நீராற்பகுப்பு மாறிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீராற்பகுப்பு மாறிலி (hydrolysis constant) என்பது நீராற்பகுப்பு வினைக்கான ஒரு சமநிலை மாறிலி ஆகும்.[1]

உதாரணமாக அலுமினியம் குளோரைடு போன்ற உலோக உப்பு நீர்க்கரைசல் ஒன்றில் கரைந்திருக்குமேயானால் அதிலுள்ள உலோக நேர்மின் அயனிக்கள் லூயி அமிலமாக செயல்படுகின்றன. மேலும் கரைசலில் உள்ள நீர் மூலக்கூறுகளை நீராற்பகுப்பு செய்கின்றன.[2]

Al3+ + 2H2O → AlOH2+ + H3O+

இவ்வினையின் நீராற்பகுப்பு மாறிலி பின்வருமாறு காட்டப்படுகிறது.

Kநீராற்பகுப்பு = [H3O+] * [AlOH2+] / [Al3+]

நீராற்பகுப்பு மாறிலியின் பொதுவான மாதிரி படிவம் இவ்வாறு விளக்கப்படுகிறது.

Ka = [H3O+] * [A] / [HA]

இங்கு A என்பது எந்தவொரு காரத்தையும் மற்றும் HA என்பது எந்தவொரு அமிலத்தையும் குறிக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Definition of hydrolysis_constant - Chemistry Dictionary
  2. Research and Education Association. The best test preparation for the GRE Chemistry test., 2000. ISBN 0-87891-600-8. Page 87.
  3. Hydrolysis
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராற்பகுப்பு_மாறிலி&oldid=2697531" இலிருந்து மீள்விக்கப்பட்டது