நொரடோம் சீயனூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நொரடோம் சிகானூக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நொரடோம் சீயனூக்
Norodom Sihanouk
នរោត្តម សីហនុ
கம்போடியாவின் மன்னர் (1ம் தவணை)
ஆட்சிக்காலம் 25 ஏப்ரல் 1941 – 2 மார்ச் 1955
முடிசூடல் செப்டம்பர் 1941
முன்னையவர் சிசோவத் மொனிவொங்
பின்னையவர் நொரிடோம் சுராமரித்
கம்போடியாவின் மன்னர் (2ம் தவணை)
ஆட்சிக்காலம் 24 செப்டம்பர் 1993 – 7 அக்டோபர் 2004
முன்னையவர் சியா சிம்
பின்னையவர் நொரடோம் சிகாமொனி
வாழ்க்கைத் துணை நொரடோம் மொனினீத்
(12 ஏப்ரல் 1952 முதல்)
வாரிசு
14 பிள்ளைகள்
முழுப்பெயர்
பிரியா கருணா பிரியா பாட் சாம்தெக் பிரியா நொரடோம் சிகானூக் பிரியாமகாவீரக்சாத்
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
{{{posthumous name}}}
மரபு நொரடோம் மாளிகை
தந்தை நொரடோம் சுராமரித்
தாய் சிசோவத் கொசமாக்
கையொப்பம்
சமயம் பௌத்தம்
நொரடோம் சிகானூக்

கம்போடியாவின் முதல் பிரதமர்
பதவியில்
18 மார்ச் 1945 – 13 ஆகத்து 1945
முன்னவர் புதிய பதவி
பின்வந்தவர் சொன் நுகொக் தான்

கம்போடியாவின் 12வது பிரதமர்
பதவியில்
28 ஏப்ரல் 1950 – 30 மே 1950
முன்னவர் யெம் சாம்பர்
பின்வந்தவர் சம்தெக் குரொம் லுவோங் சிசோவத் மொனிபொங்

கம்போடியாவின் 16வது பிரதமர்
பதவியில்
16 சூன் 1952 – 24 சனவரி 1953
முன்னவர் ஊய் கந்தோல்
பின்வந்தவர் பென் நூத்

கம்போடியாவின் 20வது பிரதமர்
பதவியில்
7 ஏப்ரல் 1954 – 18 ஏப்ரல் 1954
முன்னவர் சான் நாக்
பின்வந்தவர் பென் நூத்

கம்போடியாவின் 23வது பிரதமர்
பதவியில்
3 அக்டோபர் 1955 – 5 சனவரி 1956
முன்னவர் லெங் உங்கெத்
பின்வந்தவர் ஓம் சீங் சுன்

கம்போடியாவின் 25வது பிரதமர்
பதவியில்
1 மார்ச்சு 1956 – 24 மார்ச்சு 1956
முன்னவர் ஓம் சீங் சுன்
பின்வந்தவர் கிம் திட்

கம்போடியாவின் 27வது பிரதமர்
பதவியில்
15 செப்டம்பர் 1956 – 15 அக்டோபர் 1956
முன்னவர் கிம் திட்
பின்வந்தவர் சான் யுன்

கம்போடியாவின் 35வது பிரதமர்
பதவியில்
9 ஏப்ரல் 1957 – 7 சூலை 1957
முன்னவர் சாம் யுன்
பின்வந்தவர் சிம் வார்

கம்போடியாவின் 36வது பிரதமர்
பதவியில்
3 ஏப்ரல் 1960 – 19 ஏப்ரல் 1960
முன்னவர் இவரே
பின் வந்தவர் போ புரொயுங்
அரசியல் கட்சி சாங்கும்

துறை அரசியல்வாதி

நொரடோம் சீயனூக் அல்லது நொரடோம் சிகானுக் (Norodom Sihanouk, (கெமர் மொழி: នរោត្តម សីហនុ; 31 அக்டோபர் 1922 - 15 அக்டோபர் 2012) கம்போடியாவின் முன்னாள் மன்னர் ஆவார். இவர் 1941 முதல் 1955 வரையும், பின்னர் 1993 முதல் 2004 வரையும் மன்னராகவிருந்தவர். 1953 முதல் 1970 வரை அந்நாட்டின் நிறைவேற்றுத் தலைவராகவும் இருந்தார். 2004 ஆம் ஆண்டில் இவர் முடி துறந்ததை அடுத்து கம்போடியாவின் மன்னர்-தந்தை (கெமர் மொழி: Preahmâhaviraksat) என அழைக்கப்பட்டார். இவருக்குப் பின்னர் இவரது மகன் நொரடோம் சிகாமொனி மன்னரானார்.

சிகானுக் 1922 ஆம் ஆண்டில் அரசர் நொரடோம் சுராமரித், அரசி கொசாமக் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சாய்கோன் பிரெஞ்சுப் பாடசாலைகள், பின்னர் பாரிசிலும் கல்வி கற்றார். அப்போதைய பிரான்சின் நாட்சி அரசினால் 18வது அகவையில் கம்போடியாவின் மன்னராக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்ததை அடுத்து பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடினார். 1953 இல் விடுதலை கிடைத்தது. அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து லொன் நொல் கம்போடியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனை அடுத்து சிகானூக் சீனாவில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.

1975 ஆம் ஆண்டில் கெமர் ரூச் கம்போடியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சீயனூக் நாடு திரும்பினார். ஆனாலும், அவர் அரண்மனையில் கெமர் ரூச் ஆட்சியாளர்களால் அவர்களின் நான்காண்டு ஆட்சிக் காலம் முழுவதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.[1]

வியட்நாமியப் படையினர் கெமர் ரூச் ஆட்சியாளரைத் தோற்கடித்ததை அடுத்து சீயனூக் மீண்டும் சீனா சென்றார். கம்போடியா உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட அந்தப் 13 ஆண்டு காலம் சிகானூக் சீனாவில் தங்கியிருந்தார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் பேரில், வியட்நாம் படைகள் 1991 இல் கம்போடியாவில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து சீயனூக் 1993 இல் நாடு திரும்பி மீண்டும் மன்னராக முடி சூடிக் கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நொரடோம்_சீயனூக்&oldid=1379220" இருந்து மீள்விக்கப்பட்டது