நையாண்டி மேளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நையாண்டி மேளம் என்பது காவடி, கரகம், முதலியவற்றுக்குப் பொருந்துமாறு அடிக்கும் மேள வகையாகும்.[1] நையாண்டி மேளம் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணி இசையாக இடம் பெறுகின்றது. திறந்தவெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினரால் வட்டமாக நின்று கொண்டு இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன.[2]

நையாண்டி மேளத்தின் அமைப்பு[தொகு]

கரகாட்டத்திற்கு நையாண்டி மேளம் பக்க இசையாக நிகழ்த்தப்படுகிறது. நையாண்டி மேளம் இரு நாதசுவரம், இரு தவில்களும் முதன்மை இசைக் கருவிகளாகவும், பம்பை, உறுமி, கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, கோந்தளம், ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் போன்ற இசைக் கருவிகள் பக்க இசையாகவும் அமையும். இப்பக்க இசையில் நாதசுரக் கலைஞர்கள் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து கொண்டும் ஆட்டக் கலைஞர்களுடன் இணைந்து ஆடியும் நிகழ்த்துவதால் இந்தப் பக்க இசை (பக்க வாத்தியம்) நையாண்டி மேளம் என்று அழைக்கப்படுகிறது. கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமையப் பெறுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. அகரமுதலி
  2. வி.வி. சடகோபன், (இ.ஆ)., தென் இந்திய கிராமிய நடனங்கள், ப.9.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நையாண்டி_மேளம்&oldid=3409410" இலிருந்து மீள்விக்கப்பட்டது