நிழல் நிஜமாகிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிழல் நிஜமாகிறது
நிழல் நிஜமாகிறது திரைப்பட ஒலிநாடாவின் அட்டைப்படம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புபி. ஆர். கோவிந்தராஜன்
ஜெ. துரைசாமி
திரைக்கதைகே. பாலச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
சரத் பாபு
சுமித்ரா
ஷோபா
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
விநியோகம்கலாகேந்திரா மூவிஸ்
வெளியீடுமார்ச்சு 24, 1978 (1978-03-24)[1]
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிழல் நிஜமாகிறது (Nizhal Nijamagiradhu) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரத் பாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மலையாள மொழியில் வெளியான 'அடிமைகள்' திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

நிழல் நிஜமாகிறது மலையாள மொழியில் வெளியான 'அடிமைகள்' (1969) திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.[4] இந்தப் படத்திற்கான நகைச்சுவை காட்சிகளை மௌலி எழுதியுள்ளார்.[3]

குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷோபா மலையாளம் மற்றும் கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் கே. பாலசந்தர் இயக்கத்தில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் வெளியாக தாமதமானதால் காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் 1978 பிப்ரவரி 4ல் வெளியான 'அச்சாணி' தான் கதாநாயகியாக வெளிவந்த ஷோபாவின் முதல் தமிழ் படம் என அறியப்படுகிறது.[2][5] சிறு வேடங்களில் நடித்து வந்த சரத் பாபு இப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

பாடல்கள்[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் இசையமைக்கப்பட்டு அனைத்து பாடல் வரிகளும் கண்ணதாசன்னால் எழுதப்பட்டுள்ளது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது.[6]

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "கம்பன் ஏமாந்தான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 4:25
2 "இலக்கணம் மாறுதோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 4:27

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nizhal Nijamagiradhu (1978)". Screen4screen. Archived from the original on 7 சூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2021.
  2. 2.0 2.1 "'ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 23 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. 3.0 3.1 "இந்த ஏகலைவனுக்கு அவர்தான் துரோணர்: இயக்குநர் மவுலி". இந்து தமிழ். 25 டிசம்பர் 2014. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/24845-.html. பார்த்த நாள்: 8 சூலை 2021. 
  4. "சினிமா ஸ்கோப் 27: வெள்ளித்திரை". இந்து தமிழ். 16 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "திக் திக் நிமிடங்களை தித்திக்க வைத்த இளையராஜா". குங்குமம். 26 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்', 'ராதா காதல் வராதா?', 'அவள் ஒரு நவரச நாடகம்', 'பொட்டுவைத்த முகமோ', 'தேன்சிந்துதே வானம்', 'நந்தா நீ என் நிலா'; - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள்". இந்து தமிழ். 25 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழல்_நிஜமாகிறது&oldid=3660340" இலிருந்து மீள்விக்கப்பட்டது