நீலகிரி பல்லுயிர் வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நீலகிரி பல்லுயிர் வலயம் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரிப் பகுதியில் அமைந்துள்ள ஒர் பன்னாட்டு பல்லுயிர் வலயம் ஆகும். இந்த பல்லுயிர் வலயத்துடன் இணைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி உள்ளமைப்பை (6,000+ கிமீ²) யுனெசுகோ நிறுவனத்தின் உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க ஆய்வு செய்து வருகிறது.[1]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டில் (2537.6 கிமீ²),கர்நாடகாவில் (1527.4 கிமீ²) மற்றும் கேரளாவில் (1455.4 கிமீ²) பரவியுள்ள இந்த பல்லுயிர் வலயத்தின் மொத்தப் பரப்பளவு 5,520 கிமீ² ஆகும். நீலகிரி மேட்டுநிலத்தினை முழுமையாக அடக்கியுள்ளது. இதன் அமைவிடம் 11o 36' லிருந்து 12o 15' N நிலநேர்க்கோட்டுக்குள்ளும் மற்றும் 76o லிருந்து 77o 15' E நிலக்கிடைக்கோட்டுக்குள்ளும் உள்ளது. வலயத்தின் மையப்பகுதியின் அமைவிடம்: 11°30′N, 76°37.5'′E [2]

முதல் உயிர்க்கோள் காப்பகம்[தொகு]

நாம் வாழும் பூமியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வகைகளில் நுண்ணுயிர்கள் முதல் பிரமாண்ட யானை வரையிலான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1986 செப்டம்பர் 1ம் தேதி யுனெஸ்கோ அங்கீகாரம் நீலகிரி மலைக்கு கிடைத்துள்ளது. யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகம் நீலகிரி.

உயிர்க்கோள் மண்டலம்[தொகு]

தமிழகம், கேரளம், கர்நாடகம் என 3 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது இந்த உயிர்க்கோள மண்டலம். இதில், சுமார் 5,560 ச.கி.மீ., பரப்பளவை உள்ளடக்கியுள்ள இந்த மண்டலத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் 2,537 ச.கி.மீ, பரப்பளவையும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே உள்ளிட்ட வனப்பகுதகளில் 1527 ச.கி.மீ. பரப்பளவையும், கேரளத்தில் வயநாடு, அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 14,55 ச.கி.மீ., பரப்பளவையும் உள்ளடக்கியதுதான் இந்த நீலகிரி உயிர்க்கோள் மண்டலம்.

ஆய்வு[தொகு]

இதுகுறித்து கோவை மாவட்டத்தில் உள்ள ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் ஆய்வில், "இந்த உயிர்க்கோள மண்டலத்தில் 100 வகையான பாலூட்டிகள், 50 வகையான பறவைகள், 80 வகையான ஊர்வனங்கள், 39 வகையான மீன்கள், 316 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. அதோபோல 3300 வகையான பூக்கும் தாவரங்களும் உள்ளன. இவற்றில் 1232 வகையான நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் மட்டும் காண கிடைப்பவை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களின் வாழ்விடம்[தொகு]

ஈரப்பதம் நிறைந்த பசுமை மாறா காடுகள், சோலை புல்வெளிகள், இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள், "சவானா' புல்வெளி காடுகள் இங்கு உள்ளன. உலகில் உள்ள 3238 பூக்கும் இனங்களில், சுமார் 135 இனங்கள் இங்கு உள்ளன. பூச்சியுண்ணும் தாவரங்களான, "டொசீரா', "பெல்டேட்டா' போன்றவை, இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்கு உள்ளன. இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அனைத்து பகுதிகளிலும் குறைந்து வரும் சூழலில், நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் முதுமலை, பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் மட்டும் அதிகமாக உள்ளது. அத்துடன் ஒரே வாழ்விடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழ்ந்துவரும் ஒரே பகுதி நீலகிரி உயிர்க்கோள மண்டலம். ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுவதும் அழிந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே அதன் கடைசி வாழ்விடமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த உயிர்க்கோள மண்டலத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே இங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.

பாதுகாக்கப்பட்டப் பகுதிகள்[தொகு]

நீலகிரி மலைகளில் பசுமையான வனப்பகுதியில் ஓடும் சிற்றாறு

முதுமலை வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா (321.1 கிமீ²), வயநாடு வனவிலங்கு உய்வகம்( 344கிமீ²), பந்திப்பூர் தேசியப்பூங்கா(874கிமீ²), நாகரஹோளே தேசியப் பூங்கா (643 கிமீ²), நுகு வனவிலங்கு உய்வகம், முக்கூர்த்தி தேசியப் பூங்கா (78 கிமீ²) மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (89.52கிமீ²) ஆகியன இந்த வலயத்தினுள் அடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகும். தவிர சுற்றுலா மற்றும் வனத்துறைக்குட்பட்ட தமிழக நீலகிரி மாவட்டம் (வடக்கு(448.3 கிமீ²) தெற்கு (198.8 கிமீ²)), ஈரோடு மாவட்டம் (சத்தியமங்கலம் வனப்பகுதியும் (745.9 கிமீ²) ஈரோடு(49.3 கிமீ²)) மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் (696.2 கிமீ²) வனப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.


இந்த வலயத்தின் மேற்குச்சரிவுகளில் கூடுதலாக மழை பெய்து பசுமையான ஈரக்காடுகளும் மற்றும் கிழக்குச்சரிவுகளில் குறைந்த மழை பெறும் உலர்காடுகளும் உள்ளன. ஆண்டுக்கு 500 மிமி முதல் 7000 மிமி வரை மழை பெய்கிறது. இந்த வலயத்தினை மூன்று சுற்றுசூழல் பகுதிகளாகப் பிரிக்கலாம்:

  • தென்மேற்குத் தொடரின் ஈர இலையுதிர்க் காடுகள்
  • தென்மேற்குத் தொடரின் மான்ட்டேன் மழைக்காடுகள்
  • தென் தக்காண மேட்டுநில உலர் இலையுதிர் காடுகள்

இக்காடுகளில் மான்ட்டேன் மழைக்காட்டு மரங்கள்,பசும் ஈரக் காட்டுமரங்கள், முள்மரங்கள்/முற்செடிகள், மான்ட்டேன் புல்வெளிகள், மலையுச்சி ஷோலா காட்டு மரங்களைக் காணலாம்.

வனவிலங்குகள்[தொகு]

இப்பகுதியில் 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவைகள், 80 வகையான ஊர்வன,39 வகையான மீன்கள்,31 வகையான நிலநீர்வாழிகள் வாழ்கின்றன.[3] 316 species of butterflies [4] எண்ணிலடங்கா பூச்சி வகைகளும் காணக்கிடைக்கின்றன.

இங்குள்ள அரிதாகி வரும் விலங்குகள் புலி, ஆசிய யானை, வரையாடு ஆகியன.

தாவரங்கள்[தொகு]

இங்கு பல்வகை தாவரங்கள் அடர்ந்துள்ளன. இங்குள்ள 3300 வகைகளில், 1232 இங்கு மட்டுமே காணப்படுபவை. Baeolepisவகை இங்கு மட்டுமே காணப்படுகிறது. இங்கு மட்டுமே காணப்படும் பிற வகைகள் Adenoon, Calacanthus, Baeolepis, Frerea, Jarodina, Wagotea மற்றும் Poeciloneuron. இங்குள்ள 175 ஓர்கிட் வகைகளில் 8 இவ்வலயத்திற்கே உரியவை. அவற்றில் அரிதாகிவரும் வகைகள்: Vanda, Liparis, Bulbophyllum, Spiranthes மற்றும் Thrixspermum.

மேற்கோள்கள்[தொகு]

  1. UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris.It includes the Mudumalai,Mukurthi,Wayanad and Bandipur national parks retrieved 4/20/2007 World Heritage sites, Tentative lists
  2. Tamil Nadu Forest Department (2007) Wild Biodiversity, reftieved 9/7/2007 NILGIRIS BIOSPHERE RESERVE
  3. Tamil Nadu Forest Department
  4. Mathew George and Kumar M. Mahesh, Directors Note [1]- Chapter 6, STATE OF THE ART KNOWLEDGE ON THE BUTTERFLIES OF NILGIRI BIOSPHERE RESERVE, INDIA, ENVIS Centre, Wildlife Institute of India, retrieved 6/10/2007BUTTERFLIES