நீலம் (மணி)
| நீலம் | |
|---|---|
| பொதுவானாவை | |
| பகுப்பு | Mineral Variety |
| வேதி வாய்பாடு | அலுமினியம் ஆக்சைடு, Al2O3 |
| இனங்காணல் | |
| நிறம் | Every color except red (which is ruby) or pinkish-orange (padparadscha) |
| படிக இயல்பு | massive and granular |
| படிக அமைப்பு | Trigonal (Hexagonal Scalenohedral) Symbol (-3 2/m) Space Group: R-3c |
| பிளப்பு | None |
| முறிவு | Conchoidal, splintery |
| மோவின் அளவுகோல் வலிமை | 9.0 |
| மிளிர்வு | Vitreous |
| கீற்றுவண்ணம் | White |
| ஒப்படர்த்தி | 3.95–4.03 |
| ஒளியியல் பண்புகள் | Abbe number 72.2 |
| ஒளிவிலகல் எண் | nω=1.768 - 1.772 nε=1.760 - 1.763, Birefringence 0.008 |
| பலதிசை வண்ணப்படிகமை | Strong |
| உருகுநிலை | 2030–2050 °C |
| உருகுதன்மை | infusible |
| கரைதிறன் | Insoluble |
| பிற சிறப்பியல்புகள் | CTE 5e−6 to 6.6e−6/K |
| Major varieties | |
| Corundum | Any color except red |
| Ruby | Red |
| Emery | Granular |
நீலம் (இரத்தினம்) நவரத்தினங்களுள் ஒன்று. நீலக்கல் என்பது குருந்ததால் ஆனதும் சிவப்பு நிறமல்லாத ஒரு நிறத்தைக் கொண்டதுமான ஒரு இரத்தினக் கல்லைக் குறிக்கும். சிவப்பு நிறமான இரத்தினக்கல் சிவப்புக்கல் அல்லது மாணிக்கம் என அழைக்கக்கப்டும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்க்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும். இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பதுபராசம் அல்லது பதுபராகம் என அழைக்கப்படுகிறது.
இக்கல் நகைகளில் இட்டு பயன்படுத்தப்படுகிறது. நீலக்கல் இயற்கையாக மண்படிவுகளில் கிடைக்கப்பெறுகின்றது. செயற்கையாக செய்யப்பட்ட நீலக்கற்களும் சந்தையில் விற்பனைகுள்ளன. உயர் வண்மையைக் கொண்டுள்ளப் படியால் இலத்திரனியல் கருவிகளில் அகச்சிவப்பு ஒளியில் கூறுகளிலும் நீண்ட நாள் பயன்படும் சாளரங்கள், கடிகார பளிங்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை நீலக்கற்கள் [தொகு]
நீலக்கல், சிவப்புக்கல் என்பன குருந்தக்கல்லின் இரண்டு வகைகளாகும். நீலக்கல் பெரும்பாலும் இது நீல நிறத்தில் இருக்கும்.
நீலம் இலங்கை, மடகாசுகர், பர்மா, கென்யா, அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிசுத்தான் போன்ற பல நாடுகளில் கிடைக்கிறது. 1987 வரை ஆஸ்திரேலியாவிலும் தற்போது மடகாசுகரிலும் அதிக அளவில் நீலம் கிடைக்கிறது. நீலத்தின் மதிப்பு அதன் நிறம், தூய்மை, அளவு, பட்டை மற்றும் அது தோண்டப்பட்ட இடத்தின் மூலத்தை பொறுத்து மாறுபடும்.
வெளி இணைப்புகள் [தொகு]
- தமிழர் வாழ்வோடு இணைந்த நீலம், யாழ்மண்
|
|||||