பண்பொழி திருமலை முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருமலை முருகன் கோயில்

பண்பொழி திருமலை முருகன் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாகாணம்: தமிழ்நாடு
மாவட்டம்: திருநெல்வேலி மாவட்டம்
அமைவு: பண்பொழி
கோயில் தகவல்கள்
மூலவர்: முத்துக்குமாரசாமி

திருமலை கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி தாலுக்காவில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில் ஆகும். கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் 'திருமலை முருகன்' என்றும் 'திருமலை முத்துகுமாரசுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் பெயர் இவ்வாறு அமைந்துள்ளதால், இங்கே காணப்படும் மக்களில் பலர் 'திருமலை' என்ற பெயருடன் காணப்படுகிறார்கள். இக்கோவில் வளாகத்தில் 'திருமலை அம்மனுக்கான' ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]