சைவத் திருமுறைகள்
|
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
|
திருவிசைப்பா ( திருமாளிகைத் தேவர் • சேந்தனார் • கருவூர்த் தேவர் • பூந்துருத்தி நம்பிகாடநம்பி • கண்டராதித்தர் • வேணாட்டடிகள் • திருவாலியமுதனார் • புருடோத்தம நம்பி • சேதிராயர் ) திருப்பல்லாண்டு ( சேந்தனார் ) |
|
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
ஆலவாய் உடையார் • காரைக்கால் அம்மையார் • ஐயடிகள் காடவர்கோன் • சேரமான் பெருமான் • நக்கீரர் • கல்லாடர் • கபிலர் • பரணர் • இளம்பெருமான் • அதிராவடிகள் • பட்டணத்தடிகள் • நம்பியாண்டார் • |
|
|
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
திருமுறைத் தொகுப்பு [தொகு]
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் எனும் அழைக்கப்பட்டன.
பன்னிரு திருமுறைகளின் பட்டியல் [தொகு]
திருமுறை பாடிய சான்றோர்கள் [தொகு]
| வரிசை | திருமுறையாசிரியர் | திருமுறை | பாடல்கள் |
|---|---|---|---|
| 1. | திருஞான சம்பந்தர் | 1,2,3 | 4147 |
| 2. | திருநாவுக்கரசர் | 4,5,6 | 4066 |
| 3. | சுந்தரர் | 7 | 1026 |
| 4. | மாணிக்கவாசகர் | 8 | 1058 |
| 5. | திருமாளிகை தேவர் | 9 | 44 |
| 6. | கண்டராதித்தர் | 9 | 10 |
| 7. | வேணாட்டடிகள் | 9 | 10 |
| 8. | சேதிராசர் | 9 | 10 |
| 9. | பூந்துருத்தி நம்பிகாடநம்பி | 9 | 12 |
| 10. | புருடோத்தம நம்பி | 9 | 22 |
| 11. | திருவாலியமுதனார் | 9 | 42 |
| 12. | சேந்தனார் | 9 | 47 |
| 13. | கருவூர்த்தேவர் | 9 | 105 |
| 14. | திருமூலர் | 10 | 3000 |
| 15. | திருவாலவாயுடையார் | 11 | 1 |
| 16. | கல்லாடதேவ நாயனார் | 11 | 1 |
| 17. | அதிராவடிகள் | 11 | 23 |
| 18. | ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | 11 | 24 |
| 19. | இளம்பெருமான் அடிகள் | 11 | 30 |
| 20. | பரணதேவ நாயனார் | 11 | 101 |
| 21. | சேரமான் பெருமான் நாயனார் | 11 | 11 |
| 22. | கபிலதேவ நாயனார் | 11 | 157 |
| 23. | காரைக்கால் அம்மையார் | 11 | 143 |
| 24. | பட்டினத்துப் பிள்ளையார் | 11 | 192 |
| 25. | நக்கீர தேவ நாயனார் | 11 | 199 |
| 26. | நம்பியாண்டார் நம்பி | 11 | 382 |
| 27. | சேக்கிழார் | 12 | 4286 |