நியான்
| நியான் | |||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
10Ne
|
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
| தோற்றம் | |||||||||||||||||||||||||
| colorless gas exhibiting an orange-red glow when placed in a high voltage electric field Neon gas in a discharge tube, so-called neon light. Spectral lines of neon in the visible region |
|||||||||||||||||||||||||
| பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
| பெயர், குறியீடு, எண் | நியான், Ne, 10 | ||||||||||||||||||||||||
| உச்சரிப்பு | /ˈniːɒn/ | ||||||||||||||||||||||||
| தனிம வகை | நிறைம வளிமம் | ||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 18, 2, p | ||||||||||||||||||||||||
| நியம அணு நிறை (அணுத்திணிவு) |
20.1797(6) | ||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு | 1s2 2s2 2p6 2, 8 |
||||||||||||||||||||||||
| வரலாறு | |||||||||||||||||||||||||
| முன்னூகிப்பு | W. Ramsay (1897) | ||||||||||||||||||||||||
| கண்டுபிடிப்பு | W. Ramsay & M. Travers[1] (1898) | ||||||||||||||||||||||||
| First isolation | W. Ramsay & M. Travers[2] (1898) | ||||||||||||||||||||||||
| Invention of neon lighting | Georges Claude (1910) | ||||||||||||||||||||||||
| இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||
| நிலை | வளிமம் | ||||||||||||||||||||||||
| அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 0.9002 g/L |
||||||||||||||||||||||||
| திரவத்தின் அடர்த்தி கொ.நி.யில் | 1.207[3] g·cm−3 | ||||||||||||||||||||||||
| உருகுநிலை | 24.56 K, -248.59 °C, -415.46 °F | ||||||||||||||||||||||||
| கொதிநிலை | 27.07 K, -246.08 °C, -410.94 °F | ||||||||||||||||||||||||
| மும்மைப் புள்ளி | 24.5561 K (-249°C), 43[4][5] kPa | ||||||||||||||||||||||||
| மாறுநிலை | 44.4 K, 2.76 MPa | ||||||||||||||||||||||||
| உருகலின் வெப்ப ஆற்றல் | 0.335 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
| வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 1.71 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை | 5R/2 = 20.786 J·mol−1·K−1 | ||||||||||||||||||||||||
| ஆவி அழுத்தம் | |||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
| ஒக்சியேற்ற நிலைகள் | 1, 0 | ||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 2080.7 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
| 2வது: 3952.3 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
| 3வது: 6122 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
| பங்கீட்டு ஆரை | 58 pm | ||||||||||||||||||||||||
| வான்டர் வாலின் ஆரை | 154 pm | ||||||||||||||||||||||||
| பிற பண்புகள் | |||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | face-centered cubic | ||||||||||||||||||||||||
| காந்த சீரமைவு | diamagnetic[6] | ||||||||||||||||||||||||
| வெப்ப கடத்துத் திறன் | 49.1x10-3 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||
| ஒலியின் வேகம் | (gas, 0 °C) 435 m·s−1 | ||||||||||||||||||||||||
| பரும தகைமை | 654 GPa | ||||||||||||||||||||||||
| CAS எண் | 7440-01-9 | ||||||||||||||||||||||||
| மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||
| முதன்மைக் கட்டுரை: நியான் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
நியான் என்பது ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Ne. அணு எண் 10. அண்டத்தில் பொதுவாகக் காணப்படும் தனிமம் இதுவே. ஆனாலும் புவியில் அரிதாகவே கிடைக்கிறது.[7] இது ஒரு மந்த வளியாகும். நியான் விளக்குகளில் வெற்றிடத்தில் இதனைச் சூடேற்றும் போது சிவந்த நிறத்துடன் ஒளிர்கிறது. இது பொதுவாக காற்றில் இருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. மந்த வளிமமான நியான் வளிமண்டலக் காற்றில் 65000 ல் ஒரு பங்கே உள்ளது..[8] ஹீலியம், கிரிப்பிடான்,செனான் போன்ற வளிமங்களின் செழுமை இதை விடக் குறைவு. வளி மண்டலக் காற்றை நீர்மமாக்கி, பகுதிக் காய்ச்சி வடித்தல் மூலம் அதிலுள்ள கூறுகளைத் தனித்துப் பிரித்தெடுத்து விடுகின்றனர். இந்த வழிமுறையை வெற்றிகரமாகச் செய்து 1898 இல் நியான், ஆர்கன், கிரிப்ட்டான், செனான் போன்ற மந்த வளிமங்களை அடுத்தடுத்துக் கண்டுபிடித்தவர்கள் சர் வில்லியம் ராம்சே (Sir William Ramsay:1852–1916) மோரிஸ் டபிள்யூ டிராவர்ஸ் (Morris W. Travers:1872–1961) என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர்களாவர்.[9] கிரேக்க மொழியில் நியோஸ் என்றால் புதிய என்று பொருள். அச் சொல்லே இதற்குப் பெயர் தந்தது.[10]
பண்புகள் [தொகு]
Ne என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய நியானின் அணுவெண் 10,அணு எடை 20.18, அடர்த்தி 0.839கிகி/கமீ. இதன் உறை நிலையும், கொதி நிலையும் முறையே 24.55 K, 27.05 K ஆகும். இது மந்த வளிமம் என்றும் வேதிவினைகளில் ஈடுபடாது என்றும் சொல்லப்பட்டாலும் புளூரினுடன் சேர்ந்து கூட்டுப்பொருளை உற்பத்தி செய்கிறது என்பதை சோதனைக் கூடத்தில் மெய்ப்பித்துள்ளனர். நிலையற்ற ஹைட்ரேட்டுக்களை நியான் உண்டாகுகிறது. Ne2+, (NeAr)+, (NeH)+ மற்றும்(NeHe)+ போன்ற அயனிகளை நிற மற்றும் நிறமாலை மானிகளின் ஆய்வில் அறிந்துள்ளனர்.[3]
பயன்கள் [தொகு]
வெற்றிட மின்னிறக்க குழாயில், சிவப்பு-ஆரஞ்சு கலந்த ஒளியைத் தருகிறது. மந்த வளிமங்களில் நியான் வழி செய்யப்படும் மின்னிறக்கமே சாதாரண மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட நிலையில் செறிவு மிக்க ஒளியைத் தருகிறது. இதனால் இது விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்த ஏற்புடையதாய் இருக்கிறது.[11][12][13] இடிதாங்கி, உயர் மின்னழுத்தம் காட்டி,[4] தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல சாதனங்களில் நியான் வழி மின்னிறக்கம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.[14][15] [16] நியானும் ஹீலியமும் சேர்ந்த வளிம நிலை ஊடகம் லேசராகப் பயன்தருகிறது. இதில் நியானும் ஹீலியமும் 1:10 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும்.
முதலில் ஹீலியம் மின்னிறக்கக் குழாயில் வெளிப்படும் ஏலக்ட்ரான்களோடு மோதி கிளர்ச்சியுறுகிறது. இது பின்னர் மீட்சியிலா மோதலினால் நியானுக்குக் கிளர்ச்சியாற்றலை பரிமாற்றம் செய்கிறது. நியானின் கிளர்ச்சியாற்றலும், ஹீலியத்தின் கிளர்ச்சியாற்றலும் மிக நெருக்கமாகச் சமமாக இருப்பதால், ஆற்றல் பரிமாற்றம் முழுமையானதாக இருக்கிறது. வெளியீட்டுத்திறன் அதிகமாக இருப்பதால் இது திறந்த வெளியில் செய்திப் பரிமாற்றத்திற்கும், முப்பரிமான ஒளிப்படப்பதிவுகளுக்கும்(holograms) பயன்படுகிறது. நீர்ம நிலையில் பொருளாதாரச் சிக்கனமிக்க மிகச் சிறந்த குளிரூட்டியாக உள்ளது. நியானின் குளிரூட்டும் திறன் ஹீலியத்தை விட 40 மடங்கு அதிகமாகவும், ஹைட்ரஜனை விட 3 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது.[17]
குறிப்புகள் [தொகு]
- ↑ Ramsay, William, Travers, Morris W. (1898). "On the Companions of Argon". Proceedings of the Royal Society of London 63 (1): 437–440. doi:10.1098/rspl.1898.0057.
- ↑ "Neon: History". Softciências. பார்த்த நாள் February 27, 2007.
- ↑ 3.0 3.1 Hammond, C.R. (2000). The Elements, in Handbook of Chemistry and Physics 81st edition. CRC press. p. 19. ISBN 0849304814. http://www-d0.fnal.gov/hardware/cal/lvps_info/engineering/elements.pdf.
- ↑ 4.0 4.1 Preston-Thomas, H. (1990). "The International Temperature Scale of 1990 (ITS-90)". Metrologia 27: 3–10. doi:10.1088/0026-1394/27/1/002. Bibcode: 1990Metro..27....3P. http://www.bipm.org/en/publications/its-90.html.
- ↑ "Section 4, Properties of the Elements and Inorganic Compounds; Melting, boiling, triple, and critical temperatures of the elements". CRC Handbook of Chemistry and Physics (85th edition ed.). Boca Raton, Florida: CRC Press. 2005.
- ↑ Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
- ↑ Dickin, Alan P (2005). "Neon". Radiogenic isotope geology. p. 303. ISBN 978-0-521-82316-6. http://books.google.com/?id=z8ZCg2HRvWsC&pg=PA303.
- ↑ Morse, David (January 26, 1996). "Galileo Probe Science Result". Galileo Project. பார்த்த நாள் February 27, 2007.
- ↑ Ramsay, William, Travers, Morris W. (1898). "On the Companions of Argon". Proceedings of the Royal Society of London 63 (1): 437–440. doi:10.1098/rspl.1898.0057.
- ↑ "Neon: History". Softciências. பார்த்த நாள் February 27, 2007.
- ↑ Coyle, Harold P. (2001). Project STAR: The Universe in Your Hands. Kendall Hunt. pp. 464. ISBN 978-0-7872-6763-6. http://books.google.com/?id=KwTzo4GMlewC&pg=PA127.
- ↑ Kohmoto, Kohtaro (1999). "Phosphors for lamps". in Shionoya, Shigeo; Yen, William M.. Phosphor Handbook. CRC Press. pp. 940. ISBN 978-0-8493-7560-6. http://books.google.com/?id=lWlcJEDukRIC&pg=PA380.
- ↑ Mangum, Aja (December 8, 2007). "Neon: A Brief History". New York Magazine. http://nymag.com/shopping/features/41814/.
- ↑ Myers, Robert L. (2002). Display interfaces: fundamentals and standards. John Wiley and Sons. pp. 69–71. ISBN 978-0-471-49946-6. http://books.google.com/books?id=ilHvFwoAZDMC&pg=PA69. "Plasma displays are closely related to the simple neon lamp."
- ↑ Weber, Larry F. (April 2006). "History of the plasma display panel". IEEE Transactions on Plasma Science 34 (2): 268–278. doi:10.1109/TPS.2006.872440. Bibcode: 2006ITPS...34..268W. Paid access.
- ↑ "ANSI Luminous Tube Footage Chart". American National Standards Institute (ANSI). பார்த்த நாள் 2010-12-10. Reproduction of a chart in the catalog of a lighting company in Toronto; the original ANSI specification is not given.
- ↑ "NASSMC: News Bulletin" (December 30, 2005). பார்த்த நாள் March 5, 2007. [தொடர்பிழந்த இணைப்பு]
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||