நிறுத்துத் திறன் (துகள் கதிர்வீச்சு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறுத்துத் திறன் (Stopping power) என்பது அணு இயற்பியலில், மின்னூட்டம் பெற்ற ஒரு துகள் ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் போது செயல்படும் எதிர்ப்பு விசையால் அதன் மின்னூட்டத்தை இழப்பதாகும். இது அணுக்கரு மருத்துவம் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]

வரையறை[தொகு]

ஊடகத்தின் வழியே செல்லும்போது, மின்சுமையற்ற பொருட்களும் ஆற்றலை இழக்கின்றன. ஆனால் நிறுத்துத் திறனானது மின்னூட்டம் பெற்ற துகளின் ஆற்றல் இழப்பை மட்டுமே குறிக்கிறது. நேர் மின்னூட்டம் பெற்ற ஒரு துகள் அலகு தூரம் செல்லும் போது அத்துகள் இழக்கும் ஆற்றல் அத்துகளின் நிறுத்துத் திறன் (எண்ணளவில்) என வரையறுக்கப்படுகிறது.

இங்கு எதிர்குறியானது ஆற்றல் இழப்பைக் குறிக்கிறது. எனவே நிறுத்துத் திறன் நேர்குறி மதிப்பைப் பெறும். மின்னூட்டம் கொண்டத் துகள் ஒரு கிராம்/செமீ2 தூரம் செல்லும் போது இழக்கும் ஆற்றல் அந்த ஊடகத்தின் நிறை நிறுத்துத் திறன் (Mass stopping power) எனப்படும்.

உசாத்துணைகள்[தொகு]

  1. ICRU Report 73: Stopping of Ions heavier than Helium, Journal of the ICRU, 5 No. 1 (2005), Oxford Univ. Press ISBN 0-19-857012-0