நிறுவன வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறுவன வரி அல்லது வாணிபக்கழக வரி (Corporate Tax or Company Tax or Corporation Tax); என்பது உலக அளவில் தொழில், வணிகம் மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கும் மொத்த லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும். நிறுவன வரி விகிதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.[1]

இந்தியாவில் நிறுவன வரி[தொகு]

இந்தியாவில் இலாப நோக்கத்துடன் செயல்படும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழில், வணிகம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் ஈட்டும் மொத்த இலாபத்தின் (Gross Profit) மீது, இந்திய வருமானவரிச் சட்டம், 1961இன் படி விதிக்கப்படும் வரியே நிறுவன வரி அல்லது கார்ப்பரேட் வரி ஆகும்.[2] இவ்வரி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படும், வருமானவரித் துறை மூலம் வசூலிக்கப்படுகிறது.

மொத்த இலாபம் பத்து கோடிக்கு மேல் ஈட்டும் நிறுவனங்களுக்கு, தற்போது நிறுவன வரியாக 33.99 விழுக்காடும், குறைந்த பட்ச நிறுவன வரியாக 20.96 விழுக்காடு நிறுவன வரி வசூலிக்கப்படுகிறது. நிறுவன வரி மீது கூடுதல் வரி (surcharge), மற்றும் கல்வி வரியும் (Education Cess) வசூலிக்கப்படுகிறது.[3] சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அரசு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிறுவன வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://taxfoundation.org/article/corporate-income-tax-rates-around-world-2014
  2. "DIRECT AND INDIRECT TAXES" (PDF). Archived from the original (PDF) on 2016-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
  3. http://timesofindia.indiatimes.com/budget-2015/you-taxes-2015/Times-guide-to-corporate-tax/articleshow/38173735.cms

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறுவன_வரி&oldid=3560817" இலிருந்து மீள்விக்கப்பட்டது