நெகிழிப் பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெகிழிப் பை (ஆங்கிலம்:Plastic bag) என்பது நெகிழி என்ற பல்லுறுப்பியால் உருவாக்கப்பட்ட பை ஆகும். இது பெரும்பாலும் பின்னப்படாமல், மெல்லிய காகிதம் அல்லது துணி போல, வெப்பத்தால் உருக்கி ஒட்டப்பட்டு உருவாக்கப்படும். குறைவாகவே பின்னப்பட்டு உருவாக்கப்படுகின்றன. பசை போன்ற ஒட்டும் தன்மையுள்ள பொருளாலும், இப்பைகள் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. எடை குறைவாக இருப்பதாலும், சூழ்நிலை மாற்றம் எந்த வித தாக்கத்தையும், இவற்றின் மேல் ஏற்படுத்த முடியாதத் தன்மையைப் பெற்றிருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும், பராமரிப்பு எளிமையாலும், இவை வணிகத்தில் சரக்குப் போக்குவரத்துக்கு அதிக அளவில் பயன்படுகின்றன.

வகைகள்[தொகு]

பல்வேறு வகையான அளவுகளிலும், சிறப்புத் தன்மைகளுடனும் நெகிழிப்பைகள் உள்ளன. பொதுவாக, தனிநபர் பயன்பாட்டு அடிப்படையிலும், வியாபார அடிப்படையிலும், இவற்றை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அட்டைப்பெட்டி, மரப்பெட்டி, தகரப் பெட்டி போன்ற பல்வேறு பொட்டலமிடுதல், சிப்பமிடுதல் முறைகளை விட, இப்பைகளினால் குறைந்த அளவினைக் கொண்டு அல்லது மிகக் குறைவான அளவுப் பொருட்களைக் கொண்டு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், பொருள் ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப் படுகின்றது.[1]

பயன்பாட்டின் சீர்கேடு[தொகு]

நிலத்தடி நீர் மட்டம்[தொகு]

நெகிழியாலான பாதுகாப்பு உறை

பெரிய உருவத்தில், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் குளிர்சாதனப் பெட்டி, வளிப் பதனம், துணி துவைப்பி போன்றவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லப்படும் போது, அதிக அளிவில் நெகிழிப்பை மூலங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவைகளின் பொதியங்களில் இருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தப் படுகிறது. அப்பொழுது வீணாகும் நெகிழிக் குப்பைகள் சுற்றுப்புறத்தில் பெருமளவு பாதிப்பை உண்டாக்குகின்றன. ஏனெனில், அவைகளின் மட்காத் தன்மையாலும், நீர் உட்புகாத் தன்மையாலும், அவை உள்ள இடங்களில் நிலத்தடிக்கு செல்லும் நீர், தடையாகிறது. இது பெருமளவு இருப்பதால், அவைகள் உள்ள இடத்தில், நிலத்தடி நீர் மட்டம், மழைக் காலங்களில் அதிகரிக்கப்படுவதில்லை.

ஊடகங்கள்[தொகு]

நெகிழிப்பைகளின் பல்வகையும், அவற்றின் வேறுபட்ட அமைப்பும், பயன்பாடும் காட்சிபடுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Plastic_waste
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Packaging
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Franklin (April 2004). "Life Cycle Inventory of Packaging Options for Shipment of Retail Mail-Order Soft Goods" (PDF). Archived from the original (PDF) on டிசம்பர் 17, 2008. பார்க்கப்பட்ட நாள் December 15, 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help) In June 2009 Germany’s Institute for Energy and Environmental Research concluded that oil-based plastics, especially if recycled, have a better Life-cycle Analysis than compostable plastics. They added that "The current bags made from bioplastics have less favourable environmental impact profiles than the other materials examined" and that this is due to the process of raw-material production.

இக்கட்டுரைகளையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழிப்_பை&oldid=3561005" இலிருந்து மீள்விக்கப்பட்டது