பட்டினத்தார் திருவிசைப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்

பட்டினத்தார் திருவிசைப்பா [1] என்னும் நூல் ஒன்றின் பாடல்கள் என மூன்று பாடல்களை எல்லப்ப நாவலர் காட்டிக் குறிப்பிட்டுள்ளார். இசைப் பாடல்களைக் கொண்ட நூல் திருவிசைப்பா. பன்னிரு திருமுறைகள் தொகுப்பில் இது ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிசைப்பா தொகுப்பில் இந்த நூல் இடம்பெறவில்லை. இது 16 ஆம் நூற்றாண்டு நூல் எனக் கொள்ளத் தக்கது. பட்டினத்தார் என்னும் பெயர் கொண்ட புலவர்களில் இந்தப் பாடல்களைப் பாடிய புலவரும் ஒருவர்.

பாடல் [2][தொகு]

ஞானத்தின் சிறப்பைக் கூறும் பாடல்

அரசனுக்கு இணை ஆகுமோ பரிசனம் அனைத்தும்
தெரியின் ஞானம் நேர் ஆகுமோ கிரியையின் திரளும்
பரிசனங்கள் பற்பல பெறில் அரசன் நேர் படைக்கும்
கிரியை பற்பல புரிந்திடின் ஞானமும் கிடைக்கும். [3]
அடிக்குறிப்பு[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 157. 
  2. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  3. குறிப்பிட்ட மூன்று பாடல்களில் மு. அருணாசலம் இந்த ஒருபாடலை மட்டுமே பதிப்பித்துள்ளார்