பஞ்சலட்சணத் திருமுகவிலாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் 1899 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் நூல். விலாசம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலைப் பாடியவர் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை. இவர் சிவகங்கை மிராசு கணக்கரும் அரசவைப் புலவர்களுள் ஒருவர்.[1] 1876-78 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைத் தாக்கிய தாது வருடப் பஞ்சத்தைக் கருப்பொருளாகக் கொண்ட அங்கத நூல் இது.

ஏறத்தாழ 4500 வரிகளில் பஞ்ச காலத்தில் மக்களின் அவலத்தை நகைச்சுவையுடன் விவரிக்கின்றது. சோதிடர்கள், விலைமாதுக்கள், நகை ஆசாரிகள் ஆகியோரின் போலித்தனத்தையும் பொய் புரட்டையும் தாக்குகிறது. மதுரை சுந்தரேசுவரக் கடவுள், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்களைத் தன்னால் தீர்க்க இயலாது என்று கைவிரித்து அவர்களை சிவகங்கை சமீந்தார் துரைசிங்கத் தேவரிடம் முறையிடுமாறு அனுப்புவதாக நூல் அமைந்துள்ளது.[2][3][4] [5] [6]

விமர்சனங்கள்[தொகு]

  • வில்லியப்பர் பாடிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம் நகைச்சுவையின் பொக்கிசமாக உள்ளது - எஸ். வையாபுரிப்பிள்ளை
  • 1899 இல் அரங்கேறிய இந்த நூலுக்கு இணையான நகைச்சுவை நூல் இவ்வுலகத்திலேயே இல்லை. - கு. அழகிரிசாமி
  • நையாண்டி இலக்கியம் என்னும் துறையில் பஞ்சலட்சணம் தான் முதற் பெரு நூலாகவும் முன்னோடியாகவும் விளங்குகிறது. தொ. மு. சிதம்பர ரகுநாதன்
  • விந்தை முகவிலாசம் உரை வில்லியப்பர்க்கு அடியேன் கந்தன் அடிப்பொடி சா. கணேசனார்
  • This important satirical poem is not available now and deserves to come out in good format - A.V. Subramany Aiyar

மேற்கோள்கள்[தொகு]

  1. "நூல் வெளியீட்டு விழா". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. [தொடர்பிழந்த இணைப்பு] பஞ்சம் (1876) தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியப்பபிள்ளை பஞ்சலட்சணத் திருமுக விலாசம் என்ற கலியுகபெருங்காவியத்தைப் பாடினார். -ஒப்பியல் இலக்கியம் க. கைலாசபதி க. கைலாசபதி
  3. அத்.29, கோபல்லபுரத்து மக்கள், கி. ராஜநாராயணன்
  4. .....Panchalatchana Thirumugavilaasam , a satire published in 1899, composed by Piramanur Villiappa Pillai, one of the court poets of Sivagangai. This narrative piece full of humour and bitin g irony deals in ca.4500 lines with the conditions of the people suffering in the great famine of 1876... God Sunderesvara of Madurai pleads his helplessness in solving the problems of inhabitants hit by the famine..கமில் சுவெலபில் (1974). Tamil Literature. Otto Harrassowitz Verlag. பக். 218–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-447-01582-0. http://books.google.com/books?id=OQ33i496MsIC&pg=PA218. பார்த்த நாள்: 1 January 2013. 
  5. பக். 168-169, வண்டாடப் பூ மலர, ம.பெ. சீனிவாசன் ISBN 978-81-8345-338-7
  6. பஞ்ச லட்சணத்திருமுக விலாசம் - பிரமனூர் வில்லியப்ப பிள்ளை. பதிப்பாசிரியர் ம.பெ. சீனிவாசன், - August 2014 - கவிதா வெளியீடு, சென்னை-17. ISBN 978-81-8345-428-5

வெளி இணைப்புகள்[தொகு]

[1] [Shree Kailasha Nathar Temple]

பிரமனூரில் காணமல்போன பெருமாள் கோவிந்தராஜ பெருமாள் கோயில்
www.thiruvarutprabandam.in பரணிடப்பட்டது 2016-10-08 at the வந்தவழி இயந்திரம்