பதகளிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒருவர் நெருக்கடிக்குள்ளாகின்ற அல்லது சங்கடமான சந்தர்ப்பங்களை முகம்கொடுக்க நேரிடும்போது ஏற்படும் சாதாரண மனநிலை எழுச்சியே பதகளிப்பு (Anxiety) எனப்படும். இது தன்னாட்சியாக, உணர்வுநிலை, அறிநிலை மற்றும் நடத்தக் கோலங்களில் நிகழும் உடல் மற்றும் உள ரீதியான மாற்றம் ஆகும்.'[1] இது பயம் மற்றும் தன்னுணர்வு காரணமான இடர்நிலையாகும்.[2]

பதகளிப்பு ஏன் ஏற்படுகின்றது[தொகு]

 • வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை உருவாக்கவல்ல சந்தர்ப்பங்களும் (குடும்பத்தில், தொழிலில், அல்லது அன்றாட வாழ்கையில் ஏற்படும் உறவுப்பிரச்சினைகள், அழுத்தங்கள்)
 • மூளையில் நடக்கின்ற உயிரிரசாயன மாற்றங்கள்.
 • வேறு ஏதாவது நோய் அறிகுறியாக தைராய்டு சுரப்பியின் அதிகரித்த தொழிற்பாடு.

கட்டுப்படுத்தும் முறைகள்[தொகு]

 • அமைதியைக் கடைபிடித்தல். பொறுமையாக இருத்தல்
 • யோகாசனம், மனதை சாந்தப்படுத்தும் தொழுகை மற்றும் வணக்கங்களில் ஈடுபடுதல்
 • மனநல ஆலோசனைகள் மூலம்
 • மருந்துகள்

நீங்கள் செய்யக்கூடாதது என்ன?[தொகு]

 • வைத்திய ஆலோசனையின்றி மருந்துகளை உபயோகித்தல் அல்லது மதுபானம் அருந்தல்
 • அவசியமான சந்தர்ப்பங்களில் பொருத்தமான யோசனை; உதவியை நாடாமலிருத்தல்.

பதகளிப்பை உங்களால் கட்டுப்படுத்த முடியாது போகுமிடத்தும் இந்நிலை தொடர்ந்து நீடிக்குமிடத்தும் பொருத்தமான உடல்நல மற்றும் உளநல மருத்துவ உதவியை நாடுங்கள்.


மேற்கோள்கள்[தொகு]

 1. Seligman, M.E.P., Walker, E.F. & Rosenhan, D.L..Abnormal psychology, (4th ed.) New York: W.W. Norton & Company, Inc.
 2. Davison, Gerald C. (2008). Abnormal Psychology. Toronto: Veronica Visentin. பக். 154. ISBN 978-0-470-84072-6. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=பதகளிப்பு&oldid=1412094" இருந்து மீள்விக்கப்பட்டது