பண்டைக்காலக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைக்காலக் கலை வரலாறு
தொடர்
மத்திய கிழக்கு
பண்டை எகிப்து
மெசொப்பொத்தேமியா
ஆசியா
இந்தியா
சீனா
சப்பான்
சித்தியா
ஐரோப்பிய வரலாற்றுக்கு முந்திய காலம்
எட்ரசுக்கன்
செல்ட்டியம்
பிக்டுகள்
நார்சு
விசிகோத்தியம்
செந்நெறிக் கலை
பண்டைக் கிரேக்கம்
எலெனியம்
ரோம்

பண்டைக்காலக் கலை என்பது, பழங்காலச் சமுதாயங்களின் பண்பாடுகள் சார்ந்த பல வகையான கலைகளுள் ஒன்றைக் குறிக்கும். இவ்வாறான கலைகள் சீனா, இந்தியா, மெசொப்பொத்தேமியா, எகிப்து, கிரீசு, ரோம் போன்ற உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால கட்டங்களில் தோன்றி அவற்றுக்கே உரிய தனித் தன்மைகளுடன் வளர்ந்தன. இவற்றுட் பல கலைகள் முற்றாகவே அழிந்து விட்டாலும் வேறு சில, பிற்காலக் கலை வளர்ச்சியில் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளதையும் அறிய முடிகிறது.

ஆப்பிரிக்கா[தொகு]

மொரோக்கோ[தொகு]

இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழமையான சிற்றுருவான தான்-தானின் வீனசு, ஆசூலியன் காலத்தில் கிமு 500,000க்கும் 300,000க்கும் இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்தது. மொரோக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட இது 6 சதமமீட்டர் நீளம் கொண்டது. இது நிலவியல் செயற்பாடுகளால் இயற்கையாகவே உருவாகி மிகக்குறைந்த மனித வேலைப்பாட்டுக்கு உட்படிருக்கக்கூடிய சான்றுகள் தென்படுகின்றன. எனினும், இதன்மீது நிறம் பூசப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இது எந்தவகையில் உருவாகியிருந்தாலும், இரும்பு, மங்கனீசு ஆகியவற்றைக் கொண்ட ஒருவகை எண்ணெய்த் தன்மையான பொருள் பூசப்பட்டு சிற்றுருவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எகிப்து[தொகு]

எகிப்தில் கிமு 3500 ஆம் ஆண்டளவிலேயே "ஃபையான்சு" எனப்படும் வெண்ணிற மினுக்கமூட்டப்பட்ட மட்பாண்டங்களைச் செய்தனர். இவை கிபி 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் செய்யப்பட்ட இதே வகையான தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டங்களிலும் சிறந்தவையாக இருந்தன. பண்டை எகிப்தில் செய்யப்பட்ட இவ்வகை மட்பாண்டங்கள் களிமண்ணால் செய்யப்பட்டனவல்ல. இவை உண்மையில், பெரும்பாலும் குவாட்சை உள்ளடக்கிய வெண்களியினால் செய்யப்பட்டவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைக்காலக்_கலை&oldid=1828422" இலிருந்து மீள்விக்கப்பட்டது