயனர்:Ganeshbot/Translation needed/TN towns பக்கத்தில் மொழிமாற்றத்தை பூர்த்தி செய்வதில் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:12, 27 ஜனவரி 2007 (UTC)

நிர்வாகப் பொறுப்பு[தொகு]

நன்றி ரவி, ஆனால் என்னால் இப்பொறுப்புகளை இப்பொழுது ஏற்க இயலாது, மன்னிக்கவும்--செல்வா 11:58, 1 பெப்ரவரி 2007 (UTC)

Re:admin access[தொகு]

Ravi, Thanks for your consideration. I am currently in a self-imposed wikibreak. I temporarily came out of it for finishing a couple of tasks pending here in tawiki. I will check back with you once I am fully back to the wiki world and ready for the admin nomination. Thanks again, Ganeshk 15:44, 1 பெப்ரவரி 2007 (UTC)

நிர்வாகி அணுக்கம்[தொகு]

கோபி, இரவி இருவருக்கும் நன்றி.நான் தொடர்ந்து விக்கியில் செயற்பட வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. அதனால் நிர்வாகி அணுகத்துக்கான வாகெடுபுக்கு நான் சம்மதிக்கிறேன். நான் இன்று முதல் மார்ச் 10 வரை இலங்கைக்குச் செல்கிறேன் அதனல் ஒருமாதமளவுக்கு விக்கியில் பங்களிப்பு குறைவாக அல்லது பூச்சியமாகவே இருக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 00:06, 2 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, ரவி, உமாபதி அனைவருக்கும் நன்றிகள். நிர்வாக அணுக்கத்தை ஏற்பதால் தமிழ் விக்கிபீடியாவுக்கும் மற்றைய பயனர்களுக்கும் பயன் ஏற்படும் என்றால் இப்போது அதனை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நீங்கள் அனைவரும் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி.--Kanags 11:37, 2 பெப்ரவரி 2007 (UTC)

இந்தியப் பயணம்[தொகு]

உங்களுடைய இந்தியப் பயணம் எப்படி? நீங்களும் இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிந்திருந்தால் நாங்கள் நேரடியாகச் சந்திக்க முயற்சித்திருக்கலாம். டிசம்பர் 12 தொடக்கம், ஜனவரி முதல் தேதிவரை நானும் சென்னையில் இருந்தேன். Mayooranathan 11:31, 2 பெப்ரவரி 2007 (UTC)

ரவி நான் நீ கொடுத்த நகர்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை. --Sivakumar \பேச்சு 10:19, 3 பெப்ரவரி 2007 (UTC)

மிக்க மகிழ்ச்சி இரவி. மிக்க மகிழ்ச்சி இரவி. உமது புகைப்படங்களை கூடிய விரைவில் பதிவேற்றுக. --Sivakumar \பேச்சு 11:51, 5 பெப்ரவரி 2007 (UTC)

அதிகாரி அணுக்கம்[தொகு]

இன்னும் இருவரை தமிழ் விக்கிபீடியாவில் அதிகாரி ஆக்கினால் நல்லது என்று நினைக்கிறேன். ஏற்கெனவே உங்களுடைய பெயர் முன்மொழியப் பட்டது ஆனால் தவறிவிட்டது. மீண்டும் முன்மொழிவதில் ஆட்சேபனை இருக்காது என எண்ணுகிறேன். அத்துடன் நற்கீரனையும் அதிகாரி அணுக்கத்துக்கு முன்மொழியலாம். Mayooranathan 11:37, 2 பெப்ரவரி 2007 (UTC)

மேலதிக அதிகாரிகள் அவசியமே. நீங்களும் நற்கீரனும் முன்மொழிவை ஏற்றமைக்கு நன்றிகள். --கோபி 16:10, 2 பெப்ரவரி 2007 (UTC)


ரவி, தமிழ் விக்கிபீடியா பயனர்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு அதிகாரி அணுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பு தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளது. இப்போது வழங்கப்பட்டுள்ள புதிய அணுக்கம் உங்கள் பங்களிப்புக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை. வாழ்த்துக்கள்.

உங்கள் அணுக்கத்தை சோதித்துப் பார்ப்பதற்காக கனக்ஸ், டெரன்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு நிர்வாகி அணுக்கத்தை வழங்குங்கள். Mayooranathan 18:27, 9 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, அதிகாரியானமைக்கு வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடரட்டும். --Umapathy 00:13, 10 பெப்ரவரி 2007 (UTC)

வாழ்த்துக்கள்|--கோபி 01:38, 10 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி, உமாபதி, கோபி.--Ravidreams 11:54, 10 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்கள்[தொகு]

ரவி, வார்ப்புரு:cc-by-sa, vaarppuru:PD-self ஆகியனவே உங்களது படிமங்களுக்குப் பயன்படுத்தக் கூடியவையாக இப்போது உள்ளன. வேறு cc உரிமங்கள் இனித்தான் உருவாக்கப்பட வேண்டும் என்றே தெரிகிறது. பார்க்க பகுப்பு:படிமங்கள் --கோபி 16:07, 11 பெப்ரவரி 2007 (UTC)

ரவி நேரங் கிடைக்கும்போது இங்குள்ள உரிமமற்ற படிமங்களைப் பொதுவிலுள்ள படிமங்களால் பிரதியீடு செய்யலாம். அவசரமில்லையெனினும் படிப்படியாக அதனைச் செய்து முடிக்கலாம் என்றே தோன்றுகின்றது. --கோபி 17:16, 11 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ்விக்கிப்பீடியா வலைப்பதிவு[தொகு]

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.--செல்வா 16:22, 12 பெப்ரவரி 2007 (UTC)

கட்டுரைத் தமிழ் நடை[தொகு]

ரவி, நான் இந்தத் தலைப்பில் குறிப்பிடத்தக்க குறிப்புக்கள் (கட்டுரைகள், "உரைநடை வரலாறு" நூல்) சேகரித்துள்ளேன். அவை மூலம் தமிழ் உரைநடை வளர்ச்சியின் பல காலகட்டங்களையும், குறை நிறைகளையும் அறியக்கூடியதாக உள்ளது. செய்தி தமிழ் நடை யாரால் தோற்றுவிக்கப்பட்டது, அதன் எல்லைகள் யாவை பற்றி பின்னர் தெரிவிக்கின்றேன். எல்லா விடயங்களிலும் நாம் ஊடகங்களின் போக்குக்களுடன் ஒத்து போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்லதல்ல. மேலும் பின்னர்...

பார்க்க: http://natkeeran.blogspot.com/

--Natkeeran 19:32, 14 பெப்ரவரி 2007 (UTC)

திசைச் சொற்கள்[தொகு]

செந்தமிழ் தவிர்ந்த வட்டார மொழிச் சொற்களையே திசைச் சொற்கள் என்று தொ.கா. குறிக்கப்படுள்ளதாக ஒரு ஆய்வுக் கட்டுரையில் படித்தேன். எனவே திசைச் சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை என்று சொல்ல முடியாது என்று நினைக்கின்றேன். கமில் ஸ்வெலபில் ஜனவரி 1962 எழுதிய தமிழின் வட்டார மொழிகள் என்ற கட்டுரையிருலிருந்து: நூல்: வ. விஜயபாஸ்கரன் தொகுத்தது. (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம்.

--Natkeeran 03:45, 15 பெப்ரவரி 2007 (UTC)

கொஞ்சம் தமிழ் இலக்கணம் மறந்துடுச்சு நற்கீரன் :). திசைச் சொற்களிலும் பல வகை உண்டு நினைக்கிறேன். அவற்றில் வட்டார மொழி தவிர்ந்த சொற்களும் இருக்குன்னு நினைக்கிறேன். இல்லை, வட்டாரச் சொற்கள் தான் திசைச் சொற்கள் அப்படின்னா ரொம்ப நல்லதா போச்சு. ஏன்னா, இந்த திசைச்சொல் விதியைச் சுட்டித் தான் பலரும் பிற மொழிச் சொற்களை திணிக்கிறார்கள்.--Ravidreams 04:09, 15 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் திசைச் சொற்களை ஏற்றுக்கொண்ட மொழிதான். ஆனால் தமிழ்ப்படுத்தித்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஜாதி என்பதை ஏற்கும் போது சாதி என்று எழுதுவதே பொருத்தமானது என்பது போல. இது தொடர்பான விதிகள் தற்சமம், தற்பவம் என்று இருவகையாக உண்டா? எங்கோ படித்த ஞாபகம். இலக்கணம் முறையாகக் கற்றோர் தான் கூற வேண்டும். --கோபி 17:04, 16 பெப்ரவரி 2007 (UTC)
தமிழ் மொழி வேர் சொற்கள் நிறைய கொண்ட மொழி. எப்படி புதுச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதற்கு பழைய இலக்கணமும் உண்டும், புதிய கையேடுகளும் உண்டு. தமிழின் சிறப்பு என்னவென்றால் சொற்களை உணர்ந்து புரிய முடியும். அதாவது வேர் சொற்களை நாம் அறிந்திருக்கும் பொழுது அவற்றிலிருந்து எழும் சொற்களை உணர்ந்து புரிய முடியும். சின்ன வயதில் தமிழ் படிப்பது சுலபம், ஏன் என்றால் தமிழ் பல வழிகளில் ஒரு சீரான (regular) மொழி, ஆனல் அதன் இலக்கணம் சிக்கலானது. சின்ன வயதில் இலக்கணத்தை எம்மை அறியாமல் உள்வாங்குபவது சுலபம். சீன மொழி பற்றி சற்று மேலோட்டமாக சில கட்டுரைகளை படித்த பின்னர்தான் தமிழின் சிறப்பு மேலும் மேலும் புலப்படுகின்றது. உணர்ந்து சொற்களை உருவாக்கும் தன்மை எல்ல மொழிகளுக்கும் இல்லை. எடுத்துக்காட்டக சீன மொழியில் ஒரு சொல் ஒரு கருத்தை (குறைந்த பட்சம்) குறித்து நிற்கும். அதை சேர்த்து வேறு ஒரு சொல் உருவாக்கினால் அதன் பொருளை இலகுவில் உணர்ந்து கொள்ள முடியாது. அலட்டல் பின்னர் தொடரும்....--Natkeeran 17:27, 16 பெப்ரவரி 2007 (UTC)

நன்றிகள்[தொகு]

எனது பயனர் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் இட்ட குறிப்புக்களுக்கு நன்றி, நான் எழுதிய கட்டுரைகளிற் பல தொடக்கக் கட்டுரைகள் தான். சராசரியாக 3000 - 4000 பைட்டுகள் என்ற குறியை வைத்துத்தான் எழுதினேன். எல்லாத்துறைகளிலும் நல்ல பரிச்சயம் எனக்கு இல்லாது விட்டாலும், எனக்கு ஆர்வமுள்ள துறைகளிலுள்ள ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழி பெயர்ப்புச் செய்தேன். இவற்றிலுள்ள சிவப்பு இணைப்புக்கள் மூலம் பல துறைகளிலும் கட்டுரைகள் விரிந்து கொண்டு செல்ல இது வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 16:23, 16 பெப்ரவரி 2007 (UTC)

பிரதிநிதி[தொகு]

ரவி, மக்கள் பிரதிநிதி என்பதை மக்கள் சார்பாளர் எனலாம். அல்லது மக்கள்சார்மொழியர், மக்கள் சாருரையாளர் என கூறலாம். எ.கா. "சைதாப்பேட்டை மக்கள், கருணாநிதியை தங்கள் சார்பாளராகத் தேர்ந்தெடுத்தனர். கருணாநிதி தன்னை சைதாப்பேட்ட மக்கள் சார்பாளராகத் தேர்ந்தெடுத்தற்கு இன்று நன்றி தெரிவித்தார்." மற்ற இடங்களிலும் இப்படிக் கூறலாம். எ.கா. "மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் விக்டர் முருகனை தங்கள் வகுப்பு மாணர்வர்களின் சார்பாளராகத் தேர்ந்தெடுத்தனர்.". "இவ்வாண்டு, குமரன் எங்கள் வகுப்பின் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குச் சார்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்."--செல்வா 15:49, 18 பெப்ரவரி 2007 (UTC)

சார்பாளர் பொருத்தமான சொல்லாகவும், சுருக்கமாகவும் இருக்கிறது. நல்ல சொல். 17:31, 18 பெப்ரவரி 2007 (UTC)

ஆனால் விற்பனை பிரதிநிதி என்ற சொல்லை "விற்பனைச் சார்பாளர்" என்று கூற முடியாது அல்லவா ? --Cangaran (பேச்சு) 14:00, 12 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

Chennai wikicamp[தொகு]

Thank you for your message at English wikipedia. It would be my previlage if I could represent Tamil wikipedia at wikicamp, but unfortunately, I won't be in Chennai this weekend, so I will not be able to make it there :(. I'm very sorry that I can't do this. Thanks for your understanding. srini 15:46, 21 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்கள் தொடர்பாக[தொகு]

ரவி, நீங்கள் பதிவேற்றிய படிமங்களுக்குப் பொருத்தமான உரிம வார்ப்புருக்களைச் சேர்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் பயன்படாதுள்ள படிமங்களில் நீங்கள் பதிவேற்றியவையும் உள்ளன. அவற்றில் முக்கியமற்றவை தவிர்ந்த ஏனையவற்றை நீக்கி உதவவும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 19:14, 22 பெப்ரவரி 2007 (UTC)

representation[தொகு]

நீங்கள் கேட்டது: to represent = முன்னிறுத்தி; representative = சார்பாளர்; representation = ?

representation = முன்னிறுத்தல், ஒப்புநிறுத்தல், சார்புநிறுத்தல், சார்புநிற்றல். தமிழில், பெயர்ச்சொல் ஆக்கல் மிக எளிது. மேலும் பல பெயர்ச்சொல் வடிவங்களும் உண்டு. நட என்பது எப்படி நடத்தல், நடப்பு, நடை, நடத்தை, நடக்கை என்று பல்வேறு வடிவங்கள் கொள்ளுமோ அதே போல பல வினைச்சொற்களும் கொள்ளும் (மரபுக்கு ஏற்க). இங்கே சார்புநிலை, ஒப்புநிலை முத்லையவும் செல்லும். இடமறிந்துதான் எது பொருத்தமாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.--செல்வா 23:14, 24 பெப்ரவரி 2007 (UTC)

முதலியவும்

முதலியவும்

புதுப் பயனர்களின் ஆங்கில கட்டுரைகள்[தொகு]

ரவி, புதுப் பயனர்களின் ஆங்கில கட்டுரைகளை நீக்க முன்பு, அவர்களுக்கு ஒரு குறிப்பு தருவது, மற்றும் கட்டுரையில் ஒரு தகவலை இட்டு சிறுது காலம் சென்ற பின்பு நீக்குவது நன்று என்று நினைக்கின்றேன். குறிப்பாக அப் பயனர் பதிவு செய்து பதிந்தால். நன்றி. --Natkeeran 03:07, 27 பெப்ரவரி 2007 (UTC)

Re:நன்றி[தொகு]

ரவி/கோபி, ஊக்கத்துக்கு மிக்க நன்றி. தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்க வேண்டுமென்ற ஆர்வம் நிறையவே உள்ளது. எனினும், தமிழில் எழுதி பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது... தமிழில் தட்டச்சும் பழகியதல்ல. ஒரிரு வாக்கியங்கள் எழுதுவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விடுகிறது! phew.. that's it. I am reverting to English. I'm currently using the Tamil key extension in Firefox, and typing using that. Is there any other easier way to type in Tamil? Do let me know!! --Madhu 17:01, 1 மார்ச் 2007 (UTC)

தமிழரியல் எதிர் தமிழியல்[தொகு]

எனக்கும் இதில் தெளிவான நிலைப்பாடு இல்லை. பொதுவாக மொழித் துறைக்குள்ளேயே இவை வருவதால் தமிழியல் என்று ஆரம்பத்தில் எடுத்தாண்டுவிட்டேன். இது ஒரு மேற்கத்தைய முறை. அங்கேயும் இந்தியவியல் போன்று Tamilology என்றும் குறிப்பிடுவர். எவ்வளவு பொருத்தம் என்று தற்போது தீர்க்கமாக கூற முடியாது. ஆனால் இரண்டாக்குவது அவ்வளவு பொருத்தமில்லை. அதாவது தமிழியல் என்றம் தமிழரியல் என்றும் இரண்டாக்குவது தேவையற்றது. --Natkeeran 19:37, 2 மார்ச் 2007 (UTC)

தமிழியல் என்ற சொல் எண்பதுகளில் பயன்பட்டதை என்னால் உறுதிப்படுத்த முடியும். ஆக முப்பதாண்டுகளாவது பயன்படும் சொல். தொடர்பான நூல்கள் சில விரைவில் நூலகம் திட்டத்தில் கிடைக்கும். --கோபி 19:55, 2 மார்ச் 2007 (UTC)

தமிழ் விக்சனரிக்கு வருக![தொகு]

நினைவூட்டியதற்கு நன்றி ரவி, கொஞ்சம் வேலைப்பளு அதிகம். இயன்ற வரை முயல்கிறேன். --Sivakumar \பேச்சு 14:34, 3 மார்ச் 2007 (UTC)

தனித்தமிழ்...[தொகு]

ரவி, இப்ப நீங்க கொஞ்சம் ஓவரா போறீங்களா. நீங்கதான் பொதுவா வழக்க சொற்களுக்கு வாதம் தருவீர்கள். இப்பொழுது கதிரை, மேசை...அறிவது நன்று. ஆனால் மாற்றக் கேட்டுவிடாதீர்கள் :-) சமஸ்கிருதம், ஆங்கிலம் நாம் பயப்பிடவேண்டும். அதற்கு பண்பாட்டு-சூழமைவு காரணங்கள் உண்டு. வேற்றுமொழிகச் சொற்களைப் பற்றி அவ்வளவு அலட்ட தேவையில்லை.

இருப்பினும், நாற்காலி கூடிய பொருத்தம். கதிரை ஈழத்து சொல் என்று நினைக்கின்றேன். டச்சு அல்லது போர்த்துகீச சொல்லாக இருக்கலாம். இன்னும் வரும் என்று நினைக்கின்றேன்...அலுமாரி, லாச்சி...

--Natkeeran 20:12, 4 மார்ச் 2007 (UTC)

ரவி, தவறு என்னதுதான். கனமா எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்படியான பல அன்றாட சொற்கள் தமிழ் வேர்ச்சொற்களின் இருந்து வரவில்லை, ஆனால் அவற்றின் தோற்றம் சமஸ்கிருதமும் இல்லை, ஆங்கிலமும் இல்லை. இவற்றை இயற்சொற்கள் ? மாதிரி பயன்படுத்தலாம். மயுரநாதன் ஒரு (யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்) கட்டுரையில் இவற்றை பட்டியலிட்டுக்கின்றார். தமிழ்நாட்டில் நல்ல தமிழ்சொற்கள் இருந்தால் அந்த தலைப்பில் கட்டுரையை எழுதி விட்டு, இவற்றுக்கு பக்க மாற்றுக்கள் தரலாம். நன்றி. --Natkeeran 20:45, 4 மார்ச் 2007 (UTC)

நில உலகுக்கான சொற்கள்[தொகு]

ஆக்ஸிஜன் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நில உலகுக்கான பிற சொற்கள் (சுமார் 29 சொற்கள்) கொடுத்துள்ளேன். இன்னும் 3-5 சொற்கள் உள்ளன. அவற்றுள் சில பிற மொழிச்சொற்கள். எனவே ஒரு சொல் இல்லாததல்ல, போதிய ஈடுபாடுடன் சொற்களை எடுத்தாளாத்துதான் குறையாக எனக்குப் படுகின்றது. Planet Earth என்பதை நிலக்கோள் என்று கூட வழங்கலாம். பூமி என்னும் சொல்லை நானும் ஆள்வேன், ஆனால் பூமியைத் தவிர வேறு எந்த சொல்லையும் நிலக்கோளுக்கு ஆளலாகாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது பற்றி மேலும் கருத்தாடுவது தேவை இல்லை, ஆனால் பிற சொற்கள் இருப்பதைச் சுட்டிக் காட்ட பட்டியலிட்டேன். ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருள் பற்றி ஏற்பட்டது. --செல்வா 13:34, 8 மார்ச் 2007 (UTC)

உலகாயதம்[தொகு]

உலகாயதம் ஒரு பொருள் மையாவாத உலக நோக்கு. தமிழர்கள் வீரம், காதல், இன்பம் என்ற சங்க மரபில் இருந்து தொடர்ச்சியாக இந்த கொள்கையின் அல்லது விழுமியத்தின் ஏற்ற இறக்கத்தை பற்றி அலசலாம். இந்தக் கொள்கையை பற்றி விரிவாக அலச வேண்டும். ஆனால் தற்போது அந்த மனநிலையோ, நேரமோ இல்லை. இந்திய மரபில் பிராமணிய வழிவந்த கொள்கைகளுக்கும் துறவுறத்தை வற்புறித்திய பெளத்தம், சமணம் சமயங்களுக்கும் எதிரான ஒரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கின்றது. கட்டுரையில் சுட்டப்பட்ட நூலைப் பெற முடியுமானல் பெறுங்கள். தமிழில் நான் கண்ட மிகச்சிறந்த ஆய்வு நூல்களில் ஒன்று. தமிழர் மெய்யியலில் உலகாயதம் ஒரு முக்கிய கொள்கை எனலாம். மேலும் பின்னர்... --Natkeeran 20:25, 8 மார்ச் 2007 (UTC)

தப்பு கணக்கு[தொகு]

நாங்கள் இங்கு ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை கண்டு கொள்ளவும் வேண்டும். நீங்கள் தானே சொல்வீர்கள் வந்த புதிதில் ஒரு கட்டுரையாவது வராதா என்று பார்த்தது என்று. போன வருடம் சராசரியாக 10 கட்டுரைகள் வரவில்லை என்றும் குறைபட்டதுண்டு. இவ்வருடம் 30. ஆகவே வளர்ச்சி உண்டு. அது பரவலாக இல்லையே. அது முக்கியமான ஊற்றுக்களில் இருந்து இல்லையே என்ற ஒரு குறை உண்டு.

ஆம், வளர்ச்சி உண்டு ஆனால் பரவலாய் இல்லை என்பதை உணர்கிறேன். ஒரு சிலரின் உழைப்பாலே இந்த வளர்ச்சி இருக்கிறது. --Ravidreams 15:36, 11 மார்ச் 2007 (UTC)

உத்தமம் இணையத்தில் தமிழ் ஆர்வலர்கள் என்பவர்களை கூட்டி அல்லது கூட்டாக செயற்படுவதற்கு நல்ல ஒரு களமாக இருந்தது. அதில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக இணைந்து செயலாற்றினார்கள். எனவே, அவர்கள் தொடர்ந்து இயங்கியிருந்தால் அவர்களுடன் த.வி ஒரு தொடர்பை ஏற்படுத்தி செயற்பட்டிருக்கலாம்.

இது வரை தமிழ் விக்கிக்கு வந்தவர்கள் யாரும் எந்த அமைப்பும் சொல்லி வரவில்லை. தானாகவே இணையத்துடன் ஊடாக வந்தார்கள். ஆங்கில விக்கியும் இணையத்தின் ஊடாகவும் தன் பலத்தாலும் வாய்மொழிகளாலுமே வளர்ந்தது. இணையத் தளங்களின் வளர்ச்சி இணையம் வழியாகவே சாத்தியமாகும் என்று தோன்றுகிறது. பிற ஊடகங்களின் வெளிச்சம் ஓரளவே உதவும். இணைய வசதிகள் உள்ளோர் பலர் கண்ணில் இந்நேரம் தமிழ் விக்கி கண்ணில் படாமல் இருந்திருக்காது. எனினும், பங்களிக்கவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். நான் ஆங்கில விக்கியை பல முறை பயன்படுத்தி இருந்தாலும் எனக்கு விருப்பமான துறைகளில் கூட அங்கு மிகக் குறைவாகவே பங்களித்திருக்கிறேன். ஒரு விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதற்கான ஊக்கம் பலருக்கும் வேறுபடுகிறது. பொத்தாம் பொதுவாக தமிழ் விக்கிக்கு கிடைக்கும் இணையத்துக்கு வெளியேயான அறிமுகத்தில் அதிக பலன் இருக்காது. தமிழார்வமும் பங்களிப்பு முனைப்பும் உள்ளோரை குறி வைத்து பரப்ப வேண்டும். தமிழா மடலாடற்குழுவில் உள்ள பலருக்கும் விக்கிபீடியா தெரியும். பிற தமிழ் கணிமை களங்களில் பெரிதும் பங்களிப்போர். எனினும் விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு பூச்சியமே. இதனாலேயே உத்தமம் போன்ற அமைப்புகளால் விக்கிபீடியாவுக்கு பெரிய சாதகங்கள் வந்து விட முடியாது என்று கூறுகிறேன்.--Ravidreams 15:36, 11 மார்ச் 2007 (UTC)


ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்றும் தமிழர்கள் நிறைய வாழும் நாடுகள். அவற்றில் இருந்து பயனர்கள் வருவார்கள். சிலருடன் தொடர்பு உண்டு. குறிப்பாக ஐரோப்பாவில் ஒரு தமிழ் இலக்கிய புலம் உண்டு. அவர்களை உள்வாங்க முடியுமா என்று பார்க்க வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் பற்றிய உங்கள் அலசல் சரியில்லை. அங்கு தமிழ் பள்ளிகள் உண்டு, தமிழ் ஊடகங்கள் உண்டு, இலக்கிய ஆக்கங்கள் வெளி வருகின்றன, அரசியல் மட்டத்தில் உதவி உண்டு எனவே நிச்சியம் பங்களிப்புக்கள் கிட்டும். உடனடியாக என்று சொல்ல முடியாது. தொலைநோக்கில். என்னைப்பொறுத்த வரையில் த.வி வெற்றிக்கு ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை முக்கியம். தகவல் அடிப்படையிலாவது. குறைந்தது ஒர் இருவராவது ஈடுபடவேண்டும்.

இவர்களின் பங்களிப்பு த.வி.யை மேம்படுத்தும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஆனால், முக்கியம் என்று என்னால் கருத இயலவில்லை. அந்தந்த நாடு சார்ந்த தகவல்களை இவர்களால் தமிழில் தர முடியும். ஆனால், பிற துறைத் தகவல்களை இவர்களால் தர முடியும் என்பது ஐயமே. அறிவியல் போன்ற துறைகளில் பங்களிக்க தமிழுடன் மிக நெருங்கிய தொடர்புகள் அவசியம். தமிழை ஒரு மொழியாக மட்டுமே படிக்கும் இவர்களால் இந்த பங்களிப்புகளை செய்வது சிரமம். (உங்களைப் போன்ற சிலர் ஆர்வத்தின் பேரால் சிறப்பாக செயல்படுவதை பொதுமைப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறேன்) ஆனால், ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் தமிழிலேயே கல்லூரி வரை படிக்கும் எண்ணற்றோர் உளர். இப்பகுதிகளில் இணையம் வீடுகளுக்கு வரும்முன்னர் கல்லூரி வளாகங்களை எட்டும். அப்போது புது வெள்ளம் போல் பலர் பங்களிக்க வருவார்கள் என்பது என் கணிப்பு. --Ravidreams 15:36, 11 மார்ச் 2007 (UTC)


ஆர்வம் இல்லை என்று நீங்கள் சொல்வதை என்னால் முற்றிலும் ஏற்க முடியாது. நீங்கள் நினைப்பதைப் போல தமிழ் இணையம் ஊடுருவவில்லை. தமிழ் தட்டச்சு இலகுவில்லை. அத்தோடு தமிழில் சிறு கட்டுரை ஒன்றை எழுதுவது எல்லோருக்கும் இலகுவில்லை. தமிழில் எழுதுவது எழுத்தாளருக்கு என்ற ஒரு மதிலை எழுப்பி வைத்திருக்கின்றார்கள்.

ஒப்புக் கொள்கிறேன். இந்த மதிலைத் தகர்க்க வேண்டும். ஏற்கனவே தகர்ந்து தான் வருகிறது. இதில் வலைப்பதிவுகள் பெரும்பங்கு வகிக்கும்.--Ravidreams 15:36, 11 மார்ச் 2007 (UTC)


இசை திரையிசை ஆனது, நடனம் திரைநடனம் ஆனது, கதை திரைக்கதை ஆனது, கலை திரைக்கலை ஆனது, நகைச்சுவை மிமிக்கிரி ஆனது, இதைத் தவிர நேரடியாக பங்களிப்பு என்ற பண்பாடு தமிழ்ச்சூழலில் சுருங்கிகொண்டே வருகின்றது. எவ்வளவுதான் தமிழ் சினிமா இந்தியை, ஆங்கிலத்தை எல்லையில் வைத்திருக்க உதவினாலும், அதன் உள்ளார்ந்த பாதிப்பை குறைவாக மதிப்பிட முடியாது. பயனர் உருவாக்கும் ஒரு ஆக்கம் என்பது தமிழ்ச் சூழலில் இன்னும் கோயில் கட்டுவதோடு சரி. அங்கும் சமூகப் படிநிலை அடுக்கமைவின் தாக்கம் அதிகம்.


கட்டற்றவை, திறந்த மூலம், பயனர் உருவாக்கும் பயன்பெறும் ஆக்கம் போன்ற கருத்துருக்களை நாம் தமிழ்ச் சூழலுக்கு எடுத்து செல்ல வேண்டும். தமிழை கருவியாக பயன்படுத்தி மக்களை கட்டுப்படுத்த முயலுகின்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, ஒவ்வொருவரும் தமிழை பயன்படுத்த தக்க வகையில் மாற்றியமைக்க முடியும்.

உடன்படுகிறேன். சிறந்த சிந்தனை.--Ravidreams 15:36, 11 மார்ச் 2007 (UTC)


தமிழர் எவருக்கும் ஒரு மொழி மட்டும் தெரிந்து இருந்தால், அது நல்லதல்ல. தமிழ் யாருக்கு தேவை? தமிழின் தேவை அனைவருக்கும் இரண்டாம் நிலையில்தான். முதலாவது ஆங்கிலம், இதைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நாளையே சீனம் வர்த்தக, தொடர்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கினால், நாளை சீனம் முக்கியம். விக்கி முகாம் சொல்வதும் இதுவே. சென்னையில் தமிழர்கள் மத்தியில் 300 பேர்கொண்ட விக்கி ஆர்வலர்கள் மத்தியில் 3 தமிழ் விக்கிபீடியர்கள் என்றால்; அதில் இருக்கும் முரண்பாட்டை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா?

இந்த இடத்தில் உங்களிடம் இருந்து பெரிதும் வேறுபடுகிறேன். உங்கள் புரிதல் பெரும்பிழையாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகோடித் தமிழருக்கும் ஈழத் தமிழருக்கும் தமிழில் தகவல் அறிவது ஒரு முதன்மையான தேவை. ஆங்கிலத்தை கொண்டே அனைத்தும் செய்ய இயலுமானால் தனியாக தமிழ்த் தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் எதற்கு? அவற்றின் வணிக வெற்றிக்கான காரணம் என்ன? எல்லாரும் hindu, indian express படித்துக் கொண்டிருப்பார்களே? தமிழகத் தமிழர்களின் ஆங்கில அறிவின் ஆழம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. மேம்போக்கானது. இது என்னுடைய நேரடி அனுபவம். அரை குறை ஆங்கிலத்தை வைத்து நகர்ப்புறத்தில் சிலர் வேலையை ஒப்பேற்றுகிறார்கள். 2000க்கு குறைவான சொற்களை வைத்துக் கொண்டு நுனிநாக்கு ஆங்கிலம் பேச முடியும். ஆனால், அறிவைப் பெருக்க, தகவல் அறிய தமிழின் தேவை இன்றியமையாதது. வேலைவாய்ப்புக்கு ஆங்கில அறிவு தேவைப்படுவதையும் சமூகத்தில் தமிழின் பங்கையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. as i am suffering fever என்று விடுப்புக் கடிதம் எழுதும் அளவிலேயே பலரின் ஆங்கில அறிவு உள்ளது. நீங்கள் தொலைக்காட்சிகளில் காணக்கூடிய மேட்டுக்குடி வர்க்கத்தின் ஆங்கிலப் புலமையை பெரும்பான்மைத் தமிழரோடுகுழப்பிக் கொள்வது தவறு. ஐரோப்பா, சிங்கை போன்ற இன்ன பிற நாடுகளில் தமிழ் இன்றியும் பிற மொழித் துணையுடன் வாழ்க்கை ஓட்ட முடியும். தமிழ்நாட்டில் தமிழ் இன்றி வேறு எதுவும் தனித்து ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், தமிழ் தனித்து செயல்பட இயலும்.--Ravidreams 15:36, 11 மார்ச் 2007 (UTC)


விக்கி பட்டறை. வெளிப்படையாக சொன்னால் அவர்களில் பெரும்பாலனவர்கள் நல்ல பொருளாதார நிலையில் இருக்கும், ஆங்கில மயப்படுத்தப்பட்ட, நுட்ப சித்தர்கள். மேற்குடிகள் என்றும் சொல்லலாம். அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றே நினைக்கின்றேன், பரம்பரை மேற்குடி என்றும் சொல்ல முடியாது என்பது என் ஊகம். அனேகருக்குத் தமிழ் பேசத் தெரியலாம்; எழுத, தட்டச்சு செய்ய ஆர்வம் இல்லை. பொதுவான கருத்து. இதில் எதுவும் தப்பில்லை. அவர்கள் யார் என்பதில் தெளிவுக்காவே சொன்னோன். தப்பான கணிப்பாகவும் இருக்கலாம்.

உங்கள் கணிப்பு சரியே. ஆனால், தமிழார்வத்தையும் விக்கி ஆர்வத்தையும் குழப்பக் கூடாது. நீங்கள் சொன்னது போல் தமிழ் விக்கிக் காரர்கள் 3 பேர் என்றால் மீதம் 297 பேர் ஆங்கில விக்கிக் காரர்கள் என்று இருந்தால் தமிழின் இரண்டாம் நிலையையும் ஆங்கிலத்தின் முதன்மையையும் கருதலாம். ஆனால், ஆங்கில விக்கிக் காரர்களும் ஓரிருவரே வந்திருந்தனர். இந்நிகழ்வு முழுக்க முழுக்க விக்கி சாராதவர்களால் விக்கி அறியாதோருக்கு நடத்தப்பட்டது. எனவே இதன் பங்களிப்பு, வரவேற்பு தரவுகளை பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லை. உண்மையில் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றால், குறைந்தது விக்கிப் பட்டறையை நடத்தியவர்களாவது விக்கியில் பங்களிக்க வந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி வருவார்கள் என்று நான் எதிர்ப்பார்க்க வில்லை :) தமிழ் விக்கிக்கான தமிழூற்று கருவி உருவாக்கிய மாஹிர் கூட தமிழ் விக்கியில் பெரிய பங்களிப்புகள் தர வில்லை என்பது ஒப்புநோக்கத்தக்கது. நுட்ப அறிவு, தமிழார்வம், சமூக முனைப்பு இதெல்லாம் தாண்டி விக்கிக்கு என்று வந்து கட்டுரை எழுதுவதற்கு இன்னொன்று ஏதோ தேவைப்படுகிறது. அதை யாரும் ஊட்டி வளர்க்க முடியாது என்று தான் தோன்றுகிறது.
இங்கு நான் தெரிவித்துள்ள கருத்துக்கள் முழுக்கப் பிழையாகவும் இருக்கலாம். என் கருத்துக்களை முன் வைக்கவே தெரிவித்துள்ளேன். மேற்கொண்டு உரையாட விரும்பவில்லை. நன்றி. --Ravidreams 15:36, 11 மார்ச் 2007 (UTC)


இத்தோடு நிறுத்திவிடுகின்றேன். நன்றி. --Natkeeran 17:24, 9 மார்ச் 2007 (UTC)

தப்புக் கணக்கு

தமிழ் விக்கிபீடியாவில் என் மூன்றாம் ஆண்டு தொடக்கம்![தொகு]

இன்றோடு தமிழ் விக்கிபீடியாவில் மூன்றாம் ஆண்டில் மிக்க மகிழ்ச்சியோடு காலடி எடுத்து வைக்கிறேன் :)--Ravidreams 15:39, 11 மார்ச் 2007 (UTC)

இந்த ஆண்டு உங்களது கட்டுரை உருவாக்கல் ஆண்டாக இருக்க வேண்டுகிறேன். நாளுக்கு இரண்டு கட்டுரைகள் வீதம் 730 கட்டுரைகள் உருவாக்குங்கள். விடுபடும் நாட்களுக்கான கட்டுரைகளைப் பின்னைய நாட்களில் எழுதலாம். முயற்சி செய்து பாருங்களேன். --கோபி 16:56, 11 மார்ச் 2007 (UTC)
வாழ்த்துக்கள். --Natkeeran 17:00, 11 மார்ச் 2007 (UTC)
சீனியருக்கு எங்களின் வாழ்த்துக்கள்--கலாநிதி 17:03, 11 மார்ச் 2007 (UTC)
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தொய்வில்லாமல் தமிழ் விக்கியில் பணி செய்துள்ளீர்கள். நன்றியும், வாழ்த்துக்களும். Mayooranathan 18:25, 11 மார்ச் 2007 (UTC)

ரவி, என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி! பெருகட்டும் நற்பயன்! --செல்வா 18:48, 11 மார்ச் 2007 (UTC)

நற்கீரன், செல்வா, மயூரனாதன் - நன்றி. கலாநிதி - இப்படி senior junior என்றெல்லாம் கலாய்க்கக் கூடாது :) கோபி - 730 கட்டுரைகளா??? இரண்டாண்டில் நான் எழுதியதே 200ஐத் தாண்டுமா என்பது சந்தேகம் ! என்றாலும், ஊக்கத்துக்கு நன்றி. இயன்றவரை முயல்வேன்.--Ravidreams 19:34, 11 மார்ச் 2007 (UTC)

ஆஹா.. மூன்று ஆண்டுகளா? இதைக் கேட்க சந்தோஷமாகவும் ஒரு வகையில் ஆச்சர்யமாகவும் உள்ளது... தொரட்டும் உங்கள் நற்பணி!! வாழ்த்துக்கள். --மது 14:25, 17 மார்ச் 2007 (UTC)

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற நேரத்துக்கும் உழைப்புக்கும் நன்றி கூறும் அதேவேலை நற்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.--டெரன்ஸ் \பேச்சு 14:29, 17 மார்ச் 2007 (UTC)

AWB and Bot[தொகு]

ரவி, AWB-ஐ நான் த.வி.யில் பயன்படுத்தியது இதுவே முதல் முறை.. த.வி.யில் அதை பயன்படுத்த முடியுமா என்று கூட எனக்கு கண்டிப்பாகத் தெரியவில்லை.. நேற்று செய்ததை ஒரு 'test' என்றே சொல்லலாம், அதனால் தான் நேற்றைய மாற்றங்கள் சிறியன. AWB-ஐ வைத்து த.வி.யை எவ்வாறு உயர்த்தலாம் என்று உங்களுக்கு ஏதவாது கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும். If AWB is not going to be very useful/productive for Tamil WP, I think I might not use it much. --மது 07:28, 18 மார்ச் 2007 (UTC)

ரவி, முதலில் தமிழ்நாடு வார்ப்புருவில் இருக்கும் அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு கட்டுரை எழுதப் போகிறேன்... The red links don't look good.. So, Veerappan has to wait. :) --மது 17:06, 20 மார்ச் 2007 (UTC)
தமிழ் வி.பி.யில் எழுதி எழுதி தமிழ் பித்தன் ஆகி விட்டீர்களோ..? த.வி. சேர்ந்த புதிதில் எந்த உரையாடல் பக்கத்திலும் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியதேயில்லையா..?? இதெல்லாம் ரொம்ப அநியாயம்!!! X( --மது 15:02, 21 மார்ச் 2007 (UTC)
சரி, தமிழ் தட்டச்சு இன்னும் சரி வர பழகவில்லை... அதனால் தான் அவ்வப்போது ஆங்கிலத்திற்கு மாறி விடுகிறேன். இனி நானும் தமிழிலேயே எழுத முயல்கிறேன். --மது 15:41, 21 மார்ச் 2007 (UTC)