நைட் டெம்பிளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நைட்ஸ் டெம்ப்ளர்
கிறித்துவின் மற்றும் சாலொமோன் கோவிலின் ஏழை உடன் போர்வீரர்கள்
Seal of Templars.jpg
நைட்ஸ் டெம்ப்ளர் முத்திரை
செயற் காலம் c. 1119–1314
பற்றிணைப்பு திருத்தந்தை
வகை மேற்கத்திய கிறித்தவம்
பொறுப்பு கிரிஸ்துவ யாத்ரீகர்களின் பாதுகாப்பு
அளவு உச்சக்கட்டத்தில் 15,000-20,000 உறுப்பினர்கள், அவர்களில் 10% நைட்கள்[1][2]
தலைமையகம் கோவில் மலை, யெரூசலம்
சுருக்கப்பெயர் Order of the Temple
பாதுகாவலர் கிளார்வாக்ஸ் நகரின் பெர்நார்டு
குறிக்கோள் Non nobis Domine, non nobis, sed nomini tuo da gloriam ("எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று; மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்" - தி.பா 115:1)
உடை வெள்ளை கவசத்துடன் கூடிய செஞ்சிலுவை
நற்பேற்று அறிகுறி ஒரு குதிரை மீது சவாரி செய்யும் 2 மாவீரர்கள்
சண்டைகள் சிலுவைப் போர்கள்
தளபதிகள்
முதல் கிராண்ட் மாஸ்டர் Hugues de Payens
கடைசி கிராண்ட் மாஸ்டர் ஜாக் டி மொலே

கிறித்துவின் மற்றும் சாலொமோன் கோவிலின் ஏழை உடன் போர்வீரர்கள் (இலத்தீன்: Pauperes commilitones Christi Templique Salomonici; ஆங்கிலம்: Poor Fellow-Soldiers of Christ and of the Temple of Solomon) என்பது மத்தியகால ஐரோப்பாவின் பலம்மிக்க கிறுத்தவ சமயம் சார்ந்த ஒரு இராணுவ துறவற அமைப்பாகும். இதன் உறுப்பினர்கள் பொதுவாக நைட்ஸ் டெம்பிளர் (Knights Templar) என அறியப்படுகின்றனர். 1129 இல் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வ அனுமதியினை இந்த அமைப்பு பெற்றது. இது சுமார் இரண்டு நூற்றாண்டுகள் நிலைத்து இருந்தது.

இந்த அமைப்பு அமைக்கபட்ட காலத்தில் இருந்து கிறுத்தவ நாடுகளில் வேகமாகப் பிரபலம் அடைந்ததுடன் எண்ணிக்கையிலும் பலத்திலும் வேகமாக வளர்ச்சி அடையத்தொடங்கினர். இவர்கள் வெள்ளை நிறத்திலான உடையும் அதில் சிவப்பு சிலுவை பொறித்ததாகவும் தமது சீருடையை அமைத்துக்கொண்டனர். சிலுவை யுத்தக் காலத்தில் டெம்பிளர்கள் மிகவும் மூர்க்கமான திறமை மிக்கப் படையணியாகப் போரிட்டனர்.

நேரடியாகப் போரில் ஈடுபடாத டெம்பிளர்கள் திறமையான புதுமையான முறைகளில் தமது கட்டுமானத்தை விருத்தியடைய வைத்தமையுடன் இன்றைய நவீன வங்கிமுறைக்கு வழியமைத்தும் கொடுத்தனர். இதைவிட கிறுத்தவ நாடுகள் மற்றும் புனித பூமியிலும் பல கோட்டை கொத்தளங்களைக் கட்டினர்.

டெம்பிளர்களின் இருப்பு சிலுவை யுத்தத்துடன் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கின்றது. புனித பூமி இஸ்லாமியர்களிடம் இழந்தபின்னர் டெம்பிளர் அமைப்பிற்கான ஆதரவு மங்கத் தொடங்கியது. பிரான்சின் ஐந்தாம் பிலிப் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு டெம்பிளர்களை பொய்க் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்து சித்திரவதை செய்து உயிருடன் எரித்துக் கொலை செய்தான். போர்த்துகல் நாட்டில் மட்டும் டெம்பிளர்கள் எந்த வதைப்புக்கும் உட்படுத்தப்படவில்லை. பிலிப்பன் கடுமையான நெருக்கடிக்கு பணிந்து திருத்தந்தை ஐந்தாம் கிளமெண்ட் இவ்வமைப்பை 1312 இல் அதிகாரப்பூர்வமாக கலைத்தார். ஆதலால் போர்த்துக்கல் நாட்டில் டெம்பிளர்கள் கிறித்துவின் போர்வீரர்கள் என்னும் பெயரில் புதிய அமைப்பில் இயங்கினர்.

வரலாறு[தொகு]

எழுச்சி[தொகு]

1099 ல் முதலாம் சிலுவைப்போரில் ஜெருசலேமை மீண்டும் மீட்ட பிறகு, பல கிறித்துவ பக்தர்கள் புனித தலங்களை பார்க்க பயணித்தார். ஜெருசலேம் நகரம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், மற்ற பகுதிகள் அவ்வாறு இல்லை. அவை கொள்ளைக்காரர்கள் நிறைந்த பகுதியாயிருந்தது. சில நேரங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். [3] 1120 ஆம் ஆண்டில், பிரஞ்சு நைட் Hugues டி பேயன்ஸ் ஜெருசலேம் மன்னர் பால்டுவின் II மற்றும் ஜெருசலேமின் முதுபெரும் தலைவர் வார்மண்டை அணுகி இந்த கிறித்துவ யாத்திரீகர்களை காக்கும் ஒரு வம்சாவழி ஒழுங்கை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். மன்னர் பால்ட்வின் மற்றும் வார்மண்ட் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். மேலும் மன்னர் டெம்ப்ளர்களுக்கு கைப்பற்றப்பட்ட அல் அக்சா மசூதியில் உள்ள டெம்பிள் மவுண்ட் ராயல் அரண்மனையில் ஒரு தலைமையகத்தையும் ஒதுக்கினார். [4] டெம்பிள் மவுண்டை சுற்றி ஒரு மாய இருந்தது. ஏனெனில் அது சாலமன் கோவில் இடிபாடுகளுக்கு மேலே இருப்பதாக நம்பப்படுகிறது. [5][6] எனவே சிலுவைப்போர் வீரர்கள் அல் அக்சா மசூதியை சாலமன் கோவில் என குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த இடத்தில் இருந்து தான் அவர்கள் கிறிஸ்து மற்றும் சாலமன் கோவிலின் ஏழை மாவீரர்கள், அல்லது "புனிதவீரர்கள்" என்ற பெயர் பெறுகின்றனர். அவர்கள் சிறு அளவு நிதி ஆதாரங்களை கொண்டுருந்தாலும், வாழ நன்கொடைகளையே நம்பியிருந்தனர். அவர்களின் சின்னமாக ஒற்றை குதிரையில் இரண்டு வீரர்கள் பயனிப்பது இருந்தது. இது அவர்களின் வறுமையை வலியுறுத்தும் விதமாக அமைந்தது. [7]

ஜெருசலேமில் உள்ள கோவில் மலை மீது நைட்ஸ் டெம்ப்ளரின் முதல் தலைமையகம். டெம்ப்ளர்கள் அதை சாலமோனின் கோவில் என்று அழைத்தனர்.

டெம்ப்ளர்களுக்கு இந்த வறிய நிலை நீடிக்கவில்லை. அவர்களுக்கு முன்னணி தேவாலய பிரமுகரான கிளார்வாக்ஸின் புனித பெர்னார்டின் support இருந்தது. அவரது முறையான ஆசியுடன், தேவாலய புனித தலங்களை காக்கும் போருக்கு உதவும் ஆர்வமுள்ள குடும்பங்களிலிருந்து பணம், நிலம், போன்றவற்றை பெற்று, கிறித்துவம் முழுவதும் ஆதரவு பெற்றதாக மாறியது. மற்றொரு முக்கியமான நன்மை 1139 இல் இரண்டாம் போப் Innocent உள்ளூர் சட்டங்களுக்கு கீழ்ப்படிதலில் இருந்து விலக்கு அளித்து ஆணை பிறப்பித்ததாகும். இந்த ஆணை, டெம்ப்ளர்கள் அனைத்து எல்லைகளையும் கடக்க முடியும் என்றும் எந்த வரியும் செலுத்த வேண்டாம் என்றும், போப் ஆண்டவரை தவிர வேறு யாருக்கும் கீழ்ப்படிய வேண்டாம் என்றும் கூறியது. [8] இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் இராணுவமாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் சில உறுப்பினர்கள் மட்டுமே போரிட்டனர். மற்றவர்கள்

போர்வீரர்களுக்கு உதவுவதிலும் நிதி கட்டமைப்பை நிர்வகிப்பதிலும் ஈடுபட்டனர். இந்த அமைப்பில் பங்கேற்கும் ஆர்வம் கொண்ட பிரபுக்கள் அவர் வெளியூர் செல்லும் போது டெம்ப்ளர் நிர்வாகத்தின் கீழ் தனது அனைத்து சொத்துக்களையும் வைத்து செல்வார். கிறித்துவ முழுவதும் இந்த வழியில் செல்வம் சேர்க்கப்பட்டது புனித நில பயணத்திற்கு பக்தர்கள் கடன் பத்திரங்களை உருவாக்குவதை தொடங்கியது. பக்தர்கள், கிளம்புவதற்கு முன்னர் உள்ளூர் டெம்ப்ளரிடம் தங்கள் சொத்துக்களை கொடுத்து தங்கள் வைப்பு மதிப்பை குறிக்கின்ற ஆவணத்தை பெற்றனர். பின்னர் புனித தேசத்தில் வந்து அந்த ஆவணத்தை பயன்படுத்தி தங்கள் நிதிகளை பெற்றனர். இந்த புதுமையான ஏற்பாடானது வங்கிகளின் முந்தைய வடிவமாகவும் காசோலைகள் பயன்பாட்டை ஆதரிக்கின்ற செயலாகவும் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது; மேலும் அது அவர்களை திருடர்களின் இலக்காக இருப்பதில் இருந்து காப்பாற்றி யாத்ரீகர்களின் பாதுகாப்பையும் மேம்படுத்தியது. டெம்ப்ளர்களின் புனித கருவூலத்திற்கும் பங்களித்தது. [5][9] டெம்ப்ளர்களின் நிதிநிலை வலையமைப்புகளை கிறித்துவம் முழுவதும் அமைத்தனர். அவர்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பெரும் நிலப்பரப்புக்களை பெற்றினர்; அவர்கள் பண்ணைகள் மற்றும் திராட்சை தோட்டங்களை நிர்வகித்தனர்; அவர்கள் தேவாலயங்கள் மற்றும் கோட்டைகளை கட்டினர்; அவர்கள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டனர்; அவர்களுக்கென்று பிரத்தியேகமாக கப்பல் தொகுதி இருந்தது; ஒரு கட்டத்தில் அவர்கள் சைப்ரஸ் தீவு முழுமையையும் சொந்தமாக கொண்டிருந்தனர். இதன் மூலம் டெம்ப்ளர்கள் உலகின் முதல் பன்னாட்டு நிறுவனம் என்ற தகுதியை பெற்றனர். [10][11][12]

சரிவு[தொகு]

12 ஆம் நூற்றாண்டின் மத்தியில், முஸ்லீம் உலகம் சலாதீன் போன்ற தலைவர்களின் கீழ் மேலும் ஐக்கியமானது. மேலும் கிறித்தவ பிரிவுகள் மத்தியில் புனித நிலம் தொடர்பாக பிளவு உண்டானது.

அமைப்பு[தொகு]

கைதுகள், குற்றச்சாட்டுக்கள் மற்றும் கலைப்பு[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. Burman, p. 45.
 2. Barber, in "Supplying the Crusader States" says, "By Molay's time the Grand Master was presiding over at least 970 houses, including commanderies and castles in the east and west, serviced by a membership which is unlikely to have been less than 7,000, excluding employees and dependents, who must have been seven or eight times that number."
 3. Burman, pp. 13, 19.
 4. Selwood, Dominic. "Birth of the Order". பார்த்த நாள் 16 திசம்பர் 2013.
 5. 5.0 5.1 The History Channel, Decoding the Past: The Templar Code, 7 November 2005, video documentary written by Marcy Marzuni.
 6. Barber, The New Knighthood, p. 7.
 7. Read, The Templars. p. 91.
 8. Burman, p. 40.
 9. Sean Martin, The Knights Templar: The History & Myths of the Legendary Military Order, 2005. ISBN 1-56025-645-1.
 10. The History Channel, Lost Worlds: Knights Templar, July 10, 2006, video documentary written and directed by Stuart Elliott.
 11. Ralls, Karen (2007). Knights Templar Encyclopedia. Career Press. p. 28. ISBN 978-1-56414-926-8. 
 12. Benson, Michael (2005). Inside Secret Societies. Kensington Publishing Corp.. p. 90. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=நைட்_டெம்பிளர்&oldid=1575383" இருந்து மீள்விக்கப்பட்டது