பங்கீட்டுப் பண்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்தில், குறிப்பாக நுண்புல இயற்கணிதத்தில் (abstract algebra) பங்கீட்டுப் பண்பானது (Distributivity) அடிப்படை இயற்கணிதத்தில் (elementry algebra) அமைந்துள்ள பங்கீட்டு விதியின் பொதுவாக்கமாகும். இப்பண்பு ஈருறுப்புச் செயலிகளின் பண்பாகும். எடுத்துக்காட்டாக

2 x (1+3) = (2x1) + (2x3) = 8 என்ற சமன்பாட்டில்,

இடதுபுறம் 1,3 ஐக்கூட்டிவரும் விடையை 2ஆல் பெருக்க வேண்டும். வலதுபுறம் 2,1ஐப் பெருக்கிவரும் விடையையும் 2,3 ஐப் பெருக்கிவரும் விடையையும் கூட்டவேண்டும். இரண்டிலும் முடிவில் ஒரே விடைதான் கிடைக்கிறது. எனவே 2ஆல் பெருக்குவது என்ற செயல், 1,3ஐக் கூட்டும் செயலைப் பொறுத்து பங்கீட்டுப் பண்புடையது எனப்படுகிறது. 2,1,3 ஆகிய எண்களுக்குப்பதில் வேறு எந்த மெய்யெண்களைப் பிரதியிட்டாலும் இச்சமன்பாடு மெய்யானதாகும். எனவே மெய்யெண் பெருக்கலானது மெய்யெண் கூட்டலைப் பொறுத்து பங்கீட்டுப் பண்புடைய செயலியாகும்.

பொருளடக்கம்

[தொகு] வரையறை

+, . என்பன கணம் Sன் மீது வரையறுக்கப்பட்ட இரு ஈருறுப்புச்செயலிகள் என்க. x,y,z அக்கணத்தின் எவையேனும் மூன்று உறுப்புகள்.

  • x . (y+z) = x.y + x.z எனில், . என்ற செயலானது + என்ற செயலைப் பொறுத்து வலது பங்கீட்டுப் பண்புடையது.
  • (y+z) . x = y.x + z.x எனில், . என்ற செயலானது + என்ற செயலைப் பொறுத்து இடது பங்கீட்டுப் பண்புடையது.
  • வலது மற்றும் இடது பங்கீட்டுப் பண்புகள் இரண்டும் இருந்தால் மட்டுமே . என்ற செயலானது + ஐப் பொறுத்து பங்கீட்டுப் பண்புடையதாகும்.[1]
  • . செயலுக்குப் பரிமாற்றுப் பண்பிருந்தால் மேலே காணும் மூன்று கூற்றுகளுமே சமானமானவையாகும்.

[தொகு] எடுத்துக்காட்டுகள்

[தொகு] குறிப்பு

  1. Ayres, p. 20.

[தொகு] மேற்கோள்கள்

  • Ayres, Frank, Schaum's Outline of Modern Abstract Algebra, McGraw-Hill; 1st edition (June 1, 1965). ISBN 0070026556.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பங்கீட்டுப்_பண்பு&oldid=1093789" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்