நெஸ்டி ஆயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நெஸ்டி ஆயில் (Neste Oil) ஒரு பின்லாந்தைச் சேர்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தின் முக்கியக் கிளை சிங்கப்பூரில் உள்ளது. இது திரவ எரிபொருள்களை தயாரிக்கிறது.

எண்ணெய்ப் பொருட்களை தயாரித்து, சுத்திகரித்து விற்கிறது. பெற்றோல், டீசல், வானூர்தி எரிபொருள், கப்பல் எரிபொருள், சூடாக்கும் எண்ணெய்கள், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

பின்லாந்தில் 900 சேவை நிலையங்களையும், பிற நாடுகளில் 240 சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பல அறிவுசார் சொத்துரிமைப் பத்திரங்களைப் பெற்றுள்ளது.

யெஸ்ப்பூவில் அமைந்துள்ள நெஸ்டி ஆயில் நிறுவனத்தின் தலைமையகம்

2010 இல், சிங்கப்பூரில் டீசல் தயாரிப்பு நிலையத்தை நிறுவியது. ஆண்டுதோறும் 800,000 டன்களை தயாரித்து உலகின் பெரிய நிறுவனம் என்ற பெருமைக்குரியது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நெஸ்டி_ஆயில்&oldid=1380379" இருந்து மீள்விக்கப்பட்டது