பண்டுவாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) அல்லது பண்டுவாசுதேவ இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் முதலாவது அரச மரபைத் தோற்றுவித்தவனும் முதல் அரசனுமான கலிங்க இளவரசன் விஜயனின் உடன்பிறந்தான் மகனாவான். கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான்.

பண்டுவாசுதேவன் இலங்கை வரவு [தொகு]

சிறிது கால இடைவெளியின் பின்னர் கலிங்கநாட்டில் இருந்த பண்டுவாசுதேவன் அழைத்து வரப்பட்டு முடி சூட்டப்பட்டான். இளவரசன் பண்டுவாசுதேவன் பிரபுத்துவ குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களான உதவியாளர்களுடன் வந்ததாக இலங்கைச் சரித்திரம் கூறும் நூலான மகாவம்சம் கூறுகின்றது. கலிங்க நாட்டிலிருந்து வந்த இளவரசியான புத்தகாஞ்சனா என்பவளை பண்டுவாசுதேவன் மணம் செய்துகொண்டான். புத்தகாஞ்சனா பண்டைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவனும் புத்தரின் ஒன்றுவிட்ட சகோதரனுமான பாண்டா என்னும் அரசனுடைய மகளாவாள். இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான்.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்டுவாசுதேவன்&oldid=733079" இருந்து மீள்விக்கப்பட்டது