படவணு அடர்த்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் அங்குலத்தில் உள்ள படவணுக்கள் (Pixels per inch (PPI - பிபிஐ)) அல்லது படவணு அடர்த்தி என்பது கணினித் திரைகள், பட வருடிகள், எண்ணிப் படப்பிடி கருவிகளின் வருடிகள் போன்றவற்றின் பிரிதிறனை அளக்கப் பயன்படும் ஒரு அளவீடு ஆகும்.
ஒரு படத்தின் பிரிதிறனை பிபிஐ கொண்டு வரையறை செய்யலாம். எ.கா 100 x 100 படவணுக்கள் கொண்ட ஒரு படம், ஒரு அங்குல சதுரத்தில் அச்சிடப்பட்டால், அது 100 புள்ளிகளை ஓர் அங்குலத்தில் கொண்டுள்ளது (dots per inch (DPI)) எனக் கூறலாம். பொதுவாக ஒரு படம் அச்சிடப்பட 300 புள்ளிகள் ஓர் அங்குலத்துக்குத் தேவை.