பண்பலை நாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்பலைநாதம் என்னும் சமூக வானொலியினை ஜெயச்சந்திரன் என்பவர் 28-10-2002 அன்று வவுனியாவில் ஆரம்பித்தார். இது வவுனியா சமூகத்தின் கலை, கலாசாரத்தை பிரதிபலித்தது. கட்சிப் பின்னணியோ, அரசியல் பின்னணியோ அற்ற ஒரு வானொலியாக விளங்கியது.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் நிலவிய சமாதான காலத்தில் சிறப்பாக இயங்கிய பண்பலைநாதம் பின் பேச்சுவார்த்தை முறிந்து போர் ஆரம்பமானவுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. ஜெயச்சந்திரன் ஊடகத்துறை பட்டதாரியாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பலை_நாதம்&oldid=2244001" இலிருந்து மீள்விக்கப்பட்டது