நெம்புருள் இயங்கமைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெம்புருள் இயங்கமைவின் அசைவுப்படம்

நெம்புருள் இயங்கமைவு (Cam Mechanism) ஒரு நேர்த்தொடர்பு இயங்கமைவு (Direct Contact Mechanism). அதாவது, உள்ளிடு உறுப்பும், வெளியிடு உறுப்பும், இடையில் வேறு பாகங்கள் இன்றி நேரடியாக இணைக்கப்பட்ட இயங்கமைவு.

இந்த இயங்கமைவிற்கு, குறைந்த பட்சம்

  1. சட்டகம் அல்லது நிலைக்கண்ணி (Frame or Fixed Link)
  2. உள்ளிடு உறுப்பான நெம்புருள்
  3. வெளியிடு உறுப்பான தொடர்வி (Follower) ஆகிய மூன்று உறுப்புகள் போதும். இது நெம்புருள்-தொடர்வி இயங்கமைவு என்றும் அழைக்கப்படுகிறது.

சீரான சுழற்சியை, சீரற்ற நேர்கோட்டு இயக்கமாக அல்லது சீரற்ற ஊசலாட்ட இயக்கமாக மாற்ற இந்த இயங்கமைவு பயன்படுகிறது. உள்ளிடு, வெளியிடு உறுப்புகள் நேர்த்தொடர்பு உடையதால், வெளியிடு நகர்வு, துல்லிய நகர்வாகக் (Exact/Accurate motion) கிடைப்பது நெம்புருள் இயங்கமைவின் சிறப்பம்சமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெம்புருள்_இயங்கமைவு&oldid=1641226" இலிருந்து மீள்விக்கப்பட்டது