நிவேதிதா
| சகோதரி நிவேதிதா Sister Nivedita |
|
|---|---|
இந்தியாவில் நிவேதிதா |
|
| பிறப்பு | 28 அக்டோபர், 1867 அயர்லாந்து |
| இறப்பு | அக்டோபர் 13 1911 (அகவை 43) டார்ஜிலிங், மேற்கு வங்காளம், இந்தியா |
சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911),(இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளர் மற்றும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவரால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தவர். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவராவார்.
மகாகவி பாரதியார் இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுவார்.
பொருளடக்கம் |
அவரது சேவைகள் [தொகு]
நவம்பர் 1898ஆம் ஆண்டில் நிவேதிதா வித்தியாலயம் என்னும் பெண்கள் பள்ளியை கல்வியறிவு மறுக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்குமாக துவங்கினார்.[1]
இரவீந்திரநாத் தாகூர், சகதீச சந்திர போசு முதலானவர்களுடன் மிகுந்த நண்பராக இருந்தார். இந்தியாவின் கலை புரிதலுக்கு மிகவும் துணை புரிந்துள்ளார்.
பின்னாளில் அரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். தனது இந்த ஈடுபாட்டினால் ஆங்கில அரசு இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்காமல் இருக்க அவ்வியக்கத்தில் இருந்து தன் அதிகாரபூர்வ பிணைப்பை விலக்கிக் கொண்டார்.
அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மரணமடைந்தார்.
மேலும் படிக்க [தொகு]
- en:wikisource|The Complete Works of Swami Vivekananda/Volume 9/Excerpts from Sister Nivedita's Book
- India’s 50 Most Illustrious Women (ISBN 81-88086-19-3) இந்திரா குப்தா
வெளி யிணைப்புகள் [தொகு]
- வாழ்க்கை வரலாறு
- வாழ்க்கை வரலாறு - சுருக்கம்
- விவேகானந்தரும் நிவேதிதாவும்
- நிவேதிதா தேவியின் அருளுரையும், வங்கப்பிரிவினையால் ஏற்பட்ட எழுச்சியும் பாரதியை ஒரு தீவிரவாதியாக மாற்றின.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Sister Nivedita School". பார்த்த நாள் 2009-03-12.