பகுப்பு பேச்சு:லினக்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை லினக்ஸ் என்ற மாற்ற கோருகிறேன். லினக்ஸ் என்பது அதைக் கண்டுபிடித்தவர் வைத்த பெயர். இதை மாற்ற நமக்கு உரிமை இல்லை. இது அவரை அவமானப்படுத்துவது போல் உள்ளது ;)--ரவி 04:57, 29 ஏப்ரல் 2009 (UTC)

';)' குறியீட்டைப் பார்ப்பதற்கு முன்னர் நீங்களுமா என்று நினைத்தேன். :-) -- சுந்தர் \பேச்சு 05:01, 29 ஏப்ரல் 2009 (UTC)


ரவி நீங்கள் வேடிக்கையாக்க் கூறினாலும், இது பற்றிய தெளிவான எண்ணம் பல தமிழர்களிடம் இல்லை. இந்த உரிமையைத் தன்பெயர்காக்கும் வீரர்கள் தமிழ்மொழியிடம் மட்டும் மிக வீறுடன் வைக்கிறார்கள். தாங்கள் அறிந்த ஆங்கிலத்தில் திரிவுறுவதையோ அல்லது பிற பல நூற்றுக்கணக்கான மொழிகளில் வெவ்வேறு பெயர்கள் திரிபுறுவதையோ அறிந்தும் அறியாதது போலவோ, அல்லது அறிந்தும் தமிழ் மொழியாளர்களை மட்டும் தாக்கும் தனிவீரம் படைத்தவர்கள் இவர்கள், அதுவும் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக்கொண்டே. லினக்சு என்பது நிறைவு தரவில்லைதான். இதன் ஒலிப்பு linukchu (linux அல்ல). லினக்ஃசு என்றால் linuxsu என்னும் ஒலிப்பு கிட்டும். தமிழில் கஃசு என்று ஒரு சொல் உண்டு அதன் பொருள் காற்பலம் என்னும் எடை. அதாவது
நான்கு கஃசு = 1 பலம். திருக்குறளில் பொருட்பாலில் உழவு பற்றிக் கூறும் பொழுது இச்சொல் ஆளப்பட்டிருப்பதைப் பலரும் அறிவர்:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

இதில் வரும் கஃசு என்னும் சொல்லை kuxsu அல்லது kahsu என்று ஒலித்தல் வேண்டும். எனவே லினஃசு என்றோ லினக்ஃசு என்றோ எழுதினால் ஒலிப்பு இன்னும் நெருக்கமாக இருக்கும். ஒலிப்பு நெருக்கம் இல்லாவிடினும் பொருட்படுத்த வேண்டாம், ஆனால் நாம் நம் மொழிக்கு ஏற்றவாறு ஒலிக்கலாம் (அப்படித்தான் ஏறத்தாழ எல்லா மொழியாளர்களும் செய்கிறார்கள்) என்பதனை தமிழர்களில் பலர் இன்னும் உணரவில்லை. --செல்வா 13:13, 29 ஏப்ரல் 2009 (UTC)

லினக்ஃசு, லினஃசு இரண்டுமே துல்லிய ஒலிப்பு தரவில்லை. இயன்ற வரை நெருங்கிய ஒலிப்பு தான். ஏற்கனவே f எழுத ஃப எழுதி குழப்பி வருகிறார்கள். மேலும் புதிய புதிய முறைகளை அறிமுகப்படுத்திக் குழப்ப வேண்டாமே? லினக்சு என்று எழுதுவதைப் பெரும்பான்மையினர் ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்--ரவி 11:16, 9 மே 2009 (UTC)[பதிலளி]

ரவி, புதிய முறை இல்லை!!! தமிழ் எழுத்துகளின் இயல்பான ஒலிகளைக் கொண்டே ஓரளவுக்கு நெருக்கமான ஒலிப்பைத் தரும்படி எழுதலாமே என்பதுதான் என் பரிந்துரை. எதுவுமே துல்லிய ஒலிப்பு தராது என்பது உண்மை. லினக்சு என்பதை பெரும்பாலோர் ஒப்புக்கொண்டால் சரிதான். லினக்ஸ் என்று எழுதுவோர் லினக்சு என்று எழுதலாம் அல்லது ஒலித்துல்லியம் கூட லினஃசு என்று எழுதலாம் என்பதே என் பரிந்துரை. லினக்சு என்பதை Linukchu என்று ஒலித்துவிட்டால் நான் இப்பரிந்துரையைத் தந்திருக்க மாட்டேன். லினக்சு என்று எழுதிவிட்டு லினக்ஸ் என்று சொல்லிப் பழகினால் எழுத்துக்கூட்டலுக்கும் ஒலிப்புக்கும் இடைவெளி பெருகிக்கொண்டே போக வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதில் வேறு சில சிறு இலக்கண நுட்பக் கருத்துகளும் உள்ளன (ஆனால் அவற்றை இங்கு பேச வேண்டியதில்லை)--செல்வா 16:15, 9 மே 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:லினக்சு&oldid=377358" இலிருந்து மீள்விக்கப்பட்டது