நேர்விளிம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கோண நேர்விளிம்பு

நேர்விளிம்பு (Straightedge) என்பது நேர்கோடுகளை வரையவோ கோடுகளின் நேர்த்தியைச் சரிபார்க்கவோ பயன்படுத்தப்படும் வளைவுகளற்ற நேரான கருவியாகும்.[1] சம நீள ஆயிடைகளில் அடையாளங்குறிக்கப்பட்ட நேர்விளிம்பானது அளவுகோல் என அழைக்கப்படும்.[2] அளவுகோல்களும் நேர்விளிம்பாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.[3]

ஒளியியல் நேர்விளிம்பான சீரொளிக் கோட்டுமட்டத்தின் மூலமும் கோடுகளின் நேர்த்தி சரிபார்க்கப்படுவதுண்டு.[4]

அமைப்பு[தொகு]

கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகளில் நேர்விளிம்பானது பின்வருவனவற்றுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகள் அனைத்தையும் கவராயத்தை மட்டும் பயன்படுத்தியும் செய்ய முடியும். ஆனால், கவராயத்தின் மூலம் புள்ளிகளை மட்டுமே காண முடியும். நேர்கோடுகளைப் பெறுவதற்கு நேர்விளிம்பு இன்றியமையாததாகும். ஆனால், நேர்விளிம்பை மட்டும் பயன்படுத்தி கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகள் அனைத்தையும் செய்ய முடியாது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்விளிம்பு&oldid=3199503" இலிருந்து மீள்விக்கப்பட்டது