ஆல்பைன் பட்டாம்பூச்சி முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பட்டாம்பூச்சி முடிச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆல்பைன் பட்டாம்பூச்சி முடிச்சு
A butterfly loop with a carabiner.
பெயர்கள்ஆல்பைன் பட்டாம்பூச்சி முடிச்சு, பட்டாம்பூச்சித் தடம், லினமனின் தடம், ஆல்பைன் பட்டாம்பூச்சித் தடம்
வகைதட வகை
மூலம்பழங்காலம்
தொடர்புவேளாண் தடம், Artillery loop, அகல்வுத் தடம், அல்பைன் பட்டாம்பூச்சி தொடுப்பு
அவிழ்ப்புNon-jamming
பொதுப் பயன்பாடுஇடைக் கயிற்றில் தடம் போடுதல். தேய்ந்துபோன கயிற்றின் பகுதியை தனிப் படுத்தல்.
ABoK
  1. 331, #1053

பட்டாம்பூச்சித் தடம், பட்டாம்பூச்சி முடிச்சு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் ஆல்பைன் பட்டாம்பூச்சி முடிச்சு கயிற்று இடையில் போடப்படும் ஒரு உருக்குலையாத் தடம் ஆகும். இது நிலைத்த இரு முனைகளைக் கொண்ட கயிறொன்றில் போடத் தக்கது. இதனால், கயிற்றின் இரு முனைகளிலும், தடத்திலும் சுமை ஏற்றலாம். சமச்சீரான இந்த முடிச்சு பல்திசைச் சுமையேற்றத்துக்கு இடந்தரக்கூடியது.[1] இது "..... குறுக்குக் கயிறுகளை இணைத்தல், கயிற்றில் சில இடங்களை நிலைப்படுத்தல், கயிற்றின் நீளத்தைக் குறைத்தல், கயிற்றின் பழுதான பகுதிகளைத் தனிமைப்படுத்தல் போன்றவற்றுக்கு மிகவும் உகந்தது."[2]

பயன்கள்[தொகு]

பட்டாம்பூச்சித் தடம் கூடிய அறுவைப் பலம் கொண்டது. இதனால், மலையேறுவோர் பயன்படுத்துகின்ற வலிமையான முடிச்சுக்களில் ஒன்றாக இது உள்ளது. இந்த முடிச்சு மலையேறுபவர்களை இன்னொரு கயிற்றின் நடுவில் இணைப்பதற்குப் பயன்படுகிறது. இது முதன்மைக் கயிறு இறுகிவிடும் நேரத்தில் அசைவதற்கு இடமளிப்பதுடன், முதன்மைக் கயிற்றின் இரு முனைகளிலும் அவர்கள் தாங்கப்படும் வசதியையும் அளிக்கிறது. இத் தடம் வளையம் ஒன்றின்மூலம் ஏறுபவர்களைத் தாங்கும் "விழுதுத் தண்டு"டன் (harness) இணைக்கிறது.

இது கயிற்றின் பழுதான பகுதிகளைத் தனிப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. பழுதான அல்லது தேய்ந்துபோன பகுதி தடத்தினுள் வரும்படி முடிச்சிடப்படுகிறது. அவ்வேளைகளில் தடத்தைச் சுமையேற்றுவதற்குப் பயன்படுத்த முடியாது.

கயிற்றின் இடையில் பட்டாம்பூச்சு முடிச்சுக் கட்டுதல்.

குறிப்புகள்[தொகு]

  1. On Rope, பக். 49
  2. Alpine Caving Techniques, p. 73

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]