பயனர் பேச்சு:Karthickbala

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்






பொருளடக்கம்

[தொகு] வணிக விளம்பரம்

பயனர் பக்கத்தில் தி ஹிந்துவை வாங்காதீர்கள் என எழுதியுள்ளார். பயனர் பக்கத்தை வணிக விளம்பரங்களுக்கு (எதிற்பு விளம்பரமானாலும்) பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது. அதை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை.--92.39.200.17 11:02, 7 ஜூன் 2009 (UTC)

வணக்கம் தோழரே, தங்களின் கோரிக்கையை ஏற்கிறேன்! தற்பொழுது த.வியில் இது பற்றிய கொள்கைகள் இல்லை. இது பற்றிய விவாதம் நடந்து பின் அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கு நான் கண்டிப்பாக கட்டுப்படுவேன். நீங்கள் என்னுடைய பயனர் பக்கத்தை தொகுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் விக்கி கொள்கைகளை இத்துணை சரியாக கடைபிடிக்கும் நீங்கள் எங்களுடன் சேர்ந்து மிக நல்ல பங்களிப்பை செய்யலாம் தோழரே! எழுத இன்னும் பல லட்சம் கட்டுரைகள் உள்ளன......அன்புடன்--கார்த்திக் 13:51, 7 ஜூன் 2009 (UTC)
நன்றி பயனரே, என் கோரிக்கையை கொள்கை அளவில் ஒத்துக் கொண்டதற்கு. நான் இதை common sense பாயிண்டாகத் தான் கருதுகிறேன். எது விகி இல்லை என்பதன் விளக்கத்திற்கு http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not . குறிப்பாக ”Those promoting causes or events, or issuing public service announcements, even if noncommercial, should use a forum other than Wikipedia to do so. ”. மேலும் “Propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. ” அநத அளவில் பார்த்தால் உங்கள் இன அழிப்பு மறுப்பு விளம்பரமும் விகிக்கு புறம்பானது. அதை உங்கள் கவனத்திற்கு விட்டு விடுகிறேன்.--92.39.200.17 14:53, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் ‘தி ஹிந்து’ எதிர்ப்பு விளம்பரத்தை திருப்பி போட்டுவிட்டீர்களா, அதை பார்க்கவில்லை. விகிபீடியாவின் ‘ஐந்து தூண்கள்’ http://en.wikipedia.org/wiki/Wikipedia:Five_pillars சொல்கிறது "Wikipedia is not the place to insert personal opinions, experiences, or arguments. Original ideas, interpretations, or research cannot be verified, and are thus inappropriate. Wikipedia is not a soapbox; an advertising platform; a vanity press; " " Be bold in editing, moving, and modifying articles." அதனால்தான் அந்த விளம்பரத்தை எடுத்தேன்.--92.39.200.17 15:08, 7 ஜூன் 2009 (UTC)
கார்த்திக், பயனர் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை முன்வைக்க உங்களுக்கு பூரண உரிமை உண்டு. எந்த தயக்கமும் வேண்டாம். கட்டுரைப் பக்கத்திலேயே புறவய நோக்கில் எழுத வேண்டும். இல்லை என்றால் FireFox விளம்பரம் செய்கிறீர்கள் என்றும் பிறர் வந்து குற்றம் சாட்டலாம். --Natkeeran 15:14, 7 ஜூன் 2009 (UTC)
பெயரிலி, இன அழிப்பு விளம்பரம்....நால்லயிருக்கு உங்கள் மதிப்பீடு. --Natkeeran 15:16, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் கூறிய கொள்கைகள் எல்லாம் கட்டுரைகளில் தனிபட்ட பயனர் பக்கங்களில் அல்ல நண்பரே! என் பயனர் பக்கத்தின் மூலம் என் தனிபட்ட கருத்தை மட்டும் கூறகிறேன். என் தனிபட்ட கருத்துக்களை என் பயனர் பக்கத்தில் கூற எனக்கு முழு உரிமை உண்டு. இது என் பேச்சு சுதந்திரத்திற்கு சமம். நான் எழுதும் கட்டுரைகளில் ஒரு பக்க சார்பு அல்லது வேறு ஒருவரை/ஒரு குழுவை சேர்ந்தவரை சாடினால், அதை நீக்கவும் மற்றும் அதன் நடுநிலை தன்மையை ஆராயவும் உங்களுக்கு/எந்த விக்கிபீடியர்க்கும் முழு சுதந்திரம் உண்டு.
நீங்கள் ஏன் ஒரு பயனர் கணக்கைத் தொடங்கி பங்களிக்ககூடாது? எவ்வளவு அழகாக மேற்கொள்கள் காட்டி செய்திகள் விடுகிறீர்கள். அருமை. உங்களை போன்றவர்களின் பங்களிப்பு த.விக்கு கண்டிபாக தேவை.--கார்த்திக் 15:28, 7 ஜூன் 2009 (UTC)
பயனர், நீங்கள் ‘கட்டுரையையும்’ ’பயனர் பக்கத்தையும்’ தனியாக வைத்து, எது விகி இல்லை என்பதெல்லாம் ‘கட்டுரை’க்குதான் செல்லுபடி ஆகும் என்கிறீர்கள். விகிபீடியா நியதிகள் கட்டுரை, பயனர் பக்கம் இரண்டிற்கும் செல்லும்.Wikipedia is not a soapbox; an advertising platform; a vanity press என்றால், அது இரண்டு வகை பக்கத்திற்கும் பொருந்தும்.Propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise.என்பது எப்பக்கத்திற்கும் பொருந்தும். உங்கள் விருப்பு, வெறுப்புகளை உங்கள் பிளாகில் எழுதி, அதற்கு சுட்டி கொடுக்கலாம்.--92.39.200.17 15:46, 7 ஜூன் 2009 (UTC)


சும்மா போட்டு குழப்பவேண்டாம். நான் இந்த இனத்தைச் சார்ந்தவன். இந்த மொழியைப் பேசுபவன். இந்த சமயத்தை சார்ந்தவன். எனக்கு இந்த அரசியல் நிலைப்பாடு உண்டு என்பது தெரிவிப்பது ஒன்றும் கபடத்தனாமனது அல்ல. தன்னை அடையாளம் காட்டாமல் ஒளிந்திருந்து ஒரு பக்க சார்பாக கருத்து தெரிவுப்பதை விட இது மேலானது. ஆ.வி இலும் பலரும் செய்வதுதான். எ.கா en:User:Magicalsaumy --Natkeeran 16:32, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் வேண்டுமென்றே வாதத்திற்கு tangential ஆக போகிறீர்கள். எந்த பயனரும் தங்களை பற்றி என்ன தகவலையும் கொடுக்கலாம். அதுக்கா நான் ஆட்சேபித்தேன்? ஹிந்துவை வாங்காதீர்கள் என்ற அந்த விளம்பரம், பல தமிழ் பிளாக்குகளில் இருக்கிறது. நான் இந்த அரசியல் நிலையை சார்ந்தவன் என்பதும் தகவல் தான். ஆனால் மற்றவர்களை இதை வாங்குங்கள், அதை வாங்காதீர்கள், என விளம்பரம் கொடுப்பது விகி நியதிகளுக்கு வெளிப்பட்டது. உங்களுக்கு ஆங்கிலம் சரியாக புரியவில்லை போலுள்ளது. பயனர் செய்யும் விளம்பரம் Propaganda, advocacy of political nature இல் வரும். மேலும் பயனர் செய்வது soapbox. நான் `சோஷலிஸ்ட், ரிபப்ளிகன், திமுக ஊழியர், தொழிலாளர் கட்சி` என்பது வெறும் தகவல். தகவலுக்கும், Propaganda, advocacy , advertising, soap-box முதலியவற்றுக்கும் உங்களுக்கு வித்தியாசம் புரியவில்லை. உங்களுக்கு அடையாளம் காட்டுவதற்க்கு யாரும், எந்த விதத்திலும் கடமைப் பட்டவர் இல்லர். நான் அடையாளம் காட்டாமல் இருப்பதில், நீங்கள் புண்படுவீர் ஆனால், அது உங்கள் சொந்த பிரச்சினை, அதைப் பற்றி யாரும் கவலைப் பட மாட்டார்கள்--92.39.200.17 17:24, 7 ஜூன் 2009 (UTC)
This user loves using Google Earth, This user prefers that the death penalty be used very sparingly. இப்படி ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே பயனர் பக்கதில் கருத்து சொல்ல பூரண உரிமை உண்டு என்றுதான் கூற முடியும். en:User:SkinnerIJA. எனவே ஆ.வி சென்று, கொள்கை மாற்றிவிட்டு இங்கு வந்தால் நன்று. --Natkeeran 17:43, 7 ஜூன் 2009 (UTC)
உங்களுக்கு தகவலுக்கும் பிரச்சாரத்திற்க்கும் இன்னும் வித்தியாசம் புரியவில்லை. கார்த்திக்பாலா `எனக்கு ஹிந்து பிடிக்காது`அல்லது `எனது முக்கிய வெறுப்பு ஹிந்து` என சொல்லியிருந்தால் , அது தகவல். ஆனால் ஹிந்துவை (சில அரசியல் காரணங்களால்) வாங்காதிர்கள் என விசேஷ விளம்பரம் கொடுத்ததால், அது Propaganda, advocacy , advertising, soap-box ஆகும். பயனர் எனக்கு `கோகோ கோலா பிடிக்கும்` என்றால் அது தகவல், கோகோகோலா குடியுங்கள் என தனியாக படத்துடன் ஒரு விளம்பரம் கொடுத்தால் , அது Propaganda, advocacy , advertising, soap-box ஆகும்.--92.39.200.17 18:10, 7 ஜூன் 2009 (UTC)


உங்கள் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு. "சிங்கள ஆதரவு த இந்து வை எனக்கு பிடிக்காது" என்று கூறலாம். --Natkeeran 18:24, 7 ஜூன் 2009 (UTC)
எனக்கு பிடித்தவை / பிடிக்காதவை என் கனவுகள்/சிம்மசொப்பனனகள் என்ற தலைப்பில் என்ன வேண்டுமானலும் சொல்லலாம். அவை ஒரு நபர் பற்றிய தகவல் ஆகும்.--92.39.200.17 18:32, 7 ஜூன் 2009 (UTC)
கார்த்திக், மாற்று வார்ப்புரு ஒன்று இங்கே: {{த இந்துவைப் புறக்கணிப்பவர்}}--Natkeeran 18:46, 7 ஜூன் 2009 (UTC)
ஹிந்துவை வாங்காதீர்கள் என்று ஏன் படிமம் இடுகிறீர்கள். மற்றவர்களை ஹிந்துவை ஓசியில் படிக்க சொல்கிறீகளா? அல்லது லைப்ரரி போய் படிக்க சொல்கிறீகளா? அல்லது இண்டெர்நெட்டில் படிக்க சொல்கிறீகளா?--92.39.200.17 18:52, 7 ஜூன் 2009 (UTC)

நக்கீரன்க்கு: நக்கீரன் அருமையான வார்புரு :) :) :) :). இங்கு பல பேர் இப்படி இருப்பதால் தான் நம் சகோதர சகோதரிகள் கொத்துகொத்தாக மாய்ந்ததை எம்மால் தடுக்கமுடியவில்லை--கார்த்திக் 19:22, 7 ஜூன் 2009 (UTC)

அருமைக்குரிய திரு 92.39.200.17 அவர்களே! தற்போது எனது பயனர் பார்க்கவும். நீங்கள் இத்தகைய விவாதங்களில் பங்களிப்பதை விட பங்களிக்கலாம். இதற்குமேல் இவ்விவாதத்தில் காலவிரயம் செய்ய நான் தயாரக இல்லை. நீங்கள் த விக்கு பங்களிப்பதில் உதவி ஏதேனும் தேவையெனில் தயங்காமல் கேட்கவும்.--கார்த்திக் 19:22, 7 ஜூன் 2009 (UTC)

அருமைக்குரிய திரு கார்த்திக், நீங்கள் தி ஹிந்துவை புரக்கணித்து, அதன் வேலை விளம்பரங்களையும், விவாக விளம்பரங்களையும், அரசு காண்ட்ரேக்டுகளையும் நிச்சமாக உதாசீனம் செய்வீர்கள் என நம்புகிறேன். அதே சமயம், ஏன் ஹிந்து மட்டும் புரக்கணிக்கிறீர்கள். ஹிந்து ஒரு தனியார் பத்திரிக்கைதானே? இலங்கை அரசுக்கு போர் ஆதரவாக அரசியல், தளவாட ஆதரவு தந்த இந்திய அரசையும், அதற்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாடு அரசையும் புரக்கணிப்பிர்கள் என நம்புகிறேன். இந்திய/தமிழக அரசில் வேலை வாய்ப்பு தேட மாட்டீர்கள், இந்திய பாஸ்போர்டை வாங்கமாட்டீர்கள், தமிழக அரசு உதவிகொடுக்கும் பல்கைகழகங்களில் படிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். வெறுமனே ஹிந்துவை புரக்கணிப்பது கோழையின் வீம்பு.--92.39.200.17 20:37, 7 ஜூன் 2009 (UTC)
தனிநபர் தாக்குதல் இங்கு தேவையற்றது. "கோழையின் வீம்பு" போன்ற அடைமொழிகள் இங்கு தேவை இல்லை. --Natkeeran 20:59, 7 ஜூன் 2009 (UTC)

[தொகு] பாராட்டுகள்

கார்த்திக், மிக அருமையாக செந்நாய் என்னும் கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள்--செல்வா 21:39, 21 ஜூன் 2009 (UTC)

[தொகு] நல்வாழ்த்துகள்

(என் பேச்சுப்பக்கத்தில் இட்ட மறுமொழியின் படி) கார்த்திக் உங்கள் முனைவர் ஆய்வுரையை இன்னும் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பித்து விடுவீர்கள் என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. இன்னும் சிறிது காலத்தில் முனைவர் கார்திக் பாலா, டாக்டர் கார்த்திக் பாலா என்று அழைக்கலாம்! எல்லாம் ஒளிவீசும் நல் வெற்றியாக அமைய நல்வாழ்த்துகள். நீல்கை (Nilgai) என்பது Bovidae (ஆவின் குடும்பம்) என்பதால் நீலா எனலாம். அல்லது நீலமான் எனலாம். பொதுவாக ஆன் என்றால் மான், மாடு ஆகியவற்றின் பெண் என்று அகராதி கூறும், ஆனால் காளை மாட்டிற்கும் ஆன் என்று பெயர் உண்டு. ஆகவே நீலான் (நீல ஆன்) என்றும் கூறலாம். மறுமொழி தர காலம் தாழ்ந்து விட்டதற்கு மன்னிக்கவும். --செல்வா 00:56, 25 ஜூன் 2009 (UTC)--செல்வா 17:26, 28 ஜூன் 2009 (UTC)

[தொகு] நன்றி

முதற்பக்க இன்றைப்படுத்தலை செய்ய முன்வந்தமைக்கு நன்றி. ஓரளவு பூரணமான கட்டுரைகளை தேர்வு செய்வது நன்று (சற்று தேட வேண்டும்). அவ்வப்போது பெரிய கட்டுரைகள் மாட்டும் போது விக்கிப்பீடியா:முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு குறித்து வைத்தல் நன்று.


உங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ள முந்திய உரையாடல்களை இவ்வாறு தொகுத்தால் நன்று. பயனர் பேச்சு:Karthickbala/தொகுப்பு01 --Natkeeran 23:46, 29 ஜூன் 2009 (UTC)

[தொகு] இந்திய பாலூட்டிகள்

ஆம் கார்த்திக். முதலில் தமிழ்நாட்டில் அறியப்பட்ட உயிரினங்களுக்கு முன்னுரிமை தரலாம். அதிலும் மூங்கில் அணத்தான், ஆசிய யானை, இந்திய காண்டாமிருகம் (மூக்குக்கொம்பன்), வரையாடு, வெளிமான், சோலைமந்தி, நாய், நீலான் போன்ற சில கட்டுரைகள் ஏற்கனவே இருப்பது நன்று. பாலூட்டிகளன்றிப் பொதுவாக காட்டுயிர்களை எடுத்துக் கொண்டால் கானமயில் போன்ற மற்ற சில கட்டுரைகளையும் இணைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 14:16, 8 ஜூலை 2009 (UTC)

[தொகு] விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 12, 2009

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 12, 2009 தொகுத்துள்ளேன். --Natkeeran 14:47, 12 ஜூலை 2009 (UTC)

[தொகு] விக்கித் திட்டம் உயிரியல்

வணக்கம்....கார்த்திக் கணிதம், கணினியியல், கட்டிடக்கலை, இயற்பியல், இலத்திரனியல் போன்ற துறைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்றவை. உயிரியல் துறையில் தற்போது ஆழமான தலைப்புகளில் பங்களிக்கக்கூடிய குறைந்தது 4 பயனர்கள் உள்ளார்கள். நீங்கள், மகிழ்நன், ரவி, கலை. முடிந்தால், நீங்கள் நால்வரும் கூட்டாக ஒரு விக்கித் திட்டம் உயிரியல் தொடங்கலாம். கணினியியலில் நல்ல தமிழில் கட்டுரைகள் எழுத அங்கு பரந்த பயன்பாட்டில் இருக்கும் (http://www.tcwords.com/) கலைச்சொற்கள் துணை புரிகின்றன. அது போல, பல அடிப்படைத் தலைப்புகள்/கலைச்சொற்கள் கொண்ட ஒரு விரிவான பட்டியலைத் தொடங்குவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். பல பட்டியல்களின் கூட்டுகாக் கூட இது இருக்கலாம். பாக்க: தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல் --Natkeeran 15:22, 19 ஜூலை 2009 (UTC)

கட்டாயம் இணைந்து பணியாற்றுவேன், கார்த்திக். இத்திட்டத்தைத் தூண்டிவிட்ட நற்கீரனுக்கும் நன்றி. கார்த்திக், மோசோவும் உயிரினங்களின் எச்சங்கள், படிவளர்ச்சிக் கொள்கை, தொன்மா போன்றவற்றின் மீது ஆர்வம் கொண்டவர். அவரையும் அழைத்துப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 17:11, 19 ஜூலை 2009 (UTC)


நன்றி கார்த்திக் ... உங்கள் ஊக்கம் மென் மேலும் நம் தமிழுக்கு வளம் சேர்க்கும்... உதவி வேண்டும் என்றால், தயங்கமால் கேட்கிறேன்..

நன்றி --Munaivar. MakizNan 20:58, 19 ஜூலை 2009 (UTC)

[தொகு] இன்றைப்படுத்தல்

[தொகு] விக்கிசெய்திகள்

பார்க்க: Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \பேச்சு 10:29, 27 ஜூலை 2009 (UTC)


கார்த்திக் பாலா உங்களின் கட்டுரைகள் அருமை. எனக்கும் விலங்கு நடத்தையியல் ஆர்வம் மிகுதி. முதுஅறிவியல் படிக்கும்போது அதை பற்றி படித்துள்ளேன். மேலும் மூன்று முதல் நான்கு மாதங்கள் மதுரை பல்கலைகழகத்தில் நடத்தையியல் துறையில் சேர்ந்து வவ்வால்களை பற்றி ஆய்வு செய்தேன். நீங்கள் தற்போது ஆய்வு செய்யும் துறையில் எனது நண்பன் ரகுராம் உள்ளான். மேலும் உங்கள் துறையில் உள்ள கடேகர் பற்றி அறிந்துள்ளேன், அவர் எழுதிய நூல் ஒன்றை படித்துள்ளேன். உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள். உங்கள் பயனர் முகப்பில் சே படம் உள்ளது. நீங்கள் புரட்சிகர எண்ணங்கள் கொண்டவரா? அப்படி என்றால் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய மின்னஞ்சல் முகவரி makizhventhan@gmail.com pandi@wisc.edu my real name is gopal... by chance if u talk with raghuram, use my real name.

viraivil santhipom...

makizNan

[தொகு] விக்கித்திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள்

தெரிவித்தமைக்கு நன்றி கார்த்திக். கருத்துக்களைப் பிறகு தெரிவிக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 20:24, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

[தொகு] முதற்பக்க கட்டுரைப் பரிந்துரைகள்

--Natkeeran 19:47, 9 ஆகஸ்ட் 2009 (UTC)

[தொகு] பிறந்தநாள் குழுமத்தின் வரவேற்பு

Nuvola apps cookie.svg வணக்கம்! Karthickbala அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்! நன்றி!

Vatsan34 06:17, 14 அக்டோபர் 2009 (UTC)

[தொகு] வாழ்த்துகளுக்கு நன்றி

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கார்த்திக்பாலா! உங்களைப் போன்றவர்களின் அன்புடனும் அரவணைப்புடனும் சிறப்பாக பணியாற்ற முயல்வேன்.--மணியன் 06:32, 8 நவம்பர் 2009 (UTC)

[தொகு] பிறந்த தின நல்வாழ்த்துகள்

கார்த்திக்! உங்கள் ஆய்வுப்பணியும் விக்கி பணியும் மென்மேலும் வளர்ந்து சிறப்பிக்க பலப்பல பிறந்த தினங்களைக் கண்டு மகிழ என் வாழ்த்துக்கள்! -- பரிதிமதி 11:10, 16 நவம்பர் 2009 (இந்திய நேரம்)

[தொகு] விடுமுறை முடியுது...

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் நன்று. நன்றி.

--Natkeeran 03:26, 19 டிசம்பர் 2009 (UTC)

[தொகு] மீண்டும் வருக!

கார்த்திக், கொலராடோ பல்கலையில் இருக்கின்றீர்களா!! பலே, பலே! எங்கே உங்களை நெடுநாட்களாகக் காணோம் என்று நினைத்தேன். மீண்டும் வருக, வருக! --செல்வா 14:41, 7 பெப்ரவரி 2010 (UTC)

[தொகு] தேவைப்படும் கட்டுரைகள்

விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள் பக்கத்தில் உயிரியல் குறித்த சில தலைப்புகளையாவது உடனடியாகச் சேர்க்க முடியுமா? நன்றி--ரவி 19:14, 19 பெப்ரவரி 2010 (UTC)

[தொகு] சிறு தொகுப்பு

புதுப்பயனர் வரவேற்பு போன்றவற்றைச் சிறு தொகுப்புகளாக குறித்தால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் குறையுமே? நன்றி--ரவி 16:37, 5 மார்ச் 2010 (UTC)

[தொகு] தமிழில் தலைப்பு

தாங்கள் வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல்‎ பக்கத்தில் உள்ளீடு செய்துள்ள தலைப்புகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. தலைப்பைத் தமிழில் கொடுத்து அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுங்கள்.--Theni.M.Subramani 08:25, 7 மார்ச் 2010 (UTC)

[தொகு] தமிழாக்கம்

ஐயா கூகிள் உதவியோடு ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்வது எப்படி?--Msudhakardce 09:52, 9 மார்ச் 2010 (UTC)

[தொகு] Disney

What is the Tamil titles of Dumbo, The Rescuers, The Fox and the Hound, and Charlotte's Web? Also, why is the பாண்டசிய(திரைப்படம்) article vandalized and can you restore the other vandalized one before it was vandalized? 68.220.162.147 19:27, 28 மார்ச் 2010 (UTC)

[தொகு] கருத்து வேண்டல்

விக்கிப்பீடியா_பேச்சு:தானியங்கிகள்#மெல்லுடலிகள் தானியங்கி முன்னீட்டைப் பற்றிய உங்கள் கருத்தை வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு

[தொகு] வார்ப்புரு:தமிழ் எழுத்து மாற்றத்தை எதிர்க்கிறேன்

Eluthu5.JPG

இந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்.

--Natkeeran 17:25, 9 மே 2010 (UTC)

[தொகு] சிங்களாந்தபுரம்

கார்த்திக் பாலா அவர்களுக்கு வணக்கம். தங்களின் பெயரை படிக்கும் போது எனக்கு உடன் நினைவுக்கு வருவது --- என்னுடைய மதிப்பிற்குறிய ஆசிரியர் --- T.M.பால சுப்பிரமணியன் அவர்களே. தாங்கள் தங்களை கொஞ்சம் அடையாளம் காட்ட முடியுமா ? நானும் சிங்களாந்த புரத்தைச் சேர்ந்தவனே. தொடர்பு கொள்ள --- ppnindia@gmail.com

Thank you -----திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:47, 10 மே 2010 (UTC)

[தொகு] முதற்பக்க அறிமுகம்

வணக்கம் கார்த்திக். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கார்த்திக் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.--ரவி 05:48, 25 மே 2010 (UTC)

[தொகு] சிகப்புப் பட்டியல்

கார்த்திக்! வணக்கம். IUCN RedList - இன் 2001-ஆம் ஆண்டு பதிப்பு 3.1 இங்கே கண்டேன். [1] இது புதிய பதிப்பா அல்லது பழைய பதிப்பா எனத் தெரியவில்லை. இப்பதிப்பில் ஏழு பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன: LC, NT, VU, EN, CR, EW, EX. தயந்து தெளிவாக்கவும்.[ [பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்]] என்ற தலைப்பையும் IUCN - இற்கு அளித்துள்ளேன். உங்கள் அமெரிக்க வாசம் சிறப்பாக உள்ளதா? --பரிதிமதி 08:17, 26 மே 2010 (UTC)

[தொகு] கிரிவலம் கட்டுரை

கிரிவலம் கட்டுரையின் எந்தப்பகுதியும் நீக்கப்படாமல் அவை அனைத்துமே திருவண்ணாமலை கட்டுரையில் உள்ளது. மேலும் கிரிவலம் கட்டுரை தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பில் இடம் பெற்று இருந்தது. ஒரேகட்டுரை இரு பெயரில் இருப்பது தேவையில்லை எனக்கருதி வழிமாற்றினேன். நன்றி.ஹிபாயத்துல்லா14:05, 6 ஜூன் 2010 (UTC)

[தொகு] உதவி வேண்டும்

அன்புடைய கார்த்திக் அண்ணா அவர்களே, பிரச்சனை என்ற தமிழ் சொல்லிற்கு இணையான செந்தமிழ் வார்த்தை என்ன என்பதை கூற இயலுமா?--Jenakarthik 09:16, 12 ஜூன் 2010 (UTC)

[தொகு] பாராட்டுக்கள்

கார்த்திக், நீங்கள் ஒரு புதிய கண்டுப்பிடிப்பைச் செய்திருப்பது பற்றியும் அதற்கு தமிழில் பெயரிட்டிருப்பதை அறிந்தும் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தொடர்க உங்களுடைய நற்பணி.--சிவக்குமார் \பேச்சு 18:23, 21 ஜூலை 2010 (UTC)

கார்த்திக், உங்கள் ஆய்வுப் பணிகள் மென்மேலும் தொடர எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:14, 21 ஜூலை 2010 (UTC)
கார்த்திக் பாலாவுக்கு வணக்கம். தங்களது புதிய கண்டுபிடிப்பிற்கும், அதற்கு தமிழ் பெயர் இட்டதற்கும் எனது பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:39, 22 ஜூலை 2010 (UTC)
வணக்கம்! தாங்கள் புதியதோர் இருகலப்பாசி கண்டறிந்து தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தமை அறிந்து அகம் மிக மகிழ்ந்தேன். தங்கள் வெற்றிகள தொடர என் வாழ்த்துகள்! - Karthi.dr 01:15, 22 ஜூலை 2010 (UTC)
மீண்டும் எனது பாராட்டுகள், கார்த்தி. தமிழின் மங்காப்புகழுக்கு இன்னுமோர் அணி செய்துள்ளீர்கள். -- சுந்தர் \பேச்சு 02:33, 22 ஜூலை 2010 (UTC)

புதிய கண்டுபிடிப்புக்கும் அதற்கு தமிழ் பெயர் சூட்டியமைக்கும் இரட்டை வாழ்த்துகள் கார்த்தி --குறும்பன் 02:36, 22 ஜூலை 2010 (UTC)

கார்த்திக், மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் உங்கள் வெற்றிகள் தொடரட்டும். உங்கள் கண்டுபிடிப்பு பற்றிய சிறு குறிப்பு அளித்திட முடியுமா? --பரிதிமதி 03:04, 22 ஜூலை 2010 (UTC)
மிகவும் அருமை கார்த்திக்! வாழ்த்துக்கள். சீக்கிரம் உங்கள் tamilensis கட்டுரையை எதிர்பார்க்கின்றேன்.--அராபத்* عرفات 05:09, 22 ஜூலை 2010 (UTC)
என்னை பாராட்டி ஊக்கப்படுத்து அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி. தற்பொழுதுதான் அக்கட்டுரையை ஒரு சஞ்சிகைக்கு சமர்ப்பித்துள்ளேன். கட்டுரை பிரசுரமானதும் உங்களுடன் கட்டாயம் பகிர்ந்துகொள்வேன். இன்னும் பல புதிய தமிழ் பெயர்களுடன் கட்டுரைகளை எழுதி வருகிறேன், அவை வளர்ந்தவுடன் தெரிவிக்கிறேன். நன்றி--கார்த்திக் 05:16, 22 ஜூலை 2010 (UTC)

[தொகு] கடமா

கார்த்திக், கடமா தகவல் பக்கம் உயிர்ப்பு பெற்று சிறப்பாக வருகின்றது; ஆய்வுப்பணியுடன் விக்கிப்பணியைத் தொடருவதில் உள்ளபடியே மகிழ்ச்சி.--பரிதிமதி 18:04, 27 ஜூலை 2010 (UTC)

[தொகு] Thanks Brother

Hey Karthik,Thanks for the information,Yeah I have heard about the same book through my research,to add more I have a list of Books by same Author,Vishwanath shri. Khaire,For your info.

  1. Adagula MaDagula (Its Kind of Lullaby word.)
  2. Maratti Bhasheche Mool (Roots of Marathi Language:According to Sammat Siddhanta)
  3. Dravid Maharashtra

I am trying to get these books soon,once I read this I will definitely get back to you,to throw more light on relations and connections ok,by the way I wish to start Marathi-Tamil & Viceversa Wiktionary project soon.I am sure friend like you will help me in this regard.Currently I am learning Tamil through a book called "Tamil Shika"(Learn Tamil)in which these books are mentioned by the author and even the author has the same opinion as that of Shri.KHaire.ok.Thank you brother,With regards,Prasannakumar 20:06, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

  • You know even in Marathi its said like "Marhattmoli"-मर्‍हाटमोळी (pronounced like மராட்டுமொழி)-Means related to Marathi Language.

[தொகு] மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

வணக்கம் கார்த்திக்பாலா. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:10, 2 மே 2011 (UTC)

[தொகு] நிர்வாக அணுக்கம் - நன்றி

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:54, 28 சூன் 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் Karthickbala,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

[தொகு] Invite to WikiConference India 2011

WCI banner.png

Hi Karthickbala,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

[தொகு] மீண்டும் வருக

கார்த்திக்கு, மீண்டும் வருக! சிறு இடைவெளிக்குப் பிறகுதான் எனினும், சில உயிரியல் கட்டுரைகளை எழுதும் பொழுதும் திருத்தும் பொழுதும், உங்களை நினைத்தேன். வருக!--செல்வா 17:04, 24 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] குதிரை

பல்வேறு விலங்கினங்கள் பற்றி ஆர்வமுடைய நீங்கள் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான குதிரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். விலங்குகள் / பறவைகள் பற்றிய ஒரு வலைவாசல் தொடங்கினாலும் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 15:09, 21 மே 2012 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karthickbala&oldid=1114757" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி