நுண்தூக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்தூக்கம் (microsleep) என்பது ஒருவர் விழித்திருக்கும் வேளையிலே வந்து போகும் கணப்பொழுதுகளே நீடிக்கும் மிகச் சிறிய தூக்கமாகும். இது ஒரு நொடி முதல் அரை விநாடி வரை நீடிக்கலாம்.
[தொகு] காரணங்கள்
- தூக்கமின்மை (insomnia)
- அயர்ச்சி, களைப்பு (fatigue)
- மிகை தூக்கம் (hypersomnia)
- நார்கோலெப்சி
[தொகு] விளைவுகள்
ஒருவர் சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையிலோ, ஆபத்தான இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் வேளையிலோ நுண்துயில் வருமாயின் விளைவுகள் விபரீதமாகி விடும். நுண்துயிலுற்றவர்கள் அது பற்றி அறிய மாட்டார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் விழித்திருந்ததாகவே நம்புவார்கள்.