பயனர்:Alanvel

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், என் பெயர் 'வேல்முருகன்'. சொந்த ஊர் மதுரை. ஆயினும் பத்து வருடங்களாக சென்னையில் அவுட்சோர்ஸிங் துறையில் பணி. புத்தகம் வாசித்தல் பிடித்த பொழுதுபோக்கு. வாசித்தல் அனுபவம் என் விட்டில் இருந்தே எனக்கு கிடைத்தது. தந்தையார் சேர்த்து வைத்திருந்த என்னற்ற, கணக்கற்ற புத்தகங்களே எனக்கான தீனியாய் இருந்தது. இலக்கியம், அறிவியல், மனோத்தத்துவம், வரலாற்று சம்பந்தமான நூல்கள், கதைகள் படிப்பதில் மிகவும் விருப்பம். மொழிபெயர்ப்பில் ஆர்வம் உண்டு. ஆனால் பெரிதான முயற்சி இல்லை. பல வருடங்களுக்கு முன்னரே விக்கிபிடியா அறிமுகம் இருந்தாலும், இப்பொழுது தான் இதில் கவனம், ஆர்வம் திரும்பியுள்ளது. கோடிங் எழுதும் அனுபவம் இங்கு கைகொடுக்கிறது மற்றும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Alanvel&oldid=1833003" இலிருந்து மீள்விக்கப்பட்டது