பதொம் (அலகு)
| SI அலகுகள் | |
|---|---|
| 1.8288 மீ | 182.88 சமீ |
| அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
| 6 அடி | 72 அங் |
![]() |
பதொம் (Fathom, சுருக்கம்: ftm) என்பது நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகாகும். பொதுவாக நீர்நிலை நீளங்களை அளக்க இது பயன்படும்.
பிரித்தானிய அலகுகளில் அல்லது அமெரிக்க மரபுவழி அலகுகளில் ஒரு பதொம் எனப்படுவது 2 யார் (6 அடி)களாகும்.[1] அடிப்படையில் அகல விரித்து நீட்டப்பட்ட மனிதனின் கைகளின் விரல் நுனிகளுக்கிடையிலான தூர அளவு இதுவாகும்.
பொருளடக்கம் |
[தொகு] பெயரீடு
பதொம் எனும் பெயர் பழைய ஆங்கிலச் சொல்லான fæðm என்பதிலிருந்து தோன்றியது. இதன் பொருள் நீட்டி அகல விரிக்கப்பட்ட கைகள் என்பதாகும்.[2][3][4]
[தொகு] பன்னாட்டு பதொம்
ஒரு பதொம் என்பது:
- 1.8288 மீட்டர் மிகச்சரியாக (1 மீட்டர் 0.5468 பதொம்களாகும்)
- 2 யார் (1 யார் சரியாக 0.5 பதொம்கள்)
- 6 அடி (அலகு) (1 அடி 0.1667 பதொம்கள்)
- 72 அங்குலம்
1959 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா, அவுத்திரேலியா, கனடா, நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன பன்னாட்டு யார் நீளத்தை 0.9144 மீட்டர் என வரையறுத்தது. அனைத்துலக முறை அலகுகளில் (SI) பத்தொம் அலகு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
[தொகு] பிரித்தானிய பதொம்
பிரித்தானியப் படைத்துறை பதொம் என்பது கடல் மைல்(6080 அடி) ஒன்றின் ஆயிரத்தில் ஒரு பங்கு (6.08அடிஅல்லது 1.85 மீ) என வரைவிலக்கணம் செய்யும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Encyclopædia Britannica eleventh edition 1911.
- ↑ Oxford English Dictionary, second edition, 1989;
- ↑ Bosworth, Joseph; Thomas Toller (ed.) (1898). An Anglo-Saxon Dictionary. Oxford, England: Clarendon Press. http://beowulf.engl.uky.edu/cgi-bin/Bosworth-Toller/ebind2html3.cgi/bosworth?seq=285.
- ↑ Fathom - Definition from the Merriam-Webster Online Dictionary.
