பசுங்கூரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுங்கூரை (Green roof) என்பது பகுதியாகவோ முழுதாகவோ, மண் அல்லது வேறு வகை வளர்ச்சி ஊடகத்தையும், தாவரங்களையும் கொண்ட கூரைகளைக் குறிக்கும். இவை அனைத்தும் பொதுவாக ஒரு நீர்தடுப்புத்தகட்டின் மேல் இருக்கும். இக் கூரைகள், வேர்தடுப்பிகள், நீர்பாசனத் தொகுதிகள் போன்றவற்றையும் உள்ளடக்கி இருக்கலாம். கூரைகளின் மேல் சாடிகளில் தாவரங்கள் வளர்க்கப்பட்டால் அது உண்மையான பசுங்கூரை அல்ல. எனினும் இது தொடர்பாகப் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. கூரை மீது அமைக்கப்படும் கழிவு நீர் தூய்மைப்படுத்தல் குளமும் கூட பசுமைக்கூரையின் பகுதியாக அமையக்கூடும்.