பகிடிவதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பகிடிவதை (ragging) என்பது பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் உட, உள ரீதியாகப் புதிய மாணவர்கள் பழைய மாணவர்களால் துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காகச் செய்யப்படுவது என்று கூறப்படும் இந்நடவடிக்கையால் புதியவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவதுண்டு.

பகிடிவதை பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மிகப் பரவியிருந்ததாகக் கூறப்படுகிறது.

பகிடிவதை பொதுவாக மூன்று வகைப்படுகிறது

  • பேச்சுரீதியான (உள) துன்புறுத்தல்
  • உடல்ரீதியான துன்புறுத்தல்
  • பாலியல் ரீதியான துன்புறுத்தல்

சில மாணவர்கள் தற்கொலை வரை செல்ல பகிடிவதையே காரணம் எனப்படுகிறது. உடல்ரீதியான துன்புறுத்தல் இறப்புக்கும் காரணமாவதுண்டு. இலங்கையில் வரப்பிரகாஷ் என்ற மாணவனின் மரணம் இத்தகையதொரு சம்பவமாகும்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்