பசுக் கண்ணிமுடிச்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பசுக் கண்ணிமுடிச்சு | |
|---|---|
| பெயர்கள் | பசுக் கண்ணிமுடிச்சு, Lark's head, Lark's foot, Girth hitch, வளையக் கண்ணிமுடிச்சு, Lanyard hitch, Baggage Tag Loop |
| வகை | கண்ணி வகை முடிச்சு |
| மூலம் | தெரியாது |
| தொடர்பு | Clove hitch, Cat's paw, Prusik, Klemheist, Icicle hitch |
| அவிழ்ப்பு | Non-jamming |
| பொதுப் பயன்பாடு | Tying a rope to a ring or pole |
| எச்சரிக்கை | Can fail unless equal tension is applied to both of the standing parts of the rope. |
| ABoK | #244 |
பசுக் கண்ணிமுடிச்சு (Cow hitch) என்பது கண்ணிமுடிச்சு (hitch) வகையைச் சேர்ந்த ஒரு முடிச்சு ஆகும். இதில் இரண்டு அரைக் கண்ணிமுடிச்சுக்கள் எதிரெதிர்த் திசையில் அமைந்துள்ளன. இவாறான அரைக் கண்ணிமுடிச்சுக்கள் ஒரே திசையில் அமைந்தால் அது கராம்புக் கண்ணிமுடிச்சு எனப்படும்.
பொருளடக்கம் |
கட்டும் முறை[தொகு]
கயிற்றின் இரண்டு முனைகளையும் பயன்படுத்திக் கட்டுதல்[தொகு]
கட்டுவதற்குக் கயிற்றின் இரு முனைகளையும் பயன்படுத்த முடியுமானால், பின்வரும் முறையில் இம் முடிச்சைப் போட முடியும். ஒரு வளையத்தில் இம்முடிச்சைப் பயன்படுத்திக் கயிற்றைக் கட்டும் முறை இந்து தரப்படுகிறது:
- கயிற்றை இரண்டாக மடித்து மடிப்புப் பக்கத்தைக் கீழிருந்து வளையத்தினூடாகச் செலுத்தவேண்டும்.
- மடிப்பின் நுனியை வளையத்தினூடாகக் கீழ் நோக்கி இழுக்கவேண்டும்.
- இரண்டு நிலைப் பகுதிகளையும் எடுத்து அவற்றின் முனைகளை ஒருங்கே வளையத்தினூடாகக் கீழ்நோக்கித் தொங்கும் மடிப்பினூடாகச் செலுத்தி இழுக்கவேண்டும்.
இதுவே பசுக் கண்ணிமுடிச்சுப் போடும் முறையாகும்.