ராசேந்திர குமார் பச்சோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பச்சோரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராசேந்திர குமார்பச்சோரி
பிறப்புஆகத்து 20, 1940 (1940-08-20) (அகவை 83)
நைனித்தால், உத்தராகண்ட், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதலைவர், ஐ.பி.சி.சி.
சமயம்இந்து

ராசேந்திர குமார் பச்சோரி (Rajendra Kumar Pachauri, பிறப்பு: ஆகஸ்ட் 20, 1940) ஆற்றல் மற்றும் வள மூலங்களுக்கான நிறுவனத்தின் (TERI) தலைமை-நிர்வாகியாகவும், பருவநிலை மாறுதல்களுக்கான பன்னாட்டுக் குழுவின் (IPCC) தலைவராகவும் உள்ளார். மேலும் ஆற்றல் மற்றும் வளமூலங்களுக்கான நிறுவன டெரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.

2007 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, பச்சோரி தலைமை வகிக்கும் IPCC மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் துணைத்தலைவரான அல் கோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. சனவரி 2008ஆம் ஆண்டு பதும விபூசண் விருது பெற்றார்.

விருதுகளும் பெருமைகளும்[தொகு]

  • 2000 - ஆயிரவாண்டு முன்னோடி விருது – உலக புதுப்பிக்கவல்ல ஆற்றல் பிணையம்.
  • 2006 - "Officier de La Legion d'Honneur", பிரெஞ்சு தூதரிடமிருந்து.
  • 2006 - சவகர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது.
  • 20 டிசம்பர் 2007 - ஜப்பான், கியோத்தோவில் உள்ள Ritsumeikan பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.
  • 2007 - NDTV வழங்கிய உலகளாவிய இந்தியர் விருது.
  • 2007 - அமைதிக்கான நோபல் பரிசு IPCC மற்றும் அல் கோர் ஆகியோருக்கு.
  • 2008 - பத்ம விபூசண்.
  • 26 மே 2008 - அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.
  • 6 சூன் 2008 - IIFA Global Leadership Awar.
  • 17 சூலை 2008 - கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]